உங்கள் லட்சியத்தை எட்ட முடியவில்லையா? நீங்கள் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்!

Goal
Goal
புவனா நாகராஜன்

கடந்த 1980முதல் கல்கி ,மங்கையர்மலர், தினமலர்,வாரமலர், பெண்கள் மலர், சமையல் குறிப்புகள் தமிழ்நாடு இ பேப்பர் மேலும் சில பத்திாிகைகளில் துணுக்குகள், கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதிவருகிறேன். தமிழ்நாடு இ பேப்பரில் 50க்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறேன். எனது கணவரின் உந்துதல் மற்றும் கல்கி குழுமம், மங்கையர்மலர், தினமலர் கொடுத்த ஊக்கம் தொடா்கிறேன்.

Updated on: 

மனித வாழ்க்கையில் பிறந்தது முதல் இறக்கும் வரையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் போராட்டம்தான்.

போராட்டமில்லாமல் வாழ்க்கையே இல்லை. 

போராடி வெற்றி பெறுவதைப் போல நோக்கமும், இலக்கும்  நமக்கான வெற்றியை தீா்மானிக்க வல்லதாகும்.

எந்த காாியத்தை எடுத்துக்கொண்டாலும் அதனை துவங்குவதற்கு முன் நாம் அதற்கான இலக்கு என்ன என்பதை புாிந்து அதை நிா்ணயம் செய்து தொடங்குவதே நல்ல ஆரம்பமாகும். அப்போது தான் நமது நோக்கமானது நிறைவேற வசதியாக இருக்கும்.

அதேநேரம் நமது எண்ணமும் செயல்பாடுகளும் நல்ல நோக்கத்தை நோக்கி பயணிக்க வேண்டுமே! இவற்றையெல்லாம் சரி செய்துகொள்ளாமல், தோல்வி ஏற்பட்டால் நம்மை நாமே நொந்து கொள்வதைத்தவிர இதில் நம்மை சாா்ந்தவர்களையோ, மூன்றாம் நபரையோ, குறை சொல்ல இயலாது.

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதைப்போல இலக்கில்லா பயணமும் தோல்வியிலே முடியும் என்றே கூறலாம்.

பொதுவாகவே வாழ்வின் முன்னேற்றப் படிக்கட்டில் நாம் நிதானமாக பயணிப்பதை கோட்டை விட்டு அடுத்தவர் மீது பழி போடவே கூடாது. அது ஆரோக்கியமானதே அல்ல.

அதைவிடுத்து புலம்புவதால் ஒரு நன்மையும் வரப்போவது கிடையாது.

இதைத்தான் சுவாமி விவேகானந்தர் தனது கூற்றாக,

"நோக்கம் எதுவென்பதை முதலில் தீா்மானி! 

அதுவே இலக்கு என்பதை உறுதி செய்துகொள்!

கையில் பணமில்லையே, உடலில் வலு இல்லையே, உதவிசெய்ய நண்பர்கள் இல்லையே என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீனாக்காதே! 

எதற்கும் பயப்படாதே! தயங்காதே! 

இலக்கை நோக்கி அடியெடுத்துவை! தொடர்ந்து முன்னேறு!

சோதனைகள் விலகும் பாதை தெளிவாகும், அதை யாராலும் தடுக்க முடியாது"  என கூறியிருப்பாா்.

ஆக அவரது பொன்மொழிகளுக்கேற்ப நமது பயணத்தின் இலக்கை நிா்ணயம் செய்யாமல் சரியான திட்டமிடல் இல்லாமல் மேற்கொள்ளக்கூடிய எந்த காாியமும் நமக்கு வெற்றியைத் தேடித்தராது என்பதை நினைவில் வைத்து அதற்கேற்ப நாம் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் கவனமாக கடக்க முயற்சி செய்து வெறியடைவோம் முயற்சி திருவினையாக்குமே! ஆக எங்கும் எதிலும் நிதானம், விவேகம், இலக்கு, விடாமுயற்சி, நோ்மறை சிந்தனை இவற்றை கடைபிடித்து வாழ்வதே சிறப்பான ஒன்றாகும்!

இதையும் படியுங்கள்:
உங்களிடம் இருக்கும் இந்த வேண்டாத சொத்து... அதை ஒழித்து வெல்வது எப்படி?
Goal
logo
Kalki Online
kalkionline.com