
என்ன செய்யலாம் என்று யாரிடம் கேட்டாலும் எதைப் பற்றி கேட்டாலும் கேட்டாலும், எப்போதும் நிறைய யோசனைகள் வரும். சுலபமாகக் கிடைப்பது அறிவுரைதான் என்பார்கள், இல்லை சொல்லப்போனால். யோசனைகளைக் கேட்கவேண்டும் எல்லா விதமான சாத்தியங்களையும் வாய்ப்புகளையும் முழுமை யாகத் தெரிந்துகொண்டுவிட்டு, அதன்பின், செய்ய வேண்டிய வற்றை முடிவு செய்வது எவருக்கும் நல்லதுதான்.
அமெரிக்காவில் மியாமி கடற்கரையில் ஒருவர் உணவு விடுதி நடத்தி வந்தார். அவர் எந்த நிறுவனத் தலைவரையும் போலவே, தனது நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கு அவர் தேர்வு செய்த வழி "வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை' என்பதுதான். சேவைதான் அவருடைய நிறுவனத்தின் தனித்தன்மை என்று முடிவு செய்து கொண்டவர், அதை எப்படியெல்லாம் செய்யலாம் என்று யோசித்தார். அவருக்கு சில யோசனைகள் தோன்றியது.
'தான் சில யோசனைகளைச் சொல்லலாம். ஆனால், அவற்றை ஊழியர்கள்தானே நடைமுறைப் படுத்தவேண்டும். அதற்கு அவர்களின் ஈடுபாடும் ஒத்துழைப்பும் செய்யலாம்?' என்று யோசித்தவர். ஒரு முடிவுக்கு வந்தார்.
வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் சேவையின் தரத்தினை உயர்த்துவது எப்படி? என்று ஊழியர்களிடமே யோசனை கேட்க முடிவு செய்தார். அவர்களும் தங்களுக்குத் தோன்றியதை எல்லாம் சொல்லிவிட முடியாது. அவர்கள் பிற உணவு விடுதிகளில் என்ன செய்கிறார்கள் அல்லது என்ன செய்யவில்லை என்பதைப் பார்த்து விட்டு வந்து, நாம் என்ன செய்யலாம் என்று சொல்ல வேண்டும்.
இதற்காக பணியாளர் ஒவ்வொருவருக்கும். வாரம் இவ்வளவு என ஒரு தொகையினைக் கொடுத்துவிடுவது, அந்தப் பணத்தில் பணியாளர். தனது வார விடுமுறையன்று, நகரில் உள்ள ஏதாவது ஒரு உணவகத்துக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வந்து, குறிப்பிட்ட தினத்தன்று நடைபெறும் அனைத்து ஊழியர்கள் கூட்டத்தில், தான் சாப்பிட்ட உணவகம் பற்றியும் அங்கு கொடுக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை பற்றியும் பேசவேண்டும்.
ஊழியர்கள் சந்தோஷமாகப் போனார்கள் . சாப்பிட்டு விட்டு வந்து பேசினார்கள். 'அவன் கொடுத்த (பீங்கான்) தட்டு ஓரம் உடைந்திருந்ததைக்கூட அவன் கவனிக்கவில்லை.
சூப் சூடே இல்லை.'
"நாப்கின் ஓரத்தில் பிசிர் இருந்தது.'
டீ கொடுத்தான். கப் ஒரு கலர். சாசர் ஒரு கலர்"
கேலியாகச் சிரித்துக்கொண்டே சொன்னார்கள். அதே சமயம், தங்கள் உணவகத்தில் எ(அ)தைச் செய்யக்கூடாது என்பதையும் உணர்ந்தார்கள். குற்றங்கள் மட்டுமில்லை. போன இடங்களில் மற்ற பணியாளர்கள் எப்படிச் சிறப்பாகச் சேவை செய்கிறார்கள் என்பதனையும் தெரிந்துகொண்டார்கள்.
அவற்றையும் தங்கள் நிறுவனக் கூட்டத்தில் சேவை முன்னேற்றத்துக்கான யோசனையாகச் சொன்னார்கள்.
நல்லதும் கெட்டதுமாக இப்படி ஏகப்பட்ட தகவல்கள், அந்த நிறுவனத்திற்குள் சாப்பிடப்போன ஊழியர்கள் வாயிலாக வந்து கொண்டேயிருந்தன. எல்லாம் சேவை பற்றிய யோசனைகள் ஒருவரை விட மற்றொருவர் நல்ல யோசனையாகச் சொல்ல வேண்டுமென்ற இயல்பான போட்டியினால், மிக நல்ல யோசனைகள் வந்து குவிந்தன. நிறுவனத் தலைவர் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார். சில மாதங்களிலேயே அவரிடம் ஒரு நீளமான பட்டியல் தயாராகிவிட்டது.
ஆனால், அந்தப் பட்டியலில் இருந்த அனைத்தையும் அந்த உணவகத் தலைவர் நடைமுறைப்படுத்தவில்லை. எல்லாவற்றையும் செய்ய, மிக அதிகமான பணம் வேண்டும். அவர் செய்வது வியாபாரம், தர்மம் அல்ல. அதனால் அந்தப் பட்டியலில் இருந்து மிக அதிக பலன் தரவல்ல சிலவற்றை மட்டும் தேர்வு செய்து நடைமுறைப்படுத்தி பலனடைந்தார்.
ஆகவே நல்ல தகவல்கள் நிறைய இருந்தாலும் அன்னப்பறவை போல நமக்குத் தேவையானதை தேர்ந்தெடுப்பதே வெற்றிக்கான சிறந்த வழி.