ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு எல்லாரும் உங்களை பார்த்து மிரளணுமா... இதோ அந்த சீக்ரெட்!

தேவையற்ற மனக்குழப்பங்களை அடியோடு நீக்கி, எவரையும் வியக்க வைக்கும் அளவிற்கு ஒரு கூர்மையான மற்றும் தெளிவான சிந்தனை பெறுவதற்கான உலகப் புகழ்பெற்ற உளவியல் ரகசியங்கள்.
Clear thinking framework தெளிவான சிந்தனை
Clear thinking framework தெளிவான சிந்தனை
Updated on

சிலரை நாம் சாதாரண கூட்டங்களில் பார்க்கும் போது, அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் கச்சிதமாக இருக்கும். அவர்கள் வாய் திறந்தால் போதும், அங்கிருக்கும் அத்தனை பேரும் ஒரு மாபெரும் மேதையை பார்ப்பது போல வாய்பிளந்து கேட்பார்கள். இவர்களுக்குப் பிறப்பிலேயே மூளையின் IQ அளவு மிக அதிகம் என்று நாம் நினைத்துக்கொள்வோம். ஆனால், அறிவியல் பூர்வமான நிஜம் அதுவல்ல. 

அவர்கள் தங்கள் மூளையை ஒரு குப்பைக் கூடையாக மாற்றாமல், ஒரு அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டர் போல மிகச் சரியாகப் பயன்படுத்துகிறார்கள். இது எவரும் எளிதாகக் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறப்பான கலைதான். பிறர் உங்களை ஒரு நடமாடும் கூகுள் என்று வியந்து பார்க்கும் அளவிற்கு, உங்கள் மனதை எப்படி ஒரு தெளிவான சிந்தனை கொண்ட தளமாக மாற்றுவது என்ற ரகசியங்களைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தெளிவான சிந்தனை பெற முதல் படி!

நமது மூளை என்பது புதிய அட்டகாசமான ஐடியாக்களை உருவாக்குவதற்கான ஒரு தொழிற்சாலையே தவிர, கண்ட தகவல்களையும் தேக்கி வைக்கும் குடோன் கிடையாது என்று புகழ்பெற்ற எழுத்தாளர் டேவிட் ஆலன் (David Allen) மிக அழகாகக் கூறியுள்ளார். நாம் செய்ய வேண்டிய நூறு வேலைகளையும் நினைவுக்குள்ளேயே வைத்து உருட்டிக் கொண்டிருந்தால், அங்கே குழப்பம் மட்டுமே மிஞ்சும். 

ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து, அந்த நொடியில் உங்கள் மனதில் ஓடும் அத்தனை எண்ணங்களையும் அதில் முழுமையாக எழுதி முடித்துவிடுங்கள். மூளையின் தற்காலிக மெமரி காலியான அடுத்த நொடியே, அது புத்தம் புதிய எக்ஸ்பிரஸ் வேகத்தில் வேலை செய்யத் தொடங்கும். இந்த எளிய மனத்துப்புரவு தான் ஒரு தெளிவான சிந்தனை உருவாவதற்கான மிக முக்கியமான முதல் அடித்தளமாகும்.

Clear thinking framework தெளிவான சிந்தனை
Clear thinking framework தெளிவான சிந்தனை

ஃபெய்ன்மேன் டெக்னிக் தரும் தெளிவான சிந்தனை!

நோபல் பரிசு பெற்ற இயற்பியல் மேதை ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் (Richard Feynman) உலகத்திற்கு அளித்த ஒரு மாபெரும் பொக்கிஷம் தான் இந்த டெக்னிக். உங்களுக்குத் தெரிந்த ஒரு கடினமான விஷயத்தை, ஐந்து வயது குழந்தைக்குப் புரியும் படி மிக மிக எளிமையான வார்த்தைகளில் நீங்கள் விளக்க வேண்டும். எங்கு உங்களுக்கு வார்த்தை தடுமாறுகிறதோ, அங்கு உங்களுக்கு அந்த விஷயம் முழுமையாகப் புரியவில்லை என்று அர்த்தம். 

இதையும் படியுங்கள்:
குறைகளை ஏற்றுக் கொண்டால் வெற்றி நிச்சயம்! குட்டிக் கதை விளக்கும் தத்துவம்!
Clear thinking framework தெளிவான சிந்தனை

உண்மையான மேதைகள் எப்போதுமே கடினமான வார்த்தைகளைப் பேசிப் பிறரைக் குழப்ப மாட்டார்கள். அவர்கள் பிரம்ம ரகசியத்தைக் கூடச் சாதாரண பாமரனுக்குப் புரியும் படி மிக எளிமையாகப் பேசுவார்கள். இந்தத் தெளிவான சிந்தனை முறைதான் ஒருவரைச் சாதாரண மனிதர்களிடம் இருந்து தனித்துக் காட்டுகிறது.

பேசுவதற்கு முன் அமைதி காக்கும் தெளிவான சிந்தனை!

யாராவது உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டால், அடுத்த செகண்டே எதையாவது உளறி வைக்க வேண்டும் என்ற அவசரத்தைக் கைவிடுங்கள். பதில் சொல்வதற்கு முன் சரியாக மூன்று வினாடிகள் அமைதியாக இருங்கள். இந்தச் சிறிய மௌனம், உங்களை மிகவும் தன்னம்பிக்கை கொண்ட நபராக எதிரில் உள்ளவருக்குக் காட்டும். 

இதற்கிடையில் உங்கள் மூளை தேவையற்ற குப்பைகளை வடிகட்டி, அசத்தலான பதிலை மட்டும் நாக்குக்கு அனுப்பும். தொழில் அதிபர் எலான் மஸ்க் மற்றும் முதலீட்டு மேதை சார்லி மங்கர் ஆகியோர் இந்த மௌன டெக்னிக்கைத்தான் பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
இந்தியா, சீனா நட்பு கொண்டால்... பிம்பம் உடைக்கலாம்! பெருமை சேர்க்கலாம்!
Clear thinking framework தெளிவான சிந்தனை

பிறருக்கு மேதையாகத் தெரிவது உலகத்தில் உள்ள அத்தனை புத்தகங்களையும் மனப்பாடம் செய்து வைத்திருப்பது கிடையாது. உங்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச விஷயத்தையும் எவ்விதக் குழப்பமும் இன்றி மிகத் தெளிவாகப் பிறருக்குக் கடத்துவது தான். பேசும் வார்த்தைகளைக் குறைத்து, சொல்ல வரும் கருத்தைச் சிம்பிளாகப் பில்டர் செய்து பேசுங்கள். 

இந்த அட்டகாசமான வாழ்வியல் முறையை இன்றே நீங்கள் பழகத் தொடங்கினால், சமூகம் உங்களை ஒரு மாபெரும் புத்திசாலியாகப் நிச்சயம் பார்க்கும். 

logo
Kalki Online
kalkionline.com