குளோசோஃபோபியா என்ற பயத்தை போக்குவது எப்படி?

Glossophobia
Glossophobia
Published on

ஒரு மனிதன் வெற்றியாளராக மாற நிறைய பண்புகள் தேவைப்படுகின்றன. மனிதனுடைய நற்பண்புகளே அவனை வெற்றியாளராக உருவாக்குகிறது. வெற்றியாளராக வேண்டுமென்றால் நமக்கு நல்ல பேச்சுத்திறமையும் இருக்க வேண்டும். பேச்சு என்பது ஒரு கலையாகும். இது நூல்கள் பல கற்பவர்களுக்கே அரிய பொக்கிஷமாக அமைகிறது.

பொது வெளியில் பேசும்போது ஏற்படும் பதட்டமும் பயப்படும் தன்மையையும் மருத்துவத்துறையில் குளோசோஃபோபியா என குறிப்பிடுகிறார்கள். இந்த பயத்தின் போது கைகால் நடுக்கம் குரலில் நடுக்கம் அதீத பதட்டம் ஆகியவை ஏற்படும்.

இவ்வகை ஃபோபியா இருப்பவர்கள் மேடையில் பேசும் போது முக்கியமானதை சொல்ல மறந்துவிடுவோமோ அல்லது தவறாகப் பேசிவிடுவோமோ என்று பயப்படுவார்கள்.

பேசப்போகும் தலைப்பை நன்கு அறிந்துகொண்டும் புரிந்துகொண்டும் பேசவேண்டும். முக்கிய குறிப்புகளை குறிப்பு எடுத்துக்கொண்டு பேசும்போது தன்னம்பிக்கையுடன் பேசமுயும். இவர்கள் பேசப்போவதற்கு முன் ஒருமுறை கண்ணாடி முன் நின்று பேசிப்பார்ப்பது நல்லது. பேச வேண்டிய பேச்சை பலமுறை பயிற்சி செய்வது நமது நம்பிக்கையை உயர்த்தும். நமது குரல் மற்றும் தொனியைக் கேட்டு அதற்கேற்ப மாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டும். மேலும் ஒரு நம்பகமான நண்பருக்கு முன்பாகவும் நாம் பயிற்சி செய்யலாம்.

நாம் மேடையேறும் முன்னர் நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஆழமாக சுவாசிக்கவும் வேண்டும். நாம் ஒரு சிறந்த பேச்சை வழங்கப் போவதாக கற்பனை செய்துகொண்டு பேசத்தொடங்கினால் நம்மிடம் உள்ள எதிர்மறை சிந்தனைகளை விலக்கி வைக்கமுடியும்.

எதைக் கொட்டினாலும் அள்ளி விடலாம். ஆனால் வார்த்தையைக் கொட்டினால் அள்ள முடியாது. உலகிலேயே பயங்கரமான ஆயுதம் நாக்குதான். இதனால் தான் நம்முடைய நாக்கை பற்கள் அரண்போல் அமைந்து மணிநேரமும் காவல் காக்கின்றன.

இதையும் படியுங்கள்:
பயம், தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்கலாமே!
Glossophobia

ஒரு பிரச்னைக்கு காரணமாக இருப்பது பேச்சே. அதே பிரச்னைக்கு தீர்வு காணப்படுவதும் பேச்சு மூலமே. எத்தனையோ பிரச்னைகள் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்து வைக்கப்படுகின்றன. ஒருவரது கனிவான பேச்சு பகைவரை கூட நட்பு பாராட்ட வைக்கும்.

பேச்சில் சாதாரண பேச்சு, மேடை பேச்சு என இருவகை உண்டு. பக்கம்பக்கமாக எழுதி உணர்த்துவதை காட்டிலும் எளிய முறையில் உணர்த்துவதே பேச்சாகும். மேடைப் பேச்சுக்கு கருத்துகளே உயிர்நாடி என்றாலும் கருத்துகளை வெளிப்படுத்த மொழி இன்றியமையா இடம் பிடிக்கிறது. நாம் பேசும் பேச்சு வெற்றி பெற வேண்டும் என்றால் வலிமையான கருத்து இருத்தல் வேண்டும். பேச்சாளரின் கருத்து கேட்பவர்களின் நெஞ்சங்களில் தேன் போன்று பாய்தல் வேண்டும். ஒரு வாசகம் ஆயினும் திருவாசகமாய் பேச வேண்டும்.

பேசும் பொருளை ஒழுங்கு முறைபடுத்தி தொடக்கம் கருத்துரை முடிவு என பகுத்து பேசுவதையே பேச்சுமுறை என்கிறோம். இதனை எடுத்தல் தொடுத்தல் முடித்தல் என்றும் கூறலாம்.

பேச்சை தொடங்குவது எடுத்தல். பேச்சின் தொடக்கம் நன்றாக இருக்காவிட்டால் கேட்பவர்களுக்கு பேச்சு குறித்த நல்லெண்ணம் தோன்றாது. தடங்கலின்றி பேச தொடங்குவதே நல்ல அடித்தளமாகும்.

இதையும் படியுங்கள்:
The Paradox of Fear: பயம் என்ன செய்யும் தெரியுமா? 
Glossophobia

தொடக்கவுரைக்கு பிறகு பொருளை விவரித்து பேசும் முறை தொடுத்தல். நாம் சொல்ல வேண்டிய கருத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்க வேண்டும்.

பேச்சின் கருத்தை சுருங்கக் கூறி முடித்தல், உணர்ச்சியை தூண்டும் வகையில் கூறி முடித்தல், பாராட்டி முடித்தல், பொருத்தமான கவிதை ஒன்றை கூறி முடித்தல் என முடிக்கும் முறைகள் பல உள்ளன. சிறந்த பேச்சாளர் எப்படி முடித்தாலும் அது அழகாகவே இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com