
வாழ்க்கையின் அன்றாட தடைகளைத் தாண்டி முன்னேறி வருவதற்கான உந்துதலையும் உத்வேகத்தையும் கண்டறிவது மிக கடினமாக ஒன்றாகும். உங்கள் வாழ்க்கையில் உறவு பிரச்னைகள் அல்லது அன்றாட தொந்தரவுகள் என எதுவாக இருந்தாலும், இவை உங்கள் மன ஆரோக்கியத்தை விரைவாகப் பாதிக்கும் . உங்களை நேர்மறையாக வைத்திருக்கவும் உற்சாகமாகவும் இருப்பதற்கு உதவும் வகையில் முக்கியமான பத்து கோட்பாடுகளைப் பற்றி இங்கே காணலாம்.
1. “என்னால் பெரிய காரியங்களைச் செய்ய முடியாவிட்டாலும், சிறிய காரியங்களைச் சிறந்த முறையில் செய்ய முடியும்." - மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர்”.
அதாவது நமக்கு எது நன்றாகத் தெரியுமோ, அது சிறிய விஷயமாக இருந்தாலும் சரி, சிறிய வேலையாகத் தெரிந்தாலும் சரி அதை நம்மால் சிறப்பாக செய்யமுடியும் என்ற நம்பிக்கை/உறுதி நம்முள் வந்தாலே போதும், வெற்றி நிச்சயம். அவ்வாறு நினைக்கும்போதே நமக்கு தெரிந்த வேலையை தடையில்லாமல் செய்ய நம் மனதில் உற்சாகம் தானாகவே வரும் அடுத்தவர்களுக்கு முன்னால் இந்த உறுதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நமக்கு எது தெரியுமோ அதை சொல்வதிலோ அல்லது செய்வதிலோ 100% confident இருக்க வேண்டும். பிரமோஷன் வேண்டும் என்பதற்காக பெரிய ப்ராஜெக்டை எடுத்து திக்கு முக்காடுவதற்குப் பதிலாக சிறிய ப்ராஜெக்டை சிறப்பாக செய்தாலே பதவி உயர்வும் தானாகவே வரும்.
2. “வாய்ப்புகள் வரும் வரை உட்கார்ந்து காத்திருக்காதீர்கள். எழுந்து அவற்றை உருவாக்குங்கள்." - மேடம் சிஜே வாக்கர், அமெரிக்க தொழில்முனைவோர் மற்றும் ஆர்வலர்”.
வாய்ப்புக்கள் வரும் வரும் என்று உட்கார்ந்துகொண்டே இருந்தால் காலம் தான் கடந்து போகும். உரிய வயதில் வாய்ப்பை நாம் தான் உருவாக்கிக்கொள்ள வேண்டாம். வாய்ப்பு தானாக வரும் என்று உட்கார்ந்து கொண்டே இருந்தால் வாய்ப்பு எப்போது தானாக வருமோ அப்போது அதற்கேற்ற வயது இருக்காது. ஆகவே நீங்களே பிறரிடம் கேட்டோ அல்லது தேடி அலைந்தோ வாய்ப்பை பெற்றுக்கொள்ளுங்கள்.
3. “நேற்று நீங்கள் செய்தது இன்னும் உங்களுக்குப் பெரிதாகத் தோன்றினால், இன்று நீங்கள் அதிகம் செய்யவில்லை என்று அர்த்தம்." - மிகைல் கோர்பச்சேவ்
சில பேர் பேச்சுவார்த்தையில் கூறுவார்கள் – நேற்றைக்கு நிறைய வேலை செய்தேன் என்று. அப்படி என்றால் இன்று அத்தனை செய்ய வில்லை என்றுதானே அர்த்தம். நேற்றைய பரீட்சையில் நிறைய எழுதிவிட்டேன் ஆகவே இன்றைய பரீட்சையில் அத்தனை எழுத முடியாது என்ற கூற முடியுமா??? ஆகவே எப்போதும் தினமும் செய்யவேண்டிய காரியத்தை வாடிக்கையாக செய்யுங்கள், நேற்றே நிறைய செய்துவிட்டேன் என்று சொல்லும் போது நம்முடைய உற்சாகம் குறைந்து முன்னேற்றத்தை தடுக்க வழி வகுக்கும்.
4.“எல்லா கனவுகளும் எட்டக்கூடிய தூரத்தில் உள்ளன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவற்றை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பதுதான்." -வயோலா டேவிஸ், அமெரிக்க நடிகை.
நாம் எல்லோருமே பொதுவாக பிற்காலத்தில் எதுவாக ஆக வேண்டும் என்று மனதிலியே கனவு கண்டு கொண்டிருப்போம். ஆனால் வெறுமென நினைத்து கொண்டிருந்தால் அந்த கனவு எப்படி நினைவாகும். நாம் கண்ட கனவை ஒரு உற்சாகத்தோடு எடுத்து கொண்டு தேவையான வழியை வகுத்து நாளுக்கு நாள் நகர்ந்து கொண்டே போனால் நிச்சயமாக நம் கனவை நாம் நிஜமாக்கலாம்.
5. “வெற்றி இறுதியானது அல்ல, தோல்வி ஆபத்தானது அல்ல: தொடர தைரியம்தான் முக்கியம்." - வின்ஸ்டன் சர்ச்சில்
ஒரு போட்டியில் வெற்றியோ அல்லது தோல்வியோ அடைந்து விட்டால் அத்தோடு நிறுத்தி கொள்வது தவறானது. தோல்வி அடைந்தாலும் நம்முடைய உற்சாகத்தை கை விடாமல் மனத் தைரியத்தோடு மென்மேலும் எதிர்நோக்கி நீச்சல் அடிக்க வேண்டும். இந்த வசனம் முக்கியமாக மாணவர்களுக்கு மிகவும் உகந்த வசனம்.
6. “எதிர்மறை எண்ணங்களை நேர்மறையான எண்ணங்களால் மாற்றியவுடன், நீங்கள் நேர்மறையான முடிவுகளைப் பெறத் தொடங்குவீர்கள்." - வில்லி நெல்சன்
நம்மிடம் இருக்கும் negativity ஐ அழிப்பதற்கு positive எண்ணம் தேவை. எப்போது நாம் சிறிதளவு positive ஆக சிந்திப்போமோ அப்போதே நமக்கு நல்ல நேர்மறையான முடிவுகள் கிடைப்பதற்கான வழி கிடைக்க ஆரம்பித்துவிடும். இந்த தரவை நான் நினைக்கிறேன் எனக்கு சம்பளம் கூட கிடைக்கும் என்று ஒருவன் நினைக்கும் போது அவன் automatic ஆக தன் வேலையில் அவனை அறியாமலேயே அதிக கவனம் செலுத்துகிறான், அதன் காரமாக உண்மையிலேயே சம்பள உயர்வு கிடைக்கிறது. ஆகவே நேர்மறை எண்ணங்களை வளர்க்க முயற்சி செய்யுங்கள்.
7. நீங்கள் செய்ய முடியாது என்று நினைக்கும் விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும்." - எலினோர் ரூஸ்வெல்ட்
நமக்கு எது செய்ய முடியாது என்று அடிக்கடி நினைக்கிறோமோ அதை செய்ய முயற்சிக்க வேண்டும். ஒரு வேளை அதில் நமக்கு அதிக வெற்றி கிடைத்தால் எப்படி இருக்கும். அதற்குப் பிறகு நாம் எந்த செயலையுமே தெரியாது என்று கூறவே மாட்டோம். ஆகவே எதையும் எனக்கு தெரியாது என்று சொல்வதற்கு பதிலாக அதையும் முயற்சி செய்து பார்க்க வேண்டும்.
8. சூரியன் முதலில் உதிக்கும்போது பலவீனமாக இருக்கும், மேலும் நாள் செல்லச் செல்ல வலிமையையும் தைரியத்தையும் சேகரிக்கிறது." - சார்லஸ் டிக்கன்ஸ்
சூரியன் காலையில் உதிக்கும்போது ரொம்ப dull ஆகத் தான் இருக்கும். ஆனால் போக போக ரொம்ப தைரியத்தோடு கடுமையாக இருக்கும். அது போல நாமும் எந்த துறையில் வேலை புரிந்தாலும் சரி, எந்த வகுப்பில் படித்தாலும் சரி, முதலில் கொஞ்சம் speed இல்லை என்றாலும் நாளாக நாளாக நம்மை நாமே உற்சாகப்படுத்தி கொண்டு மென்மேலும் உயர்வதற்கான வலிமையைப் பெறவேண்டும்.
9. "காற்றின் திசையை என்னால் மாற்ற முடியாது, ஆனால் எனது இலக்கை எப்போதும் அடைய எனது பாய்மரங்களை சரிசெய்ய முடியும்." - ஜிம்மி டீன்
உதாரணத்திற்கு உங்களுக்கு engineer ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கிறது, உங்களால் engineering படிப்பதற்கு நியமிக்கப் பட்டுள்ள eligibility ஐ மாற்ற முடியுமா? முடியாது, நீங்கள் அதற்குரிய தகுதிக்கேற்றவாறு படித்து அதைப் பெறவேண்டும் என்பதே இந்த வசனத்தின் கருத்து.
10. “ஒருபோதும் தவறு செய்யாத ஒருவர் புதிதாக எதையும் முயற்சித்ததில்லை." - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
இந்த கோட்பாட்டில் கூறப்பட்டுள்ள கருத்து என்னவென்றால் புதியதாக ஒரு தொழிலையோ அல்லது செயல்களையோ செய்யும் தவறு ஏற்படுவது இயல்பு, அதைக்கண்டு தடுமாறாமல் பயப்படாமல் மேலும் மேலும் அதை நன்றாக கற்றுகொண்டு செய்யும்போது நமக்கு வெற்றி நிச்சயம்.
இந்த 10 கோட்பாடுகளும் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். முடிந்த அளவிற்கு இவற்றை கடைபிடித்து உற்சாகத்தோடும் இன்பமாகவும் வாழ முயற்சி செய்யவும்.