
எந்த துறையிலும் புகழ் பெறுவது என்பது அவ்வளவு சுலபமில்லை.
அதற்கு தன்னம்பிக்கை, இடை விடாத கடினமான உழைப்பு, தியாகங்கள், பிரச்னைகளை எதிர்கொண்டு கடந்து செல்லும் திறமை, போட்டியாளர்களை வெல்லும் செயல்பாடு ஆகிய போன்றவை மூலதனமாக தேவை. அப்படி எல்லாம் கடந்து சாதித்து விட்டால் புகழ் பெறலாம்.
அத்தகைய புகழுடன் இலவச இணைப்பாக வருவது பெற்ற புகழை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பெரும் அழுத்தம்.
இளம் வயதில் புகழ்பெற்ற பலரில் சிலருக்கு மட்டும்தான் அத்தகையை அழுத்ததை சிறப்பாக கையாளும் திறமை இருக்கின்றது. திடீரென்று எதிர்பாராமல் வரும் பெயர், புகழ், பணம், சமூகத்தில் உயரும் மதிப்பு ஆகியவை குறிப்பிட்ட நபரை திக்கு முக்காட வைத்து திகைக்கவும் செய்ய வைக்கின்றது.
ஒரேயடியாக இவையெல்லாம் ஏற்படுத்தும் இன்ப தாக்குதலை அனுபவம் இல்லாத மற்றும் தயார் நிலையில் இல்லாத காரணங்களால் என்ன செய்வது என்று புரியாமல் தங்களை மீறிய தேவையற்ற செயல்களில் ஈடுபடுத்திக்கொண்டு பெற்ற பெயர், புகழ், பணம், சேர்த்த சொத்து, எல்லாவற்றையும் இழப்பதுடன் ஏற்படும் சுமைகள், அழுத்தங்கள் இவைகளில் இருந்து மீளமுடியாமல் மேலும் இருப்பதையும் தொலைத்து தவிக்கிறார்கள்.
இவைகளுக்கு முக்கிய காரணம் போதிய அனுபவம் கிடையாது இத்தகையை தீடீர் வரவுகளை வரவேற்று, மேனேஜ் செய்து, தக்க வைத்துக் கொள்வதற்கும் அவைகள் மூலம் ஏற்படும் தாக்குதல்களை சமாளிப்பதற்கும்.
உடன் வயதில் முதிர்ந்த, உலக அனுபவம் பெற்ற நபர் இந்த மாதிரி சமயங்களில் சரிவர நடத்த இல்லாது இருப்பதும் ஒரு காரணம்.
இந்த தீடீர் புகழ் கண்களை மறைப்பது மட்டும் அல்லாமல் தேவையற்ற பாதையில் செல்ல தூண்டி இழுப்பப்தை உணர்ந்து ஒதுங்க மறுப்பதும் மற்றும் ஒரு பெரிய காரணம். வெகு சிலரால் முடியும் பொழுது மற்றவர்களுக்கும் சாத்தியம் ஆகும்.
புகழ் பெற உழைத்ததுபோல் குறிப்பிட்ட நபர் சுயகட்டுப்பாட்டை வளர்த்துக்கொண்டு கட்டாயமாக பின் பற்றுவதை தலையாய கடமையாக எப்பொழுதும் பின் பற்றவேண்டும்.
புகழை அடைந்து தக்கவைக்க தெரியாமல் காற்றில் பறக்கவிட்டு, எல்லாவற்றையும் இழந்து வாழ்வதற்கு தவிப்பவர்களின் அனுபவங்களை பாடமாக தெரிந்து, புரிந்துக்கொள்ள வேண்டும்.
உண்மையான அனுபவம் மிக்க நலம் விரும்பிகளுடன் கலந்து ஆலோசித்து முன்னேறுவதற்கு.தேவையான முறையில் செயல்பட வேண்டும்.
தங்கள் துறையில் எப்படி அடுத்த நிலைக்கு நகரலாம் போன்ற ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
கவர்ந்து இழுக்கவும், சலனம் உண்டு செய்யும் செயல்களில் ஈடுபட தூண்டும் நிகழ்வுகளில் ஈடுபடாமல் ஒதுங்கவும், தவிர்கவும் பழகிக் கொள்ள வேண்டும். இதற்கு தேவை வலுவான மனோதிடம், என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை.
புகழ் அடைய பாடுபட்டவர்களால் அடைந்த அத்தகையை புகழ் தங்கள் கை விட்டு நழுவி விடாமல் இருக்க செய்யவும் முடியும்.