முயன்றால் வெற்றி வசப்படும் -ஓர் உதாரணக் கதை...!

Ratan tata...
Ratan tata...Image credit - goodreturns.in/
Published on

வாழ்க்கையில், ஒரு சிலரை தவிர பெரும்பாலும் ஒருவருக்கு தொடக்கமே வெற்றியாக அமைவதில்லை. சாதனையாளர்கள் கூட முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று விடுவதில்லை. தான் இழந்த நாட்டை மீட்கப் போராடிய ராபர்ட் புரூஸ், இந்தியாவிற்கு கடல் வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, எவரெஸ்ட் சிகரம் தொட்ட எட்மண்ட் ஹிலாரி, அமெரிக்க அதிபராகி அடிமைத்தனத்தை தகர்த்த ஆபிரகாம் லிங்கன் போன்ற பலரும் பல்வேறு முயற்கிகளுக்கு பின்னரே தங்களது வெற்றி இலக்கை அடைந்தனர்.

விடாப்பிடியாக முயன்றால் நினைத்ததை சாதிக்கலாம் என்பதற்கு வலுவான இந்தியாவை உருவாக்க உதவிய தொழில் மேதை ரத்தன் டாடாவின் வாழ்வில் நடந்த ஒரு  நெகிழ்வான சம்பவம் இங்கே.

"அது டாட்டாவின் அலுவலகம். டாட்டா எதேச்சையாக கேமராவில் ஒரு நபரை பார்க்கிறார். உதவியாளரை அழைத்து யார் இந்த பையன் ஏன் உட்கார்ந்திருக்கிறார்? என கேட்கிறார். அவர் உங்கள் அப்பாயிண்மெண்ட் கேட்டு ஒரு மாதமாக தினமும் வந்து கொண்டிருக்கிறார், என்றார் உதவியாளர்.

அப்படியா அடுத்த வாரம் திங்கள் காலை 9-9.15 வரை. கால்மணி நேரம் அப்பாயிண்ட்மெண்ட் கூறி விடுங்கள் என்கிறார். டாட்டாவுக்கு ஒவ்வொரு நொடியும் பணம். நேரத்தை வீணாக்கமாட்டார். அந்த இளைஞனுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் தெரிவிக்கப்பட்டது.

கொடுத்தது கால் மணி நேரம். அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுவே எனக்கு அதிகமான நேரம் என்ற இளைஞனை ஆச்சர்யமாக பார்த்தனர்.

குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது. காலை 8.30 க்கு அந்த இளைஞன் உள்ளே இருந்தான். 9 மணிக்கு அனுமதிக்கப்படுகிறான்.

இளைஞன்: குட் & க்ரேட் மார்னிங் சார்.

டாட்டா: மார்னிங். என்ன விசயமாக என்னை பார்க்க வந்தாய்...? உடனே சொல் எனக்கு நேரமில்லை.

இளைஞன்: ஒரு  பிசினஸ் விசயமாக உங்களிடம் பேச வேண்டும்.

டாட்டா: என்ன பிசினஸ்?

இளைஞன்: நீங்கள் உப்பு விற்கவேண்டும்.

டாட்டா: தம்பி என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரிகிறது... எவ்வளவு பெரிய தொழில்களை செய்து கொண்டு உள்ளேன் என்னை உப்ப விற்க சொல்லும் அளவு அது பெரிய பொருளா...?

இளைஞன்: சார். உப்பு சிறிய பொருள் தான். ஆனால் தினமும் பயன்படக்கூடியது. அது இல்லாமல் நீங்களோ நானோ உண்ணவே முடியாது. தினமும் பயன்படக்கூடியது. அடிக்கடி வாங்கப்படக்கூடியது. நமக்கு இவ்வளவுக்கு உப்பு கிடைக்கிறது. நாம் இவ்வளவுக்கு விற்கலாம். உங்கள் டாட்டா ப்ராண்டு என்றால் மக்கள் நம்பிக்கையோடு வாங்குவார்கள். அதனால்தான் வேறு எங்கும் போகாமல் இங்கு வந்தேன்.

இதையும் படியுங்கள்:
தோற்றப்பொலிவில் கவனம் கொள்ளுங்கள்!
Ratan tata...

டாட்டா இரண்டு நிமிடம் யோசிக்கிறார். பின் இளைஞனிடம்... சரி வெளியே போ. காண்ட்ராகட்டில் சைன் பண்ணிவிட்டு, அட்வான்ஸ் பெற்றுக்கொள். நாளை மறுநாள் முதல் நம் உப்பு வெளிவர வேண்டும்.

ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம் எப்படி கால் மணி நேரத்தில் முடிந்தது பாருங்கள். இரண்டு நிமிட நேரத்தில் ஒரு மிகப்பெரிய ப்ராஜெக்ட்டை அதன் லாபத்தை டாட்டாவால் யூகிக்க முடிந்திருக்கிறது. அதுதான் வெற்றியின் ரகசியம். எந்த ஒரு முடிவையும் உடனே காலம் தாழ்த்தாமல் எடுப்பது அவரின் வெற்றி ரகசியம்.

ஒருவேளை அந்த இளைஞனின் வார்த்தையை நிராகரித்திருந்தால் அவன் வேறு நிறுவனத்தை நாடியிருப்பான். வாய்ப்பு ஒரு முறை நம்மை தேடிவரும் அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் நம் வெற்றியே அடங்கியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com