இந்த 6 பண்புகளும் இருந்தால் நீங்கள் தான் பெஸ்ட் BOSS!

ஒரு உண்மையான தலைவர் அதிகாரத்தால் அல்ல, தனது ஆளுமை, நேர்மை மற்றும் மனிதநேயத்தால் மற்றவர்களை வழிநடத்துகிறார் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.
Leadership Qualities
Leadership QualitiesImage credit: AI Image
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்கிற பெயரில் இதுவரை 40 சிறுகதைகள், 55 ஒரு பக்க கதைகள் 17 புத்தக விமர்சனங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகளை கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன் பெண்கள் மலர, குங்குமம் தோழி போன்ற பிரபல இதழ்களில் எழுதியுள்ளார். மங்கையர் மலர், வைகை இணைய இதழ் அனிச்சம், ஆனந்தசந்திரிகை மின்னிதழ் சங்கப் பலகை முகநூல் குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தோனி எஃப் எம் ல் வாரம் ஒரு முறை கதை சொல்கிறார். கல்கி இணைய இதழில் தன்னம்பிக்கை, குடும்பம் வாழ்வியல், ஆரோக்கியம் ஆன்மீகம், ஃபேஷன், உளவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on

தலைமைத்துவம் (Leadership) என்பது ஒரு பதவி அல்ல, அது ஒரு செயல்பாடு. இன்றைய வேகமான உலகில், ஒரு நிறுவனத்தையோ அல்லது ஒரு குழுவையோ வழிநடத்துவது என்பது சவால்கள் நிறைந்த ஒரு கலை. சிறந்த தலைமைத்துவம் என்பது பெரும்பாலும் அதிகாரத்தை விடப் பண்பிற்கே முக்கியத்துவம் அளிக்கும். ஒரு சிறந்த தலைவரை உருவாக்குவது எது? அதன் அடிப்படைப் பண்புகள் என்ன? என்பதைப் பற்றி இந்தக்கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

1. தலைமைத்துவம்: அதிகாரமல்ல, ஆளுமை!

தலைமைத்துவம் என்பது ஒரு குழுவை இலக்கை நோக்கி நகர்த்திச் செல்லும் உந்துசக்தி. ஒரு மேலாளருக்கும் ஒரு தலைவருக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடு 'அதிகாரம்'. மேலாளர் அதிகாரத்தைப் பயன்படுத்தி வேலை வாங்குகிறார்; ஆனால், தலைவரோ தனது ஆளுமையால் மற்றவர்களை இன்ஸ்பையர் செய்கிறார்.

2. தொலைநோக்குப் பார்வை:

ஒரு சிறந்த தலைவருக்குத் தான் எங்கே செல்கிறோம்; தனது குழுவை எங்கே அழைத்துச் செல்கிறோம் என்கிற தெளிவான தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். இலக்குகள் இல்லாத பயணம் திசைதெரியாமல் போய்விடும். அந்த இலக்கை நோக்கித் தனது குழுவினரைத் தயார்படுத்துவதும், வரப்போகும் சவால்களை முன்கூட்டியே கணிப்பதும் தலைவரின் முதல் தகுதியாகும்.

3. சிறந்த தகவல் தொடர்புத்திறன்:

தலைமைத்துவத்தின் மிக முக்கியமான நுணுக்கம், பேசுவதை விடக் கேட்பதுதான். ஒரு சிறந்த தலைவர் தனது குழுவினரின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ‘உங்களுடைய கருத்து என்ன?’ என்று கேட்டு, ஊழியர்களின் கருத்துகளுக்கு செவி சாய்ப்பது பெரிய நம்பிக்கையை உருவாக்கும். தனது கருத்துக்களைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் மற்றவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துரைக்கும் தொடர்புத் திறன் அவருக்கு அவசியமானது.

3. நேர்மை மற்றும் நம்பகத்தன்மை:

வார்த்தைக்கும் செயலுக்கும் இடையே வித்தியாசம் இல்லாதவரே சிறந்த தலைவர். தான் எதைச் செய்கிறார்களோ, அதையே மற்றவர்களிடமும் நல்ல தலைவர் எதிர்பார்க்க வேண்டும். ஒரு தலைவர் தனது தவறுகளை ஒப்புக்கொள்ளும் துணிச்சலைக் கொண்டிருக்கும்போது, அது குழுவினரிடையே மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்குகிறது. அந்த நம்பகத்தன்மைதான் கடினமான காலங்களில் குழுவைத் சிதறாமல் பாதுகாக்கும்.

4. உணர்வுசார் அறிவு:

தற்போதைய கார்ப்பரேட் உலகில் அதிகம் பேசப்படும் விஷயம் 'எம்பதி' (Empathy). அதாவது, மற்றவர்களின் நிலையில் இருந்து யோசிப்பது. ஒரு ஊழியரின் தனிப்பட்ட கஷ்டங்களை அல்லது மன அழுத்தத்தைப் புரிந்துகொண்டு, அவருக்கு ஆதரவாக நிற்கும் தலைவரே நீண்டகாலம் நிலைத்திருப்பார். அதிகாரம் காட்டி மிரட்டுவதை விட, அன்பால் அரவணைக்கும் தலைவர்களே சாதனையாளர்களை உருவாக்குகிறார்கள்.

5. முடிவெடுக்கும் திறன்:

நெருக்கடியான நேரங்களில் எடுக்கப்படும் முடிவுகளே ஒரு தலைவரின் தரத்தைத் தீர்மானிக்கின்றன. குழப்பமான சூழலில் நிதானமாக யோசித்து, துணிச்சலான முடிவுகளை எடுக்கும் திறன் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டும். அந்த முடிவு தோல்வியடைந்தாலும், அதற்கான பொறுப்பைத் தானே ஏற்றுக்கொள்வதுதான் உண்மையான தலைமைத்துவம்.

6. மற்றவர்களை முன்னேற்றுதல்:

ஒரு சிறந்த தலைவர், தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்ள மாட்டார். தனக்குக் கீழே இருக்கும் நபர்களையும் தலைவர்களாக உருவாக்குவதே ஒரு தலைவரின் உண்மையான வெற்றி. அதிகாரத்தைப் பகிர்ந்து அளிப்பதன் மூலம் குழுவின் ஒட்டுமொத்தத் திறனையும் அவர் மேம்படுத்துகிறார்.

இதையும் படியுங்கள்:
சொல்லும் சொல்லில் இவ்வளவு லாபமா? உங்கள் பேச்சை மாற்றினால் வாழ்க்கை மாறும்!
Leadership Qualities

தலைமைத்துவம் என்பது பிறப்பால் வருவதல்ல, அது பயிற்சியால் வளர்க்கப்படுவது. மற்றவர்களை மதிக்கும் குணம், சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல், விடாமுயற்சி ஆகியவற்றை வளர்த்துக்கொண்டால் யாராலும் ஒரு சிறந்த தலைவராக மாற முடியும். சிறந்த தலைவர் பின்னால் இருப்பவர்களை இழுத்துச் செல்பவர் அல்ல, முன்னால் நின்று வழிநடத்துபவர்.

பெற்றோராகவோ, ஆசிரியராகவோ அல்லது ஒரு நிறுவனத்தின் தலைவராகவோ நீங்கள் இருக்கலாம். உங்கள் செயல்களால் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழுங்கள். அதுவே உங்களை ஒரு சிறந்த தலைவராக மாற்றும்!

logo
Kalki Online
kalkionline.com