நினைத்ததை சாதிக்க உங்கள் 'அக அதிர்வெண்ணை' டியூன் செய்வது எப்படி?

நினைத்ததை சாதிக்க உங்கள் 'அக அதிர்வெண்ணை' டியூன் செய்வது எப்படி?
அதிர்வலைகள்
அதிர்வலைகள்Gemini image
Updated on

"எப்போதும் பாசிட்டிவா இருங்க, நல்லதே நினையுங்க" – இதெல்லாம் கேட்டு கேட்டுச் சலித்துப்போன வார்த்தைகள். இவற்றை வெறும் வார்த்தைகளாகக் கடைப்பிடிப்பதால் மட்டும் நினைத்ததை அடைந்துவிட முடியாது. ஆனால், வேண்டியதை அடைய உதவும் அதிர்வலைகள் (Vibration) என்பது ஏதோ கட்டுக்கதை அல்ல; அது நமது உடலும் மனமும் வெளிப்படுத்தும் ஒரு மின்சாரச் சமிக்ஞை போன்றது.

ரேடியோவில் ஒரு குறிப்பிட்ட எஃப்.எம் சேனலைக் கேட்க விரும்பினால், அதன் சரியான ஃப்ரீக்வென்சியை (Frequency) நாம் டியூன் செய்கிறோம். தவறான அலைவரிசையில் வைத்துக்கொண்டு நாம் விரும்பிய சேனலைக் கேட்க முடியாது. அதுபோலத்தான், வாழ்க்கையில் வெற்றியை ஈர்க்கவும் நமது அக அதிர்வெண்ணைச் சரியாக டியூன் செய்ய வேண்டும்.

நமது 'வைப்' (Vibe) ஏன் திடீரெனக் குறைகிறது?

நாம் ஒவ்வொருவரும் இரவு முழுவதும் தூங்கி காலையில் கண்விழிக்கும் போது புதிய ஆற்றலுடன்தான் எழுகிறோம். ஆனால், வீட்டில் நடக்கும் சிறு சண்டைகள், அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் செல்லும்போது ஏற்படும் டிராஃபிக் நெரிசல், யாரோ சொன்ன ஒரு கசப்பான வார்த்தை, அலுவலகப் பணிச்சுமை அல்லது சமூக வலைதளங்களில் காணும் எதிர்மறை ரீல்ஸ், வீடியோக்கள் ஆகியவை ஆற்றலைச் சட்டென்று குறைத்துவிடுகின்றன.

அதிர்வு குறையும்போது, நாம் மிகச் சிறந்த திறமைசாலியாக இருந்தாலும் கூட வாய்ப்புகள் கைநழுவிப் போகும். அதே நேரத்தில், அதிர்வெண்கள் சரியாக வேலை செய்யும்போது, சிறிய முயற்சிகள் கூட மிகப்பெரிய வெற்றியைத் தரும்.

அதிர்வெண்ணை அதிவேகமாக உயர்த்தும் 4 நடைமுறை நுட்பங்கள்:

1. 5-செகண்ட் விதி (The 5-Second Rule):

மனதில் தயக்கம், பயம் அல்லது சோம்பல் எழும்போது இந்த டெக்னிக்கைப் பயன்படுத்த வேண்டும். 5-லிருந்து 1 வரை தலைகீழாக "5, 4, 3, 2, 1" என்று எண்ணவேண்டும். 1 என்று சொன்னவுடன் உடனே அந்த இடத்தைவிட்டு நகர்ந்து, செய்யவேண்டிய வேலையைத் தொடங்க வேண்டும். இது எதிர்மறை அதிர்வில் மூளை முடங்குவதைத் தடுத்து, உடனடியாகச் செயலில் இறங்கும் ஆற்றலைத் தரும்.

அதிர்வலைகள்
அதிர்வலைகள்Gemini image

2. 90-வினாடி மேஜிக் (The 90-Second Emotional Reset):

பிறரால் கோபமோ அல்லது ஏமாற்றமோ அடையும் போது உடனே ரியாக்ட் செய்யக்கூடாது. நரம்பியல் அறிவியல்படி, உடலில் அந்த எதிர்மறை ஹார்மோன் சுரந்து கரைந்து போகச் சரியாக 90 வினாடிகள் ஆகும்.

இதையும் படியுங்கள்:
கற்றல் சுமையல்ல அணிகலன்: எதையும் சட்டெனக் கற்கும் 4 சூப்பர் டிப்ஸ்!
அதிர்வலைகள்

அந்த 90 வினாடிகள் அமைதியாக மூச்சை மட்டும் கவனித்துக்கொண்டு இருக்கவேண்டும். அவசரப்பட்டு எதிர்வினை ஆற்றாமல் இருப்பதால் ஆற்றல் வீணாகாது; நமது வைப்ரேஷனும் உயர்நிலையிலேயே இருக்கும்.

3. உடல் மொழி மாற்றம் (Posture Hack):

மனம் ஏமாற்றம், கோபம் அல்லது தோல்வியை சந்திக்கும் போது நமது உடல் மொழியும் மாறிவிடும். தோள்களைச் சரித்துக் குனிந்து அமர்வோம். இதைத் தவிர்த்துவிட்டு உடனடியாக நிமிர்ந்து உட்கார வேண்டும். தோள்களை அகலப்படுத்தி, ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும். உடலின் அமரும், நிற்கும் நிலை மாறும் போது மூளையில் சுரக்கும் ஹார்மோன்கள் மாறும்; மனநிலையும் அதிர்வெண்ணும் அடுத்த சில வினாடிகளில் உயரும்.

4. எதிர்காலத்தில் வாழ்தல் (Act As If):

நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை ஏற்கனவே அடைந்துவிட்டதாகக் கற்பனை செய்யுங்கள். ஒரு உயர்ந்த பதவி கிடைத்தால் எப்படி இருக்குமோ, அந்தப் பதவியில் இருக்கும் ஒருவர் எப்படி கம்பீரமாக நடந்து கொள்வாரோ, பேசுவாரோ அதே நம்பிக்கையோடு இப்போதே செயல்படத் தொடங்குங்கள். நீங்கள் விரும்பும் காரை வாங்கிவிட்டதாகக் கற்பனை செய்து, அதை ஓட்டி மகிழுங்கள். நீங்கள் வெளிப்படுத்தும் அதே கம்பீரமான 'வைப்' உங்களுக்கான வாய்ப்புகளை மிக வேகமாக ஈர்க்கும்.

இதையும் படியுங்கள்:
உங்க நிம்மதியை கெடுக்கும் உறவுகளை ஈஸியா கையாளுவது எப்படி.. சீக்ரெட் டிப்ஸ் இதோ!
அதிர்வலைகள்

விருப்பங்களை ஈர்ப்பது என்பது வானத்திலிருந்து தானாகக் குதிப்பதில்லை; உங்களை நீங்கள் எந்த உணர்வு நிலையில் வைத்திருக்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. இந்த எளிய டிப்ஸ்களைப் பயன்படுத்தினால், அடுத்த 90 வினாடிகளில் உங்கள் அதிர்வெண் தானாக உயரும்.

தினசரி ஏற்படும் சிறு தடைகளையும் கவனச்சிதறல்களையும் தாண்டி, உங்கள் மனதை எப்போதும் நேர்மறை அலைவரிசையில் வைத்திருந்து, புதிய வாய்ப்புகளை உங்கள் பக்கம் ஈர்க்க இந்த வழிகாட்டி உதவும்.

logo
Kalki Online
kalkionline.com