ஆழ்மனதை உபயோகித்து இல்லற பிரச்னைகளைத் தீர்ப்பது எப்படி?

How to solve  problems?
Lifestyle articles
Published on

னத்தின் விதியையும் ஆன்மீக விதியையும் பற்றிய அறியாமைதான் இல்லறத் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம். இணைந்து பிரார்த்திப்பது  பிரியாது இருப்பதற்கு வழிவகுக்கும்.

திருமணம் என்பது அன்பால் பிணைக்கப்பட்டுள்ள ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணின் சங்கமம். அவர்களுடைய இதயங்கள் இரண்டும் ஒரே இதயம்போல் துடிக்கின்றன. அவர்கள் முன்னோக்கியும், மேல்நோக்கியும், கடவுளை நோக்கியும் பயணிக்கின்றனர்

திருமணம் மகிழ்ச்சிக்கான உத்தரவாதம் அல்ல. கடவுளின் அழிவில்லா உண்மைகள் மற்றும் வாழ்வின் ஆன்மீக மதிப்புகளில் வாழ்வதன் மூலம் மக்கள் மகிழ்ச்சியைக் கண்டறிகின்றனர். பிறகு, ஆணும், பெண்ணும் ஒருவருக் கொருவர் அடுத்தவரின் மகிழ்ச்சிக்கும், பேரானந்தத்திற்கும் பங்களிக்கின்றனர்.

ஒருவர் தேடும் வாழ்க்கைத் துணையில் எவையெல்லாம் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவற்றை ஒத்தவற்றை மனப்போக்கில் உருவாக்க வேண்டும். அவர் நேர்மையான, உண்மையான,  அன்பான வாழ்க்கை துணை வரை விரும்பினால், அவரும் நேர்மையான வராகவும், உண்மையானவராகவும், அன்பானவராகவும் இருக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள பழகிக் கொள்ளுங்கள்..!
How to solve  problems?

ஒருவர் வாழ்க்கைத் துணையைப் பற்றிக் குறைகூறிக் கொண்டு அவரிடத்தில் வன்மத்தோடும், பகைமையோடும், வெறுப்போடும், நடந்து கொள்ளும்போது அவர் மனதளவில்  விவாகரத்துக்கு காரணமாகிவிட்டார். மனதில் பிழையோடு குடித்தனம் செய்கிறார். வாழ்நாள் முழுவதும் அவரிடம் அன்பு செலுத்தி, அவரை மனதார நேசித்து, அவரை கௌரவப்படுத்துவேன் என்று வாக்குறுதி அளித்து கடைபிடித்தால் மட்டுமே வாழ்க்கை நலம் பெறும்.

ஒருவரின் வாழ்க்கை துணையின் மீது பயம் குறித்த எண்ணங்களைச் செலுத்தக்கூடாது. அன்பான, சமாதானமான, இணக்கமான, கருணை நிறைந்த எண்ணங்களை அனுப்பும்போது திருமண வாழ்வு காலப்போக்கில் மேலும் மேலும் அழகாகவும், அற்புதமாகவும் வளரும்.

ஒருவருக்கொருவர் மற்றவரிடத்தில் அன்பையும், சமாதானத்தையும் வெளிப்படுத்தினால் அந்த அதிர்வுகள் ஆழ்மனதால் எடுத்து கொள்ளப்பட்டு, பரஸ்பர நம்பிக்கை, பாசம், மரியாதை ஆகியவற்றை விளைவிக்கும்.

நச்சரிக்கும் ஒருதுணை, கவனத்தையும், பாராட்டையும் விரும்புகிறது. அது அன்புக்காகவும், பாசத்திற்காகவும் ஏங்குகிறது. அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களைப் பாராட்டி அவர்களை நேசிக்கவும், பாராட்டவும் செய்தால் வாழ்க்கை அற்புதமாகும்.

இல்லற பிரச்னைகளில், எப்போதும் வல்லுநரின் ஆலோசனையை நாட வேண்டும். இல்லற பிரச்னைகளை பற்றி உறவினர் களிடத்திலோ அல்லது நண்பர் களிடத்திலோ பேசக்கூடாது. ஆலோசனை தேவைப்பட்டால் மட்டுமே பயிற்சி பெற்ற ஒருவரிடம் செல்லலாம்.

வாழ்க்கை துணையை மாற்ற முயற்சிக்க வேண்டாம். அது முட்டாள்தனமாகும். அடுத்தவரை மாற்ற முயற்சிப்பது அவருடைய பெருமையையும், சுயமதிப்பையும் அழித்து விரோத மனப்பான்மையையும், துவேஷ உணர்வையும் வளர்க்கும். இது ஒரு திருமண பந்தம் முறிந்து போவதற்குக் காரணமாகக்கூட அமையக்கூடும்.

இதையும் படியுங்கள்:
உழைப்பும் - நம்பிக்கையும் மனிதனின் இரண்டு கண்களாகும்!
How to solve  problems?

சேர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்; அப்போது இணைபிரியா வாழ்க்கை வாழ லாம். அறிவியல் பூர்வமான பிரார்த்தனை அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும்.

வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி வலிமையானவராக, சக்தி வாய்ந்தவராக, அன்பானவராக,  இணக்கமானவராக கருணை உள்ளவராக மனதில் படமாக நிலைத்திருக்கச் செய்தால், இணக்கமும், சமாதானமும் நிறைந்த சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டத் திருமணத்தை அனுபவிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com