வாழ்க்கையில் முதலிடம் பிடிக்க உழைப்பு மட்டும் போதுமா? இலக்கும் தெளிவும் தரும் வெற்றி இரகசியம்!

தெளிவான இலக்கும் விடாமுயற்சியும் உங்களை சிகரத்திற்கு கொண்டு செல்லும் வழிகாட்டல்.
வெற்றி
வெற்றிGemini image
Updated on

வாழ்க்கையில் எல்லோரும் முதலிடத்தைப் தேடித்தான் ஓடுகிறோம். வேறு சிலருக்கு தான் அது கிடைக்கிறது. மற்றவர்களுக்கு அது கனவாகிப்போகிறது. ஆசை மட்டுமே வெற்றி தராது. கடின உழைப்புதான் வெற்றியைத்தரும்.

முதல் கோடீஸ்வரராக விளங்கியவர் ராக்பெல்லர். வயது முதிர்ந்த நிலையிலும் அவர் உழைத்துக்கொண்டிருந்தார். ஒருமுறை விமானப் பயணம் அவர் மேற்கொண்டபோது அவருக்கருகில் இருந்த இளைஞன் அவரை அடையாளம் கண்டு கோடிக்கணக்கில் பணம் வைத்திருந்தாலும் இன்னும் ஏன் உழைக்கணும்?. ஓய்வு எடுக்கலாமே எனக்கேட்டார்.

அதற்கு அவர், "தம்பி இந்த விமானத்தை இயக்கும் விமானி இயக்குவதை நிறுத்தினால் என்ன ஆகும்!" என கேட்க இளைஞன் விபத்து ஏற்படும் என்று கூறினார்.

அதற்கு ராக்பெல்லர் வாழ்க்கையும் பயணம் மாதிரிதான் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்‌ உடல் மனம் இரண்டுக்கும் அது மகிழ்ச்சியைத் தரும் என்றார்.

உழைப்பு ஒருவரை முதலிடத்தில் அழகு பார்க்கும்.‌ நாம் ஒரு காரியத்தை முழு மூச்சாக ஈடுபடும்போது அது செயலாக விரிகின்றது.‌ நம் உழைப்பின் மூலமே செயல்கள் நிறைவேறுகின்றன.

நாம் என்ன எண்ணுகிறோமோ அதை செயல்படுத்த முனைகிறோம். எண்ணாமல் செயல்களில் இயக்குபவர்கள் முட்டாள்கள் இதைத்தான் திருவள்ளுவர் "எண்ணித்துணிக" கருமம் என்றார். முதலிடத்தைப் பெறவேண்டும் என்று எண்ணிவிடாமல் உழைப்பவன் அந்த இடத்தைப் பெறுகிறான்.‌ ஒருசிலர் சிறு துரும்பை கூட அசைக்காமல் முதலிடம் வருவேன் என்று கூறுவார்கள்.‌ எண்ணங்கள் செயல்வடிவம் பெறும்போது உழைப்பு மூலம்தான் வெற்றி கிட்டும் வெறும் வாய்ப்பைப் வைத்து வெற்றி காண முடியாது.‌ ஒரு சிலர் கடுமையாக உழைத்தும் வெற்றியடைய முடியாதபடி உள்ளார்கள்.

இதற்குக் காரணம் தெளிவற்ற சிந்தனை. அவர்கள் கோடாரியாகவே இருக்கிறார்கள்.‌ எல்லா கோடாரிகளும் கடுமையாக உழைக்கின்றன. ஆனால் இறுதியில் அது கோடாரியாகவே இருக்கிறது. வெறும் உழைப்பு மட்டும் போதாது. தெளிவான சிந்தனையூடன் நமக்கு ஒரு குறிக்கோள், இலக்கு வைத்துக்கொண்டு உழைக்கவேண்டும்.

வெற்றி
வெற்றிGemini image

நாம் ஒரு பயணத்திற்கு திட்டமிடுகிறோம்‌. எங்கே சேர்வது, எத்தனை மணி நேரத்துக்குள் செல்வது என்பதை அறிந்திருக்க வேண்டும். இலக்கில்லா பயணம் வீண். இலக்கற்ற பயணம் அதலபாதாளத்தில் கொண்டுவிடும்.

இதையும் படியுங்கள்:
100 சதவீதம் உண்மை… இந்த கதைய படிச்சா உங்க வாழ்க்கையே மாறிடும்!
வெற்றி

நாம் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் உள்ளத்தில் இந்த தொழிலில் முதல்வராக வரவேண்டும் என்ற எண்ணம் வேண்டும். எண்ணங்களின் விளைச்சலே வெற்றியாக முடியும்‌ அதற்கு உள்ளம் சிறந்த விளைநிலமாக இருக்கவேண்டும்.‌ நிலத்தை பண்படுத்தும் விதைகள் பற்றி நாம் அறிவோம்.‌ உள்ளத்தை பண்பட வைக்க லட்சியத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். உள்ளத்தில் உயர்ந்த குறிக்கோள் அமைந்துவிட்டால் அதில் விளையும் எண்ணங்களும் உயர் நிலையை அடையும்

எண்ணங்கள் உயர்நிலை அடையும்போது நம் செயல்களில் திறன் கூடுகிறது. அது வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். உழைப்பு ஒன்றே நம்மை முதலிடத்தில் கொண்டு வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
உங்களை 99 சதவீதம் பேரை விட முன்னேற்றும் அந்த சீக்ரெட் இதோ!
வெற்றி

நாம் வெற்றி பெறவேண்டுமென்றால் முதல் இடத்தில் வரவேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டேயிருக்க வேண்டும். நம் மனத்தில் தொடர்ந்து எண்ணங்கள் அலையடித்துக் கொண்டிருக்க வேண்டும்.‌ அப்போதுதான்தான் அது வெற்றியில் முடியும். முதலிடம் நமக்காக காத்திருக்கும்போது நாம் ஏன் சோம்பிக் கிடக்க வேண்டும்? அதை நோக்கிப் பயணத்தை முழு மூச்சாகக் தொடர்ந்தால் முதலிடம் நிச்சயம் நமக்குத்தான் என்பது திண்ணம்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம் உங்கள் எண்ணங்களைச் சரியான இலக்கை நோக்கித் திருப்பி, வீண் உழைப்பைத் தவிர்த்து, குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வாழ்க்கையில் முதலிடத்தைப் பிடிப்பதற்கான தெளிவான உத்தியைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com