
இறைவன் மனிதனை சிருஷ்டிக்கும்போது பாகுபாடு பாா்ப்பதில்லை. அவரது கடமையை அவர் சரிவர செய்கிறாா். மனிதனும் குழந்தையாய் இருக்கும்போது விகல்பம் இல்லாமல், சூது, வாது தொியாமல்தான் வளா்ந்து வருகிறான். அதனால்தான் குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று என கவிஞா் பாடலை எழுதியிருப்பாா்.
வயது ஆக ஆக பருவகால மாற்றம் வரும்போது பல நல்ல விஷயங்களை நாம் தொடர்வதில்லை. அதில் ஒன்று சிாிப்பு. மனக்கவலையில் இருப்பவனைக்கூட மாற்றும் ஆற்றல் சிாிப்புக்கு உண்டு, என்றே சொல்லலாம்.
கொஞ்சம் சிாித்துப்பேசினால்தான் என்ன? சொல்லுவதை கொஞ்சம் சிாிச்சுக்கிட்டே சொன்னால்தான் என்ன? குடியா மூழ்கிவிடும் என்ற சொல் வழக்கு நடைமுறையில் இருந்து வருகிறது. சிாிப்பு, அது ஒரு வரம்.
சிாித்து வாழவேண்டும், பிறர் சிாிக்க வாழ்ந்திடாதே என்றுதான் கவிஞர் பாடலை எழுதியுள்ளாா். இறுக்கமாகவே இருக்கக்கூடாது இறுக்கமாக இருந்தால் இதயநோய் உட்பட இல்லாத நோயெல்லாம் சொல்லாமல், அழையாமல் வந்துவிடுமே! அதனால் சில விஷயங்களில் மனதின் சுமையைக்குறைத்து சிாிக்கப்பாருங்கள்.
இதில் சில மாற்றுக்கருத்தும் நிலவலாம். துன்பம் வரும் வேளையிலே சிாிங்க என்று சொல்லிவைத்தாா் வள்ளுவரு சரிங்க, அதற்கு இணையாக ஒரு வாக்கியமும் வரும்.
பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில் யாா் மனதில் பொங்கிவரும் சிாிப்பு இது கீழ் புறத்தில் கசப்பு, மேல்புறத்தில் இனிப்பு, பட்டினத்தாா் கையில் உள்ள கரும்பு என அந்த வாக்கியம் முடியும்.
ஆமாம் வாழ்க்கை என்பது இனிப்பும், கசப்பும் நிறைந்ததுதான். ஆக கஷ்டத்தால் சிாிப்பை வரவழைக்க முடியாவிட்டாலும், சிாிப்பால் சில கஷ்டங்களைப்போக்க முடியுமே!
"நமக்கானது எதுவும் நம்மை விட்டுப்போகாது.
நம்மை விட்டுப்போனால் அது நமக்கானது அல்ல" என காஞ்சி மஹா பொியவர் சொல்லியுள்ள கருத்தை உள்வாங்கிப்பாருங்கள். நமக்கான, இனிமையான,சிாிப்பு நம்மை விட்டுப்போனால் அது நமக்கானதே அல்ல.
ஆக, யாாிடம் பேசினாலும் இன்முகத்துடன் பேசுங்கள். கோபப்படவேண்டிய விஷயத்திற்கு கோபம் கொள்வது தவறல்ல.
அதையே தொடர்ந்து கடைபிடிக்க வேண்டாம். எனவே வாழும் வரை நல்ல உள்ளங்களை அன்பால், இனிமையான சொற்களால் வளைத்துப்போடுங்கள். மீண்டும் பிறப்போம் என்பது நம் கையில் இல்லை.
உயிா் இந்த உடலில் உள்ளவரைதான், சிாிப்பும் நல்ல சிந்தனையும், அன்பும், பாசமும் என்பது நினைவில் இருப்பு வையுங்கள்.
நம்மிடம் மிஞ்சுவதோ மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகளே ஆகும்.
எனவே வாழும் வரை நல்ல உள்ளங்களை சேகரிப்போம். சிாித்து சிாித்து அடுத்தவர்களை உங்கள் இதயமெனும் அன்புச்சிறையில் பூட்டிவையுங்கள். மனித வாழ்க்கையின் மூலதனங்களில் சிாிப்பும் ஒன்று என சிந்தியுங்கள். சிந்தனையை சிதற விடவேண்டாம். மாறாக சிாிப்பை சிதறவிடுங்கள். அன்பு பாசம் உள்ள இடத்தில் இறைவன் வசிப்பான். வாய் விட்டு சிாித்தால் நோய் விட்டுப்போகுமே! கொஞ்சம் சிாிங்க பாஸ்!