
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் முன்னேறவும், சம்பாதித்து அதற்கான லட்சியத்தை உருவாக்கவும், விடாமுயற்சியுடனும், மாற்றி யோசித்து செயல்பட வேண்டும். உங்கள் லட்சியத்தை அடைய ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். அந்த திட்டத்தில் செய்ய வேண்டிய செயல்கள் காலக்கெடு, தேவையான வளங்கள் போன்றவற்றை தெளிவாக டைரியில் குறிப்பிடவும்.
லட்சியமானது சொந்த வீடு
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஆட்டோ வைத்திருக்கிறார் பக்கத்தில் உள்ள பள்ளி செல்லும் பிள்ளைகளை அழைத்துபோய் வந்து மற்ற நேரங்களில் வேறு சவாரிகளில் வருமானம் ஈட்டி வருகிறார். மிதிவண்டியில் காய்கறி வியாபாரம் செய்வார். அவரது மனைவி. இரண்டு பிள்ளைகள் பள்ளியில் படிக்கின்றனர்.
புறநகரில் சொந்தமாக மனை ஒன்றை வாங்கி அதில் வீடு கட்டி குடியேறி, பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என்பது அவரது லட்சியம்.
கூடுதல் வருமானத்துக்காக சவாரி இல்லாத நிலையில் வீட்டு முன் தள்ளு வண்டியில் லாண்டரி கடை போட்டு பக்கத்திலுள்ளவர்களுக்கு துணிகளை அயர்ன் செய்து கொடுத்து நேரத்தை விரயமாக்காமல் கௌரவம் பார்க்காமலும் உழைத்து சம்பாதித்து அவரது லட்சியமான வீடு கட்டி குடியேறிவிட்டார். அவரது லட்சியம் வெற்றி அடைந்ததை பாராட்டினேன்.
சர்ப்ரைஸ் கிப்ட்
பல ஆண்டுகளுக்கு முன், நான் பயின்ற பள்ளியில் என்னுடன் படித்த வகுப்பு தோழர், தோழியின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர் குறிப்பிட்ட தினம் காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளோடு அனைவரும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டோம்.
எங்களுடன் படித்த மாணவர் ஒருவர் போட்டோ எடுப்பதில் மிகவும் பிரபலமானவர். அவரது லட்சியம் போட்டோ ஸ்டுடியோ வைப்பது.
இப்போது திருமணம், விசேஷங்களில் மிகச்சிறந்த போட்டோகிராபராக செயல்படுகிறார். அவரது லட்சியத்தை நோக்கி மிகச் சிறப்பாக முயற்சி செய்து முன்னேறியதாக கூறினார். மேலும் விழா முடிந்து விடை பெறும்போது பள்ளி விழாக்களில் குரூப்பாக எடுத்த புகைப்படங்கள், பலர் தவறவிட்டிருந்த புகைப்படங்களை பென் டிரைவிலும், அன்றைய சந்திப்பு நிகழ்வை படம்பிடித்து சர்ப்ரைஸ் கிப்டாகவும், அனைவரும் மறக்க முடியாத நினைவுப் பரிசாக வழங்கினான். அனைவரும் அவருக்கு அவரது லட்சியம் வெற்றி பெற்றதை பாராட்டி விட்டு வந்தோம்.
லட்சியத்தை உருவாக்க சில குறிப்புகள்.
உங்கள் அறிவில் ஆற்றல் திறமையில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என கணக்கிட்டு தேவைக்கேற்ப அதனை வளர்த்துக்கொள்ளவும்.
உங்கள் இலட்சியத்திற்கு கால அளவு கொடுங்கள்.
8 ஆண்டுகள் என்றால் முதல் இரண்டு ஆண்டில் என்ன செய்ய வேண்டும் என அட்டவணை தயாரித்து பின் அதனை மூன்று கட்டமாக பிரித்துக்கொண்டு செயல்படுங்கள்.
உங்கள் லட்சியம் இதுதான் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் இலட்சியத்தின் முடிவில் நீங்கள் அடையப்போகும் உயர் நிலையை மனக்கண் முன் காணலாம்.
மாபெரும் இலட்சியத்தை அடைய அந்த நெடும்பாதையில் எவ்வளவு தூரம் தினம் தினம் சென்று கொண்டு இருக்கிறீர்கள்? என்பதை செல்ல முடியும் என்பதையும் தினம் சிறிது நேரம் ஆகுது எண்ணி பாருங்கள்.
உங்கள் லட்சித்தை அடைந்துவிட முடியும் என்றும் நீங்கள் முதலில் நம்புங்கள். இந்த நம்பிக்கை வளரும் வகையில் உங்கள் லட்சியப் பாதையில் சிறு சிறு முன்னேற்றங்களை காணலாம்.
உங்கள் லட்சியத்தை அதன் முடிவான வெற்றியை உங்கள் மணக்கும் முன் காணுங்கள். இந்த லட்சிய தரிசனம் நாம் செய்ய வேண்டிய பணிகளை விரைவில் விரைவுப்படுத்தும்.
இந்த வகையில் உங்கள் லட்சியத்தை அமைத்துக் கொள்ளுங்கள். சரியான திட்டமே சரியான அமைப்பே! பாதி வெற்றி! அதுவே முதல் வெற்றியும் கூட.!
லட்சியத்தை அடைய நம்பிக்கையுடன் முன்னேறுங்கள். வெற்றி நிச்சயம்!