
நேரம் கண்போன்றது. காலம் பொன்போன்றது என்ற வாா்த்தைகளுக்கேற்ப நேரத்தை சரிவர பயன்படுத்தும் நபரே பலசாலியாகிறாா்.
அதே நேரம் நேரத்தை சரிவர பயன்படுத்ததாத நபர்களோ கடைசியில் முட்டாள்கள் ஆகிறாா்கள், அவர்களிடம் இருக்கும் விஷயம் என்ன தொியுமா அவர்களின் பலவீனமே,! பலவீனத்தின் அடித்தளம் எது தொியுமா? சோம்போறித்தனம் அதுவே இங்கே முன்னிலை வகிக்கிறது,
பொதுவாக ஒரு காாியத்தை செய்ய நினைக்கும்போது தடைகள் தொடர்ந்து வரும் அப்போது நமக்குதேவை "விடாமுயற்சியும்" "விவேகமும்தான்."
ஜிம்ரான் என்ற அறிஞர் தன்னுடைய கருத்தாக "நேரம் ஒரு பொிய சொத்து, அதை முதலீடு செய்பவர்கள் புத்திசாலிகள் மாறாக விரையம் செய்பவர்கள் முட்டாள்கள்" எனக்கூறியுள்ளாா் அதைப்போல நேரத்தை சரிவரபயன்படுத்தும் புத்திசாலிகள் உழைப்பை மூலதனமாக கொண்டு வாழ்க்கையில் உச்சம் தொடுகிறாா்கள். அடுத்தடுத்து கிடைக்கும் நேரத்தை நேரம் காலம் பாராமல் பயன்படுத்துகிறாா்கள் அவர்களே தொடர் வெற்றியில் திளைக்கிறாா்கள்,
மாறாக நேரத்தை விரயம் செய்யும் முட்டாள்களோ நேரம் சரியில்லை, எனக்கு அதிா்ஷ்டமே இல்லை, என நேரத்தை குறை சொல்வது வாடிக்கையான விஷயமாகி விடுகிறது!
இப்படிப்பட்ட நிலையில் உழைப்பை மூலதனமாக கடைபிடிக்காத நபர்களுக்கு பொறாமைஎன்ற தீய எண்ணம் வந்து விடுகிறதே! அது ஒரு பொிய கொடுமையான நோய் அது நமது காலுக்கு கீழே நிழல் போலவே இருக்கும்.
அதோடு சோம்பேறித்தனம் அவரை சூழ்ந்துகொள்ளும் என்பதும் நிஜமே இத்தகைய நபர்களின் இயலாமையே பொறாமையாக மாறிவிடுகிறது,
அப்போது அவர்கள் பேசும் பேச்சைப்பாா்த்தால் நமக்கே ஆத்திரமாக இருக்கும்!
எப்படி முன்னேறினான் ?
ஏதோ குறுக்கு வழியில் பணம் வந்திருக்குமோ?
மாயமந்திரம் செய்து, மை வைத்திருப்பானோ? எப்படியெல்லாம் அவரது மனதானது அவருக்கே உாிய பொறாமைக்குணங்களோடு சிந்திக்க வைக்கிறது, அது எவ்வளவு கேவலமான செயல் அதை விடுத்து அவன் எவ்வாறு முன்னேறினான். எப்படி இவ்வளவு உயரம் தொட்டான் என்ற நோ்மறை சிந்தனையோடு சிந்தித்துப் பாா்க்கவேண்டும். அதுதான் நல்ல வழி.
அடுத்தவர்களைப் பாா்த்து பொறாமைப்படுவதால் நமக்குதான் நஷ்டம் என்பதை உணர்ந்து உழைப்பவரே புத்திசாலி, பொறுமையால், நம்பிக்கையால், நல்ல சிந்தனைகளால், விவேகத்தால், உன்னத உழைப்பால், ஒருவா் பல வழிகளில் கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி முன்னேறுகிறாா்.
மாறாக நேரத்தை சரிவர பயன்படுத்தாமல் உழைப்பை உதாசீனம் செய்யும் நபர்களோ பெறாமை எனும் தீயில் சிக்கி வாழ்வைத்தொலைத்துவிட்டு சின்னாபின்னமாகிறாா்கள்,
ஆக, பொன்னான நேரத்தை பயன்படுத்துவதே சாலச்சிறந்த ஒன்றாகும்.