நம்பிக்கை + போராட்டம் = (வாழ்வில்) வெற்றி + முன்னேற்றம்!

confidence
confidenceImage credit - pixabay
Published on

'நம்பிக்கையோடு போராடு' என்பது ஒரு ஊக்கமளிக்கும் மற்றும் உத்வேகம் தரும் வாக்கியம். நீங்கள் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டாலும் நம்பிக்கை இழக்காமல் போராட வேண்டும் என்பதை இது குறிக்கும்.

நம்பிக்கை - உங்களை நீங்களே நம்புவது மற்றும் உங்கள் கலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பது.

போராட்டம் - கடின உழைப்பை விட முயற்சி மற்றும் தோல்விகளைக் கண்டு பயப்படாமல் இருப்பது.

எடுத்துக்காட்டு

நீங்கள் ஒரு தேர்வில் தோல்வியுற்றால் நம்பிக்கை இழந்துவிடாமல் அடுத்த தேர்வில் வெற்றி பெற வேண்டும். முயற்சி செய்தல் வேண்டும். அல்லது ஒரு வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்தாலும், நம்பிக்கை இழந்து விடாமல் மீண்டும் ஒரு புதிய வியாபாரத்தை தொடங்க முயற்சி செய்ய வேண்டும் .

சுருக்கமாக, 'நம்பிக்கையோடு போராடு' என்பது ஒருவரது வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் முக்கியமான ஒரு தத்துவம்.

நம்பிக்கையுடன் போராடுவது இயல்பானது. அது வளர்ச்சியின் ஒரு பகுதியாகும்.

தரையில் ஆழமாக புதைக்கப்பட்ட விதை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க அதைச் சுற்றி ஒரு பாதுகாப்போடு உள்ளது . அதனை எதிர்த்து போராடி தரையில் இருந்து தலையை நீட்டும் போது, அது காற்று, மழை, பனி, விலங்குகளால் எளிதில் பாதிக்கப்படக் கூடியது.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கு வழி: குறிக்கோள், நம்பிக்கை, சேவை..!
confidence

ஆனால் அதன் வேர்கள் அதை தரையில் பிணைத்து வைத்திருக்கின்றன. காற்று, மற்றும் மழையினால் ஓடு இல்லாமல் பலத்த புயல்களை தாங்க கூடிய ஒரு மரமாக வலுப்படுத்த உதவுகின்றன .

இதே மாதிரி உங்கள் நம்பிக்கையும் எந்தத் தடை வந்தாலும் போராடினால் வெற்றி நிச்சயம்!

எடுத்துக்காட்டாக

கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும் முயற்சியில் இருந்தது அந்த பட்டாம்பூச்சி. கூட்டின் ஓடு லேசாக விரிசல் அடைய அந்த ஓட்டினை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்க போராடிக் கொண்டு இருந்தது அது. அதை ஆவலோடு பார்த்தபடி அருகில் இருந்தான் ஒரு சிறுவன்.

அது, நீண்ட நேரம் போராட்டம் என்பதை சிறுவன் அறியவில்லை.

பட்டாம்பூச்சி கூட்டை உடைக்க மிகவும் கஷ்டப்படுகிறது என்று நினைத்து அந்த ஓட்டை லேசாக உடைத்து விட்டான். அதன் வழியே வெளியில் வந்த பட்டாம்பூச்சியால் பறக்க முடியவில்லை.

அதன் ஒரு பக்க சிறகு உடலோடு ஒட்டி இருக்க சிறிது நேரம் போராடிவிட்டு இறந்து விட்டது.

இதைப் பார்த்த சிறுவன் அழுது கொண்டே அப்பாவை கூப்பிட்டான்.

நடந்ததை கூறினான். பட்டாம்பூச்சியை வைத்து பையனுக்கு வாழ்க்கை பாடம் நடத்தினார் அப்பா.

"ஒரு பட்டாம்பூச்சி இப்படி ஒரு போராட்டம் நடத்தி கூட்டைவிட்டு வெளியே வந்தால்தான் அதன் சிறகுகள் வலுவாகும் .

முழுமையான வளர்ச்சியும் கிடைக்கும் .

அதே போல் மனிதர்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் தான் அவர்களுக்கு வாழ்வில் மீதான நம்பிக்கையை செதுக்கும்.

இன்பமாக வாழ பல போராட்டங்களை சந்திக்க நேரிடும் .

அதற்காக மனம் உடைந்து விடக்கூடாது. போராட்டங்களை சந்திக்க சந்திக்கத்தான் நமது மனம் வலுவடையும்.

பின் நம்பிக்கையோடு போராடி வாழ்வில் முன்னேறலாம்"

என்று கூறினார் அப்பா.

வெற்றி நிச்சயம். இது வேத சத்தியம்!

கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்!

மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்!

பாறைகள் நீங்கினால் ஓடைக்கு இல்லை சங்கீதம்!

என்ற பாடல் வரிகளில் வெற்றி நிச்சயம் என்பது

நம்பிக்கையை உயர்த்துகின்றன!

சொல் மட்டும் இல்லை செயலும் எதிர்மறையாக இருக்கக் கூடாது.

நல்ல விளைவுகளை தரும் நம்பிக்கை ஆன விஷயங்களை செய்யுங்கள்!

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கு அப்துல் கலாம் சொன்ன கனவு, நம்பிக்கை! இதுதான் சூத்திரம்!
confidence

இப்படிப்பட்ட போட்டியையும் எதிர்கொள்ளும் திறமையும் பக்குவத்தையும் சம்பாதியுங்கள். எந்த கடினமான சூழலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு மனதளவில் எப்போதும் தயாராக இருந்தால், உங்கள் வெற்றிப் பாதை மிகவும் நம்பிக்கைப் பாதையாக மாறி வெற்றியை நிச்சயம் தரும்.!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com