தனித் தனி தீவுகளில் வாழாதீர்கள்..!

Motivational articles
Living alone
Published on

வெகு வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் பலர் வாய்ப்புக்கள் இருந்தும் தனித்து வாழ்வதை பின் பற்றுகின்றனர்.

வேறு சிலர் தனிமைபடுத்திக் கொண்டு தங்கள் காலத்தை கழிக்கின்றனர்.

மேலும் சிலர் தனிமையாக வாழ்வதே சாலச் சிறந்தது என்ற கொள்கையை கடைப்பிடிக்கின்றனர்.

ஒவ்வொருவரின் கண்ணோட்டம் அல்லது அனுபவத்தில் அவர்கள் முடிவு சரியானதாக இருக்கக்கூடும்.

சந்தர்ப்பம், வசதி, வாய்ப்புக்கள் இருந்தும் தனியாகவோ அல்லது தனிமைபடுத்திக்கொண்டு வாழ்பவர்கள் சிலவற்றை இழக்கிறார்கள். அவற்றின் முக்கியத்துவம், மதிப்புபோன பிறகு அதே வீரியத்துடன் கிட்டாது என்பது உண்மை.

இப்படிப்பட்டவர்கள் தனி தனி தீவுகளில் வாழ்வதினால் முக்கியமாக இழப்பது மற்ற குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு, அரவணைப்பு, தேவையான சமயத்தில் கண்டிப்பு, யோசனைகள் கிடைப்பது, சரியான வழி நடப்பு (appropriate timely guidance) போன்றவைகள் ஆகும்.

ஒரு தனிப்பட்ட நபர் எவ்வளவு படித்திருந்தாலும், அறிவாளியாகவும், திறமைசாலியாகவும் திகழ்ந்தாலும் சில இக்கட்டான சூழ்நிலைகளில் தனிமையில் வாழும் நபரால் அல்லது தனிமைபடுத்திக் கொண்டவரால் தனியாக பதட்டம் அடையாமல் முழுமையாக சிந்தித்து முடிவு எடுப்பதோ செயல்படுவதோ அவ்வளவு சுலபமில்லை. அத்தகைய தருணங்களில் கவனம் செலுத்தி செயல்படுவதும் கடினம்.

அனுபவம் மிக்க குடும்ப உறுப்பினர்கள் உடன் இருந்தால் நிலைமையை புரிந்துக்கொண்டு தேவையான தையரியம் அளிக்கவும், உற்சாகம் கொடுக்கவும் கண்டிப்பாக முயல அதிக வாய்ப்புக்கள் உண்டு.

இதையும் படியுங்கள்:
அறிவுரைகளை ஆள்வது எப்படி? அறிவுரைக்கு ஓர் அறிவுரை!
Motivational articles

அவ்வாறு கிடைக்கும் சப்போர்ட் நினைத்து பார்க்க முடியாத, எதிர் பாராத மனஅமைதி, முடிவுகளை அளிக்கும்.

அந்த இக்கட்டான சூழ் நிலையை எப்படி எதிர்கொண்டு முறியடிப்பது என்று பிராக்டிக்கலான யோசனைகள் அந்த தனிப்பட்ட நபரின் வாழ்க்கை முன்னேற்றத்தில் உண்மையான அக்கறைக் கொண்ட உறவினர்கள் உதவி செய்ய வாய்ப்புக்கள் அதிகம்.

ஒரு நபர் தனிமை நிலையில் உடல் நலம் சரியில்லை என்றால் தனியாக மருத்துவமனைக்கு செல்வது, தொடர்ந்து சிகிச்சை பெற்றுக்கொள்வது எல்லா நேரங்களிலும் இயலாது.

சேர்ந்து வாழ்வதிலும் சில கஷ்டங்கள் இருந்தாலும், தனிமை படுத்தி வாழ்வதில் இருக்கும் கஷ்டங்கள், நஷ்டங்களை விட பரவாயில்லை என்று உணரவைக்கும்.

இங்கு தனிப்பட்ட நபரின் குறைகள், கஷ்டங்கள், சந்திக்கும் சவால்கள் போன்றவைகளை காது கொடுத்து கேட்டு உரிய யோசனைகள் பகிர்ந்துக்கொண்டு தேவையான நடவடிகைகள் எடுக்க உதவ நபர்கள் இருப்பது பெரிய துணையாக கருத்தப்படும்.

அத்தகையை சூழ்நிலையில் தனிமைபடுத்தி வாழ்பவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் அனுபவித்தவர்களுக்கு நன்கு புரியும்.

இதையும் படியுங்கள்:
முதியோர்கள் குழந்தைகளுடன் நேரத்தை கழிப்பதால் உருவாகும் மனமகிழ்ச்சி!
Motivational articles

எது எப்படியோ சிலர் வீம்பிற்கு தனித்து வாழ்ந்து தேவைப்படும் சமயங்களில் உதவி கரம் நீட்ட யாரும் இன்றி தவிப்பதை விட சேர்ந்து வாழ பழகிக்கொள்வது ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கை அளிக்கவும், உதவி செய்யவும் உதவும்.

அப்படிப்பட்டவர்கள் தனிமைபடுத்திக் கொண்டு தனி தீவில் வாழ்வது போன்ற பிம்பத்தை உடைத்து, கூட்டாக வாழ்ந்து பயன் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com