குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்!

Motivational articles
Learn from children...
Published on

ல்லோரும் குழந்தைகளுக்கு கற்றுத்தரவே விரும்புகிறார்கள். குழந்தைகளிடமிருந்து எதையாவது கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் குறைவு.

ஆனால் இந்த உலகில் மிகச்சிறந்த அனுபவங்கள் நிரம்பிய ஆசான்களை விடவும் அதிகமாக வாழ்க்கை பாடங்களை குழந்தைகள் கற்றுத்தருகிறார்கள்.

இதோ இதுதான் உங்களுக்கான பாடம் என சொல்லிவிட்டு அவர்கள் எதையும் கற்றுத்தருவதில்லை, உங்களது செயல்கள் இயல்புகள் பாவங்கள் மூலம் அவர்கள் இந்த பாடங்களை எடுக்கிறார்கள். போட்டி, பொறாமை, சூழ்ச்சி ஏமாற்றி வித்தை என இந்த உலகில் அழுக்குகள் ஏதும் படியாத பளிங்கு பொம்மைகள் போன்றவர்கள். அவர்கள் கற்றுத்தரும் பாடங்களை பார்ப்போம் என்கிறது!

ஒரே ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு ஒருமணி நேரம் கூட விளையாடும் குழந்தை கற்றுத்தருவது, கிடைக்காத பொருட்களை நினைத்து ஏங்காமல் கிடைத்த எல்லாவற்றிற்காகவும் நன்றியோடு இருங்கள் என்கிறது!

அறிமுகமான மனிதர்களை கண்டால் ஓடி வந்து கட்டிக் கொள்ளும் குழந்தை பாடம் எடுப்பது - அறிமுகமான நேசிப்பவர்கள் எல்லோரையும் கரம் பற்றி அன்பை வெளிப்படுத்துங்கள் என்கிறது!

மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து விளையாடும் குழந்தை சொல்லித்தருவது - ஒவ்வொரு பருவத்தையும் அதற்குரிய இயல்புகளோடு கொண்டாடுங்கள் என்கிறது!

தினம் தினம் உற்சாகம் குறையாமல் ஓடி ஆடி ஆனந்த மடையும் குழந்தை கற்றுத்தருவது - ஒவ்வொரு புதிய நாளிலும் இதுதான் என் வாழ்வின் மிகச்சிறந்த தினம் என்பதுபோல வாழுங்கள் என்கிறது!

உண்மை பேசாது என தெரிந்தும் அதனோடு பேசி ஆடை அணிவித்து உணவு ஊட்டி மகிழும் குழந்தை பாடம் எடுப்பது - மற்றவர்கள் அபத்தமாக கருதுகிறார்கள் என்பதற்காக ஒரு விஷயத்தை முயற்சி செய்யாமல் இருக்காதீர்கள் என்கிறது!

அடம்பிடித்து அழுது மன்றாடி காரியத்தை சாதித்துக் கொள்ளும் குழந்தை சொல்லித் தருவது - உங்களுக்கு சரி என்று தெரியும் எந்த விஷயத்துக்காகவும் போராட தயங்காதீர்கள் என்கிறது!

ஆசையாக வாங்கிய பொம்மையை சில நிமிடங்களில் தூக்கிப்போட்டு விட்டு வேறு ஏதோ சின்ன பொருளை ஆராய்ச்சி செய்யும் குழந்தை கற்றுத் தருவது - செய்யும் ஒரு செயல் அலுத்துப் போனால் புதிதாக வேறு ஏதாவது செய்ய ஆரம்பியுங்கள் என்கிறது!

இதையும் படியுங்கள்:
வாழ்க்கைப் பாதையில் வெற்றிக்கு வழி!
Motivational articles

பகலிலும் இரவிலும் பல மணி நேரம் தூங்கி கனவுகள் பல கண்டு சிரித்தும் அழும் உணர்வுகளை வெளிப்படுத்தும் குழந்தை பாடம் எடுப்பது - கனவு காணுங்கள் அது மிக நல்ல விஷயம் என்கிறது!

தூங்கும் நேரம் தவிர எல்லா நேரங்களிலும் அம்மாவின் அருகாமையை விரும்பும் குழந்தை கற்றுத்தருவது - உங்கள் மீது அன்பு காட்டுபவர்களோடு அதிக நேரம் செலவிடுவது முக்கியம் என்கிறது! 

அம்மா சமைப்பதை பார்த்துவிட்டு அதேபோல சொப்பு சாமான்கள் வைத்து சமைத்து கற்பனை நண்பர்களுக்கு பரிமாறும் குழந்தை சொல்லித் தருவது - எதையும் உற்று கவனியுங்கள் என்கிறது!

இந்த சுவற்றில் யார் கிறுக்கிது? என கோபத்தோடு கேட்கும் அப்பாவிடம் நான்தான் வரைஞ்சேன் என சிரித்தபடி பதில் சொல்லும் குழந்தை பாடம் எடுப்பது - இந்த சூழலிலும் உண்மையை பேச அஞ்சாதீர்கள் என்கிறது!

வளர்ந்த பிறகு கூட கூச்சம் இன்றி குட்டிக் குழந்தைகளோடு விளையாடும் பிள்ளைகள் சொல்லித்தருவது - விளையாடுவதை வயது தடுப்பதில்லை என்கிறது!

'உன்னோட பேச மாட்டேன் கா' என முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும் குழந்தை சில நிமிடங்களில் திரும்பவும் பேசி கற்றுத் தருவது - எல்லோரையும் மன்னித்து எல்லா சூழல்களையும் மறந்து எதையும் கடந்து போய்விடுங்கள் என்கிறது!

ஒரு சின்ன பரிசு தந்தாலும் பரவசம் அடையும் குழந்தை பாடம் எடுப்பது - ஒரு பரிசு மதிப்பு முக்கியமல்ல அதன் உள்ளே நிறைந்திருக்கும் அன்பே முக்கியம் என்கிறது!

நேற்று நடந்த எல்லாவற்றையும் மறந்து விட்டு சுத்தமாக துடைத்த கரும்பலகை போல தினம் தினம் விழித்து எழும் குழந்தைகள் கற்றுத் தருவது - கடந்ததை மறந்துவிட்டு எதிர்காலம் பற்றி இன்றைய தினத்தில் திட்டமிடுங்கள் என்கிறது!

இதையும் படியுங்கள்:
வயது என்பது அனுபவங்களின் தொகுப்பு… அவ்வளவுதான்..!
Motivational articles

இன்று புதிதாய் அறிமுகமாகும் குழந்தைகளுக்கு கூட இரண்டு பொம்மைகளை கொடுத்து விளையாடச் சொல்லி அழகு பார்க்கும் குழந்தைகள் பாடம் எடுப்பது - எல்லாவற்றையும் உங்களுக்கு என வச்சிருக்காமல் பிரத்துக்கொடுங்கள் என்கிறது!

ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்படும் பொம்மைகள் திரும்பத் திரும்ப சரிந்து விழுந்தாலும் சளைக்காமல் மீண்டும் மீண்டும் அடுக்க முயற்சிக்கும் குழந்தைகள் சொல்லித் தருவது - ஒருபோதும் நம்பிக்கை இழந்து முயற்சியை கைவிடாதீர்கள் என்கிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com