இளையவர் முதல் பெரியவர்வரை எல்லாரும் காதலை விரும்புவார்கள். காதலே பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது காதலித்திருக்க மாட்டோமா? என்று ஏங்குவார்கள். காதல் இல்லா மனிதன் இல்லை, காதலிக்காதவன் மனிதனே இல்லை. ஆனால், சிலர் காதல் என்னவென்று தெரிவதற்கு முன்னரே காதலில் இறங்கிவிடுவார்கள். அப்படி இறங்கியவர் களுக்குப் பல கேள்விகளும் சந்தேகங்களும் எழும். அதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
எதனால் காதலிக்கிறோம்? அன்பாக இருக்கிறார்கள் என்பதாலா?
இல்லை, அவர்கள்தான் என்னிடம் வந்து முதலில் காதலைக் கூறினார்கள் என்பதாலா?
அல்லது, பார்க்க அழகாக இருக்கிறார்களே, அதனாலா?
இது உண்மையில் காதல்தானா? இப்படியெல்லாம் உங்களுக்கு எப்போதாவது சந்தேகம் வந்திருக்கிறதா?
இது உண்மையிலுமே காதல்தானா என்று சந்தேகம் உள்ளவர்களுக்கு ஐந்து உளவியல் உண்மைகளை உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
1. முதலில் அவர்கள் உங்களை விரும்பி, அவர்களே வந்து உங்களிடம் காதலைக் கூறினார்கள். அதன்பிறகு தான் நீங்கள் அவர்களை விரும்ப ஆரம்பித்தீர்கள் எனில், அதற்குப் பெயர் காதல் இல்லை. அது ஒரு வகையான அனுதாபமே. நீங்கள் அவர்களை உண்மையாகவே காதலிக்கிறீர்களா என்பது சந்தேகமாகக் கூட இருக்கலாம்.
2. அவர் அழகான உடை அணிகிறார்கள். அழகாகப் பேசுகிறார்கள். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்கள் என்று அவர்களை விரும்பினீர்கள் எனில் அதற்குப் பேர் ஈர்ப்பு மட்டுமே காதல் இல்லை.
3. ரொம்ப அன்பாக இருக்கிறார்கள், யார் எது கேட்டாலும் செய்து தருகிறார்கள். நான் கேட்டால் இல்லை என்று சொல்லமாட்டார்கள். அதற்காகத்தான் அவர்களை விரும்பினேன் என்று சொன்னீர்கள் எனில், அவர்களை ரசிக்கிறீர்கள். ஆனால் இது காதல்தானா என்பது சந்தேகம்தான்.
4. காசு பணமெல்லாம் நிறைய இருக்கிறது. அதனால் அவர்களைப் பிடித்திருக்கு என்று சொன்னீர்கள் எனில், அதற்குப் பேர் ஆர்வம் மற்றும் அவர்கள் பொருளின் மீதுள்ள மோகம். இதற்குப் பெயர் காதல் என்று சொல்லவே முடியாது.
சரி அப்போது உண்மையான காதல்தான் எது?
‘மேற்கூறிய எந்த காரணமும் இல்லை. இவர்களை ஏன் பிடித்திருக்கிறது என்றும் தெரியவில்லை. எப்போதும் ஒரு குழப்பமாகவே இருக்கிறது. இவர்களைப் போய் எப்படி நாம் விரும்பினோம் என்று தோன்றுகிறது’ என்றெல்லாம் தோன்றினால், இதுதான் உண்மையான காதல்.
நீங்கள் உண்மையாகவே காதலிக்கிறீர்களா? அல்லது அது அனுதாபம், ஈர்ப்பு, கவர்ச்சி, ஆர்வம், மோகம் இதில் ஏதேனும் ஒன்றா என்று இப்போது சிந்தித்துப் பாருங்கள்.