பெற்றோர்களே! உங்க பிள்ளையின் விளையாட்டு ஆர்வத்தை வெற்றியாக மாற்றணுமா?

பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கத் தேவையான விஷயங்களில் அவர்கள் கவனமும், மனமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
Champions march with pride and joy with their parents
Champions march with pride and joy with their parentsImg credit; AI Image
Published on

தங்கள் பிள்ளைகள் விளையாட்டுக்களின் மேல் உள்ள ஆர்வத்தால் முயற்சி செய்து முன்னேறி மாநிலம் தாண்டி, தேசிய அளவில் வென்று, உலகம் வியக்க உயர்ந்து பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற நினைக்கும் பெற்றோர்கள், கடின உழைப்பு மட்டுமே போதும் என நினைக்கிறார்கள்.

வெற்றி கை வசமாக, 'சரி எது.. தவறு எது.. எனப் புரிந்து செயல்படுதல், நேரத்தை கடைபிடித்தல், முழு ஈடுபாடு, ஆரம்பத்தில் சந்திக்கும் தோல்விகளால் துவளாமல், விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுதல்' இவை மிகமிக முக்கிய மென்றாலும் சில மெனக்கெடல்களால் சுலபமாகும்.

பயிற்சிக்கு செல்லும் போது, அந்த விளையாட்டிற்குரிய ஆடைகளையே அணிந்து செல்ல வேண்டும். கலந்து கொள்ளும் விளையாட்டிற்குத் தோதாக, உடைகள் மாறுபடும் அல்லவா?. முந்தைய நாளே அவற்றை தயாராக எடுத்து வைத்து விட்டால், கிளம்பும் போது, டென்சன் குறையும்.

பயிற்சி முடிந்து இல்லம் வந்த பின், அந்த உடைகளை துவைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். அழுக்கு படியவில்லையே என உலர வைத்து அணியும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. அதன் வியர்வை வாடை மறுநாள் பயிற்சியில் முழுமையாக ஈடுபட விடாது என்பதே உண்மை.

பயிற்சியின் போது, உற்சாகப் படுத்த பானங்கள், நீர் போன்ற திரவங்களை அருந்தும் போது, நிதானமாக குடிப்பது சுவாசத்திற்கு நல்லது. பயிற்சி என்பது மணிக்கணக்கில் இருக்கும். முடிந்தவுடன் அவசரமாகக் கிளம்பாமல், சிறிது நேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்தி விட்டு நகர வேண்டும்.

பயிற்சியின் போது, சிறு சிறு காயங்கள் ஏற்படலாம். குணமடைந்த பின் பயிற்சிக்கு செல்லவும். இடைவெளி இருந்தால் பரவாயில்லை. ஆரோக்கியம் முக்கியம். சுவரை வைத்துத் தான் சித்திரம் என்பதை மறந்து விடக்கூடாது. தேகம் தெம்பாக இருந்தால் தான் முழு ஈடுபாடும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பேசுவது எப்படி? பெர்னாட்ஷாவின் வித்தை!
Champions march with pride and joy with their parents

அது போல், காய்ச்சல் போன்ற நோயால் சிரமப்படும் போது, பயிற்சிக்கு விடுமுறை கொடுப்பது சாலச் சிறந்தது. போவேன் என அடம் பிடிக்கும் பிள்ளைகளை சமாதானப் படுத்துவது பெற்றோர் கடமை. அந்த சமயங்களில் முழு ஓய்வு தேவை.

தடங்கலில்லா இரவு உறக்கம் அவசியம். நீண்ட நேரம் கண்விழிப்பது வேண்டாம். தூங்கும் போது தான் உடலின் வெளி உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கும். அது, மறுநாள் பயிற்சியின் போது உத்வேகத்தைக் கூட்டும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். இயங்கவிடாமல் மந்தமாக்கும் ஹெவியான உணவுகளை பயிற்சிக்கு முன் ஒதுக்குவதே உத்தமம். உடல் எடையை அதிகரிக்கும் துரித உணவுகளுக்கும் தடை போடணும்.

இறுதியாக, அதி முக்கியமான விஷயம் பெற்றோர்களுக்கானது. நேரமில்லை எனச் சொல்ல வைக்குமளவு நிறைய வேலை இருந்தாலும், வருங்கால சாதனையாளர்களுக்காக பெற்றோர் தினசரி குறைந்தது அரை மணி நேரமாவது செலவிட வேண்டும். அன்றைய பயிற்சியில் கற்றுக் கொண்டது பற்றிக் கேட்டு, மேலும் மெருகேறி, முன்னேற டிப்ஸ் தரலாம். உடன் வரும், மற்ற விளையாட்டு வீரர்களுடன் தங்கள் பிள்ளைகளின் இணக்கம் பற்றி விசாரித்து தேவைப்பட்டால் அறிவுரை சொல்ல வேண்டும்.

வளர்ந்த பெண் குழந்தைகள் பருவமடையும் வயது வரும்பொழுது ஆயத்தப் படுத்தி, இயல்பாக இருக்கிறார்களா? எனக் கேட்டால் நல்லது. டீன்ஏஜ் பெண்பிள்ளைகளின் பிரீயட்ஸ் பற்றி அவ்வப்போது, சந்தேகம் இருந்தால் தெளிவாக்க வேண்டும். பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கத் தேவையான விஷயங்களில் அவர்கள் கவனமும், மனமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். புத்திமதியை புகட்ட வேண்டும். அடை மழைபோல் கொட்டக் கூடாது.

அப்புறமென்ன இனியெல்லாம் வெற்றியே...

ஆல் தி பெஸ்ட்...

புறப்படட்டும்.....! சாதனையாளர்களின் அணிவகுப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com