
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. அதாவது head and tail. எந்த ஒரு விளையாட்டை தொடங்கினாலும் நாணயத்தை கீழே போட்டு toss செய்த பின்னரே துவங்குவார்கள். இது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நான் இப்போது சொல்லப்போவது என்னவென்றால் எப்படி நாணயத்திற்க்கு இரண்டு பக்கங்கள் இருக்கிறதோ அதைப்போல எல்லாம் மனிதர்களுக்கும் வாழ்க்கையிலும் சரி அவர்களுடைய குணத்திலும் சரி இரண்டு பக்கங்கள் உள்ளன. பார்ப்போமா அவற்றை விரிவாக...
•எல்லோருமே வாழக்கையில் நல்லது கெட்டது இரண்டையும் செய்கின்றனர்.
•எல்லோருடைய வாழ்க்கையிலும் நல்லது கெட்டது என இரண்டு சம்பவங்களுமே நடக்கின்றன.
•எல்லோருடைய இல்லத்திலும் ஜனனம் மரணம் என இரண்டுமே நேரிடுகின்றன.
•வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் எப்போதுமே இணைந்து தான் இருக்கின்றன.
•இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி வருகின்றன.
•ஒரு மனிதனால் முழுமையாக நல்லவனாக இருக்க முடியாது. தன்னை அறியாமலேயே, தெரியாமலேயே கெட்டவானகவும் இருப்பான்.
•லாபம் நஷ்டம் என இரண்டையுமே எதிர்கொள்கிறோம்.
•பணம் பஞ்சம் என இரண்டும் கலந்துதான் வாழ்க்கை.
•பள்ளமும் மேடும் நிறைந்ததுதான் வாழ்க்கை.
•கனவில் ஒன்றை காண்கிறோம், நினைவில் ஒன்றை காண்கிறோம்.
•மனதில் எதிர்மறை மற்றும் நேர்மறை என இரண்டு எண்ணங்களுமே இருக்கின்றன.
•அச்சமும் தைரியமும் இரண்டும் கலந்து இருக்கின்றன.
•இளமையும் முதுமையும் வாழ்வின் இரண்டு முக்கியமான பக்கங்கள்.
•வெற்றி தோல்வி இரண்டையும் சந்திக்க நேரிடும்.
•ஏற்றம் இறக்கம் எல்லோருக்கும் இருக்கும்.
•கோபமும் இருக்கும், மறுபக்கம் சாந்தமும் இருக்கும்.
•விருப்பு வெறுப்பு கலந்து இருக்கும்.
இப்படி கூறிக்கொண்டே போகலாம். எல்லோருக்குமே இரண்டு பக்கங்களும் இருக்கும். சிலருக்கு நல்ல குணங்கள் அதிகமாகவும் கெட்ட குணங்கள் குறைவாகவும் இருக்கும். சிலருக்கு opposite ஆக கெட்ட குணங்கள் அதிகமாக இருக்கும். நம் எல்லோரிடமும் இரண்டு குணங்களும் இருக்கின்றன அதேபோல் உலகத்தில் உள்ள இயற்கையிலும் இரண்டு விதமான சூழல்கள் இருக்கின்றன.
இயற்கையை நம்மால் எதுவும் செய்யமுடியாது. ஆனால் நம்மால் நம்முடைய வாழ்க்கையில் இருக்க கூடிய இரண்டு பக்கங்களில் நல்லதை மட்டும் அதிகமாக உபயோகப்படுத்தலாம் அல்லது கடைபிடிக்கலாம்.
யாருமே பரிசுத்தமானவன் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ள முடியாது. ஆனால் இந்த இரண்டு பக்கத்தையும் தன்னுடைய கட்டுபாட்டில் தாராளமாக வைத்துகொள்ளலாம்.
நஷ்டம் வராதபடிக்கு சரியான திட்டத்தை தீட்டலாம்.
கோபத்தை முடிந்தவரை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கலாம்.
அன்போடு எல்லோரையும் அரவணைக்கலாம்.
ஏற்றத்தையும் தாழ்வையும் சமமாக ஏற்றுக்கொள்ள பழகினால் துயரம் இருக்காது.
கனவில் கண்டதை நினைவில் வைத்துகொண்டு போராடுவதை தவிர்ப்போம்.
வெறுப்புகளை ஒதுக்கி வைப்போம்.
நேர்மறை எண்ணங்களை வளர்ப்போம்.
தோல்வியை கண்டு பயப்படாமல் மீண்டும் போராடி வெற்றியை பெறுவோம்...
பிறந்திருக்கும் புதிய இந்த விசுவாசுவ ஆண்டிலே விசுவாசத்தோடும் தைரியத்தோடும் எதிர்நீச்சல் போட்டு இன்பமாய் வாழ்வோம்!