
சக்தி என்ற சொல் மனித ஆற்றலைக் குறிக்கிறது. யோகா தியானம் என்பது இந்த சக்தியை மேம்படுத்துவதல்ல அது ஒரு பக்க விளைவு. முதலில் சக்தி நிலை மேம்படுமா என பார்க்கலாம். ஆன்மிகப் பயிற்சிகளை அடிப்படையில் உள்நிலை அறிவியலார் அறியவேண்டும். இன்று வெளியுலக அறிவியலுக்கு தரப்படுகிற முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது. அது பொருளாதாரத்தை மேம்படுத்துமே தவிர வாழ்க்கை அவ்வளவு சுலபமில்லை.
மனிதனின் சுவாசக் காற்றில் விஷத்தைக் கலக்கும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சி எல்லைதாண்டி போய்விட்டது. தனக்கு எது கிடைத்தாலும் அதனை வெளிப்படுத்துகிற மனநிலை தன்னை மையப்படுத்க் கொள்கிற அகங்காரத்தின் வெளிப்பாடே தவிர அது ஆன்மிகம் அல்ல.
ஆன்மிகத்தில் ஆர்வமுள்ளவர்கள் உனக்கு தங்கள் சக்தி நிலை உயர உயர சில சக்திகள் கை வரப்பெறுவார்கள். உடனே அதை வைத்து விளம்பரம் தேடுவார்கள். ஒருவரின் சக்தி நிலை தன்னைத்தானை மேம்படுத்து வதற்குத்தானே தவிர இன்னொரு மனிதனின் எதிர்காலத்தைச் சொல்வதற்கோ ,அவர்களுக்கு ஆலோசனை சொல்வதற்கோ அல்ல. ஆன்மிகப் பயிற்சி பெறுபவர்கள் சித்திகளைப் பெற நேர்ந்தால் அவற்றை உள்நிலை நோக்கித் திருப்பவேண்டும்.
தங்கள் சக்தி நிலையை ஒரு காட்சிப் பொருளாக மாற்றுவதில் பயனில்லை. இது மனிதர்களை பலவகைகளில் சிறைப்படுத்தி விடும். உள் நிலையிலிருக்கிற இறைத் தன்மையை உணர்வதற்காகச் செல்கிற வழியில் சிலர் வணிக மனப்பான்மையோடு தங்கள் சக்திகளை வீணடிக்கத் தொடங்கினால் அவர்கள் தங்களை உணரமுடியாது.
வெளிச்சூழலில் பொருளாதார பலமும்,அதிகாரமும் வளர்ந்திருக்கிறது என்பது உண்மையானால் எப்போதும் இருந்ததை விட இப்போதுதான் ஆன்மிகத்திற்கான அவசியம் ஏற்பட்டிருக்கிறது. எப்போது நிறைய அதிகாரமும்,பொருளாதாரமும் மனிதனிடம் இருக்கிறதோ அவனுக்கு அதைக் கையாளுகின்றன முதிர்ச்சியும் வேண்டும். மற்றவர்கள் மீது ஆதிக்கத்தைத் செலுத்துபவர்கள் தங்கள் உள்நிலையை சமச்சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.
முசோலினி ஒரு பெரிய சர்வாதிகாரி. அவர் ஆட்சியில் ஒரு கார்யம் செய்தார். இத்தாலியில் எப்போதும் ரயில்கள் எல்லாம் தாமதமாக வந்து கொண்டிருந்தன. இது முசோலினிக்குப் பிடிக்கவில்லை. என்ஜின் ஓட்டுனர்களைச் சுட்டுக் கொன்றார். "தாமதமாக வந்தால் இதுதான் கதி" என எச்சரிக்கை விடுத்தார். பிறகு நேரத்திற்கு ரயில்கள் ஓடத் தொடங்கின. இது ஒரு சாதனை என அவன் நினைத்து அதைக் கொண்டாடும் விதமாக தன் உருவத்தை அஞ்சல் தலையாக வெளியிட்டான்.
இதில் ஒரு சிக்கல் இருந்தது. எப்போதெல்லாம் இந்த அஞ்சல் தலை ஒட்டப் படுகிறதோ அப்போதெல்லாம். அவை சீக்கிரம் உறையிலிருந்து விழுவதை கவனித்தார்கள் தலைமை தபால் அதிகாரி அச்சத்தோடு "ஐயா, தலைசிறந்த பசைகள் அஞ்சல் நிலையங்களில் இருந்தாலும் அஞ்சல் நிலையங்களில் பெரும்பாலானோர் எச்சிலைத் தடவி ஒட்டுவதைத்தான் விரும்புகிறார்கள். பசையைப் பயன்படுத்துவதில்லை அதனால்தான் இந்த அஞ்சல் தலைகள் உதிர்ந்து விடுகின்றன'" என்று முசோலினியிடம் கூறினாராம்.
தன்னைத்தானே வியந்து பாராட்டி அஞ்சல்தலை வெளியிடுவதற்கு முசோலினியின் அதிகார போதை ஆட்டுவித்தது. ஆனால் சமுதாயமோ அந்த தபால் தலையில் எச்சல் துப்பி அவமானப்படுத்த ஆசை கொண்டது. அதிகார வசதி கையிலிருக்கும்போது உள்நிலை சமச்சீராக இல்லாத மனிதர்கள் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். எனவே உள்நிலை அறிவியலார் கண்ட யோகா தியானம் போன்ற பயிற்சிகள் பழைய சமூகத்தை விட இன்றுதான் அதிகம் தேவைப்படுகிறது.