உங்க எதிரியை ஜெயிக்கணுமா? நரியோட இந்த 5 குணத்தை கத்துக்கோங்க போதும்!

Fox
Fox
Published on

நம்ம வாழ்க்கையில நாம சந்திக்கிற எல்லாப் போரையும் வெறும் பலத்தை வெச்சு ஜெயிச்சிட முடியாது. சில சமயங்கள்ல, நம்ம எதிராளி நம்மளை விட பலசாலியா, அதிகாரம் உள்ளவரா இருக்கலாம். அந்த மாதிரி நேரத்துல, முட்டி மோதுறதை விட, புத்திசாலித்தனமா காயை நகர்த்துறதுதான் புத்திசாலித்தனம். 

இந்த தந்திரத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் நாம எடுத்துக்க வேண்டிய ஒரு விலங்கு இருக்குன்னா, அது நரிதான். பஞ்ச தந்திரக் கதைகள்ல இருந்து, நிஜக் காட்டு வாழ்க்கை வரைக்கும், நரி தன்னோட பலவீனத்தை பலமா மாத்துறது அதோட மூளையாலதான். 

உங்க வாழ்க்கையிலயும் எதிரிகளை சாமர்த்தியமா ஜெயிக்க, நரியோட இந்த ஐந்து குணங்கள் உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.

1. சூழ்நிலையை முழுசா புரிஞ்சிக்கிறது:

நரி ஒருபோதும் அவசரப்பட்டு எந்த ஒரு செயலிலும் இறங்காது. அது வேட்டையாடப் போறதுக்கு முன்னாடி, தன் இரையோட ஒவ்வொரு அசைவையும், அது போற வர்ற பாதையையும், சுத்தி இருக்கிற ஆபத்துகளையும் மணிக்கணக்கா ஒளிஞ்சிருந்து கவனிக்கும். 

அதே மாதிரிதான், உங்க எதிராளியோட பலம் என்ன, பலவீனம் என்னன்னு முதல்ல முழுசா தெரிஞ்சுக்கோங்க. அவசரப்பட்டு கோபத்துல ஒரு முடிவு எடுக்காம, அமைதியா இருந்து சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிச்சாலே, பாதி வெற்றி நிச்சயம்.

2. சரியான நேரத்துக்குக் காத்திருத்தல்:

ஒரு இரையைத் தாக்குறதுக்கு, நரி சரியான தருணத்துக்காகப் பொறுமையா காத்திருக்கும். சிங்கம், புலி மாதிரி நேருக்கு நேரா மோதுற பலம் அதுக்கு இல்லைன்னு அதுக்கு நல்லாவே தெரியும். அதனால, எதிராளி அசந்த நேரத்துல, தனக்குச் சாதகமான சூழல் அமையும்போதுதான் அது தாக்கும்.

நீங்களும் அப்படித்தான் இருக்கணும். எதிராளி ரொம்ப பலசாலியா இருக்கும்போது, அவரோட மல்லுக்கட்டாம, அமைதியா உங்க நேரத்துக்காகக் காத்திருங்க. காலம் கண்டிப்பா உங்களுக்கான ஒரு வாய்ப்பைக் கொடுக்கும், அப்போ அடிச்சா அடி சரியானதா இருக்கும்.

இதையும் படியுங்கள்:
போலி பசி Vs உண்மையான பசி... கண்டறிவது எப்படி?
Fox

3. தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை:

காட்டுல புயல் அடிச்சாலும், வறட்சி வந்தாலும், நரி அதுக்கு ஏத்த மாதிரி தன் வாழ்க்கை முறையை மாத்திக்கும். கிடைக்கிறதை வெச்சு, உயிர் வாழக் கத்துக்கும். அதேபோல, உங்க எதிராளி ஒரு திட்டம் போட்டா, அதுக்கு ஏத்த மாதிரி உங்க திட்டத்தை உடனுக்குடனே மாத்திக்க கத்துக்கணும். 

"நான் இப்படித்தான் இருப்பேன்"னு பிடிவாதமா இல்லாம, சூழ்நிலைக்கு வளைஞ்சு கொடுத்து, அதுக்குத் தகுந்த மாதிரி உங்களை நீங்க மாத்திக்கிட்டா, உங்களை யாராலயும் வீழ்த்த முடியாது.

4. தந்திரமாகப் பின்வாங்குதல்:

ஜெயிக்கிறது மட்டும் புத்திசாலித்தனம் இல்லை, சில சமயம் தோத்து ஓடுறதும் புத்திசாலித்தனம்தான். தன்னை விட பலமான ஒரு விலங்குகிட்ட நரி மாட்டிக்கிச்சுன்னா, அது சண்டை போடாது. உடனே தப்பிச்சு ஓடிடும். ஏன்னா, உயிர் இருந்தால்தான் அடுத்த தடவை ஜெயிக்க முடியும்னு அதுக்குத் தெரியும். 

அதேபோல, ஒரு பிரச்சனை நம்ம கட்டுப்பாட்டை மீறிப் போகுதுன்னு தெரிஞ்சா, அங்க இருந்து கொஞ்ச காலம் பின்வாங்குறதுல தப்பே இல்லை. இது தோத்து ஓடுறது இல்லை, அடுத்த பெரிய பாய்ச்சலுக்கான தயாரிப்பு.

இதையும் படியுங்கள்:
காக்கிச்சட்டைக்குள் ஒரு கருணை நெஞ்சம்! உருவானது பசி தீர்க்கும் ரொட்டி வங்கி!
Fox

5. இலக்கில் மட்டுமே கவனம்:

நரிக்கு எவ்வளவு பசி இருந்தாலும், அது தன் இலக்கை நோக்கிப் போகும்போது, வழியில் இருக்கிற சின்ன சின்ன விஷயங்களுக்கு ஆசைப்படாது. அதோட முழு கவனமும், அது வேட்டையாடப் போற அந்த ஒரு இரை மேல மட்டும்தான் இருக்கும். 

அதே மாதிரி, உங்க எதிரியை ஜெயிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, உங்க கவனம் சிதறாம பார்த்துக்கோங்க. நடுவுல வர்ற சின்ன சின்ன சண்டைகள், விமர்சனங்கள் எதையும் பெருசா எடுத்துக்காம, உங்க இறுதி இலக்கு என்னவோ, அதை நோக்கி மட்டும் பயணம் பண்ணுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com