"நான் ஒரு Introvert" - இது கெத்தா இல்ல கேவலமா? உங்களை நீங்களே ஏமாத்திக்காதீங்க!

Introvert
Introvert
Published on

"நான் ரொம்ப இன்ட்ரோவெர்ட், அதிகமா பேசமாட்டேன்" - இந்த வரியை இன்னைக்கு ஒரு ஸ்டைலா, ஃபேஷனா சொல்லிக்கிறத நிறைய இடத்துல பார்க்க முடியுது. சோஷியல் மீடியால இதுக்கின்னே தனி ஆர்மி இருக்கு. ஆனா, உண்மையிலேயே இன்ட்ரோவெர்ட்டா இருக்கிறது ஒரு நல்ல விஷயம்தானா? இதைப்பத்தி கொஞ்சம் ஆழமா யோசிச்சுப் பார்க்க வேண்டிய நேரம் இது.

சினிமா காட்டும் மாயை!

நாம பார்க்குற சினிமா, டிவி ஷோக்கள்ல எல்லாம் இன்ட்ரோவெர்ட் கதாபாத்திரங்களை ஒரு மாதிரி சூப்பர் ஹீரோ மாதிரி காட்டுறாங்க. அவங்க அமைதியா இருப்பாங்க, ஆனா அவங்களுக்குள்ள ஆயிரம் திறமை ஒளிஞ்சிருக்கும். சரியான நேரத்துல வந்து எல்லாரையும் காப்பாத்துவாங்க. 

ஆனா, ஜாலியா, கலகலன்னு பேசுறவங்கள கொஞ்சம் அறிவில்லாதவங்க மாதிரி காட்டுவாங்க. இதை நம்பி, நாமளும் அமைதியா இருந்தா அறிவாளின்னு ஒரு தப்பான முடிவுக்கு வந்துடுறோம். மனுஷன் ஒரு சமூக விலங்கு. நம்மளோட வளர்ச்சியே மத்தவங்களோட பேசி, பழகி, புது விஷயங்களைக் கத்துக்கிட்டதுலதான் இருக்கு. ஆதிகாலத்துல தனியா ஒரு குகைக்குள்ள உட்கார்ந்திருந்தா, நம்ம இனம் இந்நேரம் இருந்திருக்குமா?

வாய்ப்புகளைத் தொலைக்கும் மெளனம்!

இன்ட்ரோவெர்ட்டா இருக்கிறதால நாம என்னவெல்லாம் இழக்குறோம்னு ஒரு லிஸ்ட் போட்டா அது ரொம்ப நீளமா போகும். ஸ்கூல்ல டீச்சர் கேட்குற கேள்விக்கு பதில் தெரிஞ்சும் சொல்லாம இருந்திருப்போம். ஒரு நல்ல வாய்ப்பு வரும்போது, நாலு பேர் முன்னாடி பேசத் தயங்கி அதை கோட்டை விட்டிருப்போம். 

காலேஜ்ல பிடிச்ச பொண்ணுகிட்டயோ, பையன்கிட்டயோ பேசாம இருந்து, கடைசியில வேற யாரோ கரெக்ட் பண்ணிட்டுப் போயிருப்பாங்க. வேலைக்குப் போற இடத்துல, நம்ம திறமையைப் பத்தி தைரியமா சொல்லத் தெரியாம, பதவி உயர்வு கிடைக்காம போயிருக்கும். இப்படி அமைதியா இருக்கிறேன்னு சொல்லிட்டு, வாழ்க்கையில கிடைக்க வேண்டிய எத்தனையோ நல்ல விஷயங்களை நாமளே தட்டிவிடுறோம்.

இதையும் படியுங்கள்:
மொழிபெயர்ப்பாளர்களின் முக்கியத்துவம் - தெரியாத பல உண்மைகள்!
Introvert

இது உங்க சுபாவம் இல்ல, ஒரு குறைபாடு!

நிறைய பேர் சொல்றாங்க, "நான் பிறந்ததுல இருந்தே இப்படித்தான், இது என் சுபாவம்" அப்படின்னு. ஆனா, இது உண்மையல்ல. நம்ம மூளை ஒரு சூப்பரான கம்ப்யூட்டர் மாதிரி. ஆனா அதுல இன்ஸ்டால் பண்ணியிருக்கிற சாஃப்ட்வேர்தான் பிரச்சனை. சின்ன வயசுல இருந்தே, "அதிகமா பேசாத", "கேள்வி கேட்காத" அப்படின்னு சொல்லிச் சொல்லியே நம்மள ஒரு கூட்டுக்குள்ள அடைச்சுடுறாங்க. 

இதனால, மத்தவங்க நம்மள என்ன நினைப்பாங்களோன்னு ஒரு தேவையில்லாத பயத்துல, பேச வேண்டிய இடத்துல கூட பேசாம இருந்துடுறோம். இது சுபாவம் இல்ல; இது ஒரு பழக்கப்பட்ட இயலாமை. அதாவது, இது ஒரு குறைபாடு. எப்படி ஒருத்தரால நடக்க முடியலையோ, அதுமாதிரி நம்மால மத்தவங்களோட தேவைக்கேற்ப பழக முடியல.

இதையும் படியுங்கள்:
நோய்களை விரட்டும் கொத்தமல்லி: ஆரோக்கியம் தரும் ஜூஸ் மற்றும் பல உணவுகள்!
Introvert

இன்ட்ரோவெர்ட்டா இருக்கிறது ஒரு தனிப்பட்ட தேர்வு இல்ல. அது பல நேரங்கள்ல நம்ம மேல திணிக்கப்பட்ட ஒரு விஷயம். அதை ஒரு பெருமையா நினைச்சுக்கிட்டு இருந்தா, வாழ்க்கையில நாமதான் பின்தங்கிப் போவோம். பேச வேண்டிய இடத்துல பேசித்தான் ஆகணும். நம்ம திறமையை நாமதான் வெளியுலகுக்குக் காட்டணும். 

அதனால, "நான் இன்ட்ரோவெர்ட்" அப்படிங்கிற அந்த போர்வையைத் தூக்கி எறிஞ்சிட்டு, தைரியமா வெளியே வாங்க. உங்களுக்கான வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக்கோங்க. மெளனம் சில சமயம் நல்லா இருக்கலாம், ஆனா எல்லா நேரமும் அது நம்மளைக் காப்பாத்தாது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com