முறையாக கற்றால் ஜொலிக்கலாம்!

Tailoring
Tailoring
Published on

எனது தோழி, தான் வீட்டில் இருக்கும் நேரங்களில், நியூஸ் பேப்பரை வைத்து அதில் தன் ஜாக்கெட் வைத்து, கட் செய்து, ஜாக்கெட் தைக்க தானாகவே முயற்சி செய்து கற்றுக் கொண்டாள். அதேபோல் தானாகவே கற்றுக் கொண்டு, வீட்டில் உள்ளவர்களின் பேன்ட், ஷர்ட் எல்லாவற்றையும் தைக்க ஆரம்பித்தார். பிறகு அவளுக்கு மற்றவர்களுக்கும் தைத்து தர வேண்டும் என்று ஆசை வந்தது.

மற்றவர்களுக்கு தைத்து தரும் பொழுது கொஞ்சம் ஜாக்கெட்டில் பிரச்சனை வந்ததாக எதிர்மறை கருத்துக்கள் வர ஆரம்பித்தன. சிறிது நாட்கள் இதனால் மற்றவர்கள் துணியை தைக்காமல் இருந்தார். ஒருமுறை அவளை சந்தித்த பொழுது, "ஏன் தெரிந்த தொழிலை நிறுத்த வேண்டும்? முறையாக சென்று ஒரு தையல் வகுப்பில் சேர்ந்து என்னென்ன பிரச்சனைகள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, நன்றாக கற்று வந்து செய்தால் பிரச்சனை தீரப் போகிறது. இதற்காக கடையை மூட வேண்டுமா?" என்று கேட்டேன்.

"எனக்கு தையலை தவிர வேறு எதுவும் தெரியாது. தையல் கூட அறைகுறை தான்" என்று வருத்தத்துடன் கூறினாள். "ஒரே தொழிலை நன்றாக உருப்படியாக நுணுக்கங்களை நன்றாக தெரிந்து கொண்டு செய்தாலே போதும். பல கைத்தொழில்களை கற்று வைத்திருப்பவர்கள் கூட எல்லாவற்றையும் செய்வது இல்லை" என்று கூறினேன்.

இதையும் படியுங்கள்:
பங்குகள் மரக்குச்சிகளைப் போன்றவை! எப்படி? படிச்சு தெரிஞ்சுக்கலாம் வாங்க!
Tailoring

அதன் பிறகு முறையாக பயிற்சி எடுத்து, இப்பொழுது எல்லாவிதமான துணிகளையும் தைத்து கொடுக்கிறாள். எல்லோரும் பாராட்டி மகிழ்கிறார்கள். ஆதலால் தனக்கு தெரிந்த தொழிலை தாராளமாக செய்யலாம். பிரச்சனை ஒன்றும் இல்லை .அதை ஒருமுறை ஒரு வகுப்பில் சேர்ந்து முறைப்படி கற்றுக் கொண்டு வந்து செய்தால் இன்னும் நிறைய சந்தேகங்கள் நிவர்த்தி ஆகும். வெற்றிக்கு வழி வகுக்கும்.

அமெரிக்காவில் ஒரு வெள்ளைக்காரர் நன்றாக ஆபரேஷன் செய்ய தெரிந்தவர் இருந்தார். ஆனால் அவருக்கு பிரச்சனை என்னவென்றால் ஆப்ரேஷன் செய்து அந்த முடிச்சை சரியாக போடத் தெரியாது. ஒரு தடுமாற்றம் இருந்தது. அதை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும் என்று யோசித்த பொழுது, அவர் படித்த காலத்தில் அவர் கூட படித்த ஒரு கருப்பின நண்பர், பணம் கட்ட முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்றதும், அவர் முடிச்சு போடுவதில் கெட்டிக்காரர் என்பதும் அவர் நினைவுக்கு வர, அவரை கண்டுபிடித்து அழைத்து வந்து தனக்கு பக்க துணையாக வைத்துக் கொண்டு ஆபரேஷன் செய்ய ஆரம்பித்தார். கடைசிவரையில் முடிச்சு போடுவது அந்த நண்பரின் வேலையாக இருந்தது. நண்பர் மேலும் படிக்கவில்லை என்றாலும் இதையே சிறப்பாக செய்து தன் திறமையை மேம்படுத்திக் கொண்டார்.

இதனால் இருவரின் தொழிலும் நன்றாக சிறப்புற்றது. கூடவே பல்வேறு நோயாளிகள் நோய் தீர்ந்து நலமுடன் வாழ வழி செய்தது. உதவுவதற்கு இதுவும் ஒரு வழி. மேலும் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் இது ஒரு சிறந்த அணுகுமுறை.

ஆதலால் கற்க முடிந்ததை நன்றாக கற்றுக் கொண்டு செய்வோம். கற்க முடியாது என்று இருப்பவற்றை அதற்கு தகுந்த ஆளை நியமித்து சிறப்படைவோம். அவர்களையும் சிறப்பிப்போம்!

இதையும் படியுங்கள்:
அய் அய்: மரத்தின் உச்சியில் வாழும் இரவு ஆவி
Tailoring

சிந்திப்பது மனது செயல்படுத்துவது அறிவு;

முயற்சி செய்து சாதிக்க வேண்டியது நாம்

நம் முயற்சியின் பலனே வெற்றி

நம்பிக்கை வெற்றியோடு வரும்.

ஆனால் ,வெற்றி நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே வரும். ஆதலால் இலக்கை அடைய வேண்டும் என்று ஆசை இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கையும் , முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com