
வெற்றியாளர்கள் எவரால் சமூகமும் உலகமும் முன்னேறுகிறதோ அவர்கள்தான் செயல்வீரர்கள். கிளர்ச்சியே இல்லாமல் மந்த உணர்வோடு ஒதுங்கி நிற்பவர் எவரும் தலைமைப் பண்பை ஏற்றதாக சரித்திரம் இல்லை. செயலில் இறங்குபவரும் செயல்பாட்டில் நம்பிக்கை வைப்பவருமே பிறரும் தன்னைத் தொடர்வதில் ஊக்கம் காட்டுவதைப் பார்க்கிறார்.
செயல்பாட்டில் இறங்குபவர் மீது மக்கள் அக்கறை கொள்கிறார்கள். நம்பிக்கை வைக்கிறார்கள். அவர்களே வெற்றியாளர்களாக இருக்கிறார்கள் அவர்கள் கடைப்பிடித்த எட்டு சூத்திரங்கள் குறித்து காண்போம்.
1.செயலில் துடிப்புடன் இறங்குபவராக இருங்கள்.செயல்களைச் செய்பவராக இருங்கள். எப்பொழுதும் முயற்சியை மேற் கொள்ளுபவராக இருங்கள். 'சரிதான்! அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்போக்கு இல்லாதவராக இருங்கள்.
2.நிலைமைகள் சீரடையட்டும் என்று காத்திருக்க வேண்டாம். அவை என்றைக்கும் முழுமையாக சீரடையப் போவதில்லை. எதிர்காலத்திலும் முட்டுக்கட்டைகளும் பிரச்சினைகளும் எழுந்து கொண்டேதான் இருக்கும் என்று எதிர்பாருங்கள். அவை எழ எழ அவற்றைத் தீர்க்க முயற்சி எடுத்துக்கொண்டே இருங்கள்.
3. வெறும் யோசனைகள் மட்டும் வெற்றிகளைக் கொண்டு வராது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். யோசனைகளை நிறைவேற்ற முனைந்தாலே அவற்றிற்கு மதிப்பு உருவாகும்.
4.செயல்பாட்டில் இறங்கினாலே பயங்கள் போய்விடுகின்றன. இந்த வழிமுறையை உபயோகித்து செயல்பாட்டில் இறங்குதலை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நம்பிக்கையை உடனே வர வழைக்கும் வழி இதுதான். இதை முயற்சித்துத்தான் பாருங்களேன்.
5. உங்கள் மன-இஞ்சினை இயந்திரத்தனமாக இயக்கிப் பாருங் கள். எங்கிருந்தோ உணர்வு வந்து இயக்கவேண்டும் என்று காத்தி ருக்க வேண்டாம். உடனுக்குடன் செயலில் இறங்குங்கள். உங்களை ஊக்குவிக்கும் உணர்வு தானாக மேலிடுவதைப் பார்ப்பீர்கள்.
6. இன்று, இப்பொழுது, இக்கணம் என்ற உந்துதல் வார்த்தையை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நாளை, அடுத்த வாரம், பிறகு போன்றவை எல்லாம் தோல்வியின் மாறுபாடுகள். "நாள் இப்பொழுதே, இக்கணமே செயலில் இறங்குகிறேன்" என்று சொல்லிக்கொள்ளத் தகுந்தவராக இருங்கள்.
7.கையில் எடுத்துக்கொண்ட பணியை குறித்த நேரத்தில் உடனே தாமதம் செய்யாதீர்கள். உடனுக்குடன் செயலில் முனையுங்கள். செய்து முடிக்க முனையுங்கள். தயார் செய்து கொள்வதில் காலதாமதம் செய்யாதீர்கள் உடனுக்குடன் செயலில் முனையுங்கள்.
8. கிடைக்கும் சந்தர்ப்பத்தை விடாப்பிடியாக பற்றிக் கொள்ளுங்கள். போராடுபவராக இருங்கள். தன்னார்வ செயலராக இருங்கள். உங்களுக்கு உரிய ஆற்றலும், உயரவேண்டும் என்ற கிளர்ச்சியும் உண்டு என்பதை நிரூபியுங்கள்.
கிளர்ந்து எழுந்து செயலில் இறங்கி வெற்றியடைய வாழ்த்துக்கள்.