
ஆசை, பேராசை மட்டும் அடுத்தக் கட்டத்திற்கு அழைத்து செல்லாது. அதற்கு தேவையயான செயல்பாடு அவசியம் செயலில் இருக்கவேண்டும்.
கனவு கண்டால் மட்டும் போதாது. கண்ட, காணும், காணப் போகின்ற கனவுகளை நினைவுகளாக ஆக்க உழைப்பு மிக மிக அவசியம்.
முன்னேறிய பலர் உழைப்பை துணைக்கொண்டனர். இன்று பெயர் சொல்லும் இடங்களில் பிரகாசிக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள் முன்னேற சில செயல்பாடுகளை தடங்கல்கள் மற்றும் எதிரிகளாக நிர்ணயித்து தங்கள் அகராதியில் இருந்து விலக்கி வைத்து இருப்பதில் மிகவும் பிடிவாதமாக இருப்பதுடன் ஸ்ட்ரிக்ட்டாகவும், கட்டயமாகவும் பின்பற்றுவதில் குறியாக இருப்பார்கள், இருக்கிறார்கள்.
அதுதான் சோம்பேறிதனம். இப்படிப்பட்டவர்கள் சுறுசுறுப்பாக இருப்பது மட்டும் அல்லாமல் ஏதாவது உபயோகமாக சிந்தித்துக் கொண்டோ, செய்துக்கொண்டோ இருப்பார்கள்.
எக்காரணம் கொண்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் செயல்படமாட்டார்கள்.
தள்ளிப்போடுவது என்பது இவர்களுக்கு பிடிக்காது. அவ்வாறு செய்தால் சோம்பல் குணம் தங்களிடம் குடியேறிவிடுமோ என்ற பயம் கலந்த மனப்பான்மை உடையவர்கள் இவர்கள்.
அது மட்டும் அல்லாமல் அது இயலாமை என்ற பெரும்
தடங்கலுக்கு பெரிதும் வழி வகுத்து பேராபத்தில் முடியும் என்றும் திடமாக நம்பினார்கள். எனவே அண்டவிடாமல் கவனமாக இருந்தார்கள். இருக்கிறார்கள்.அதனால் இவர்களால் சாதிக்கவும் வெற்றி இலக்கு நோக்கி பயணம் செய்யவும் முடிகின்றது.
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற சிந்தனை சோம்பலுக்கு அடித்தளம் அமைக்கும் என்ற எண்ணமே இவர்கள் உடனுக்கு உடன் செயல்பட வைக்கின்றது.
மேலும் அதனால் கிடைக்கும் உபரி நேரத்தை (extra time) பயனுள்ளதாக உபயோகிக்கவும் பழகிக்கொள்வார்கள்.
உதாரணமாக மன நிம்மதிபெற தங்களுக்கு பிடித்த இசை கேட்பது, பிடித்த புத்தகங்கள் படிப்பது, விரும்பிய விளையாட்டு நிகழ்ச்சிகள் கண்டு களிப்பது, தங்களுக்கு பிடித்த வேறு துறையில் மேம் படுத்திக்கொள்வது, குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவு செய்வது, புதிய மொழிகள் கற்றுக்கொள்வது, ஹாபிகள் வளர்த்துக் கொள்வது போன்றவை.
இப்படிப்பட்டவர்கள் எக்காரணம் கொண்டும் சோம்பல் என்பதற்கு அடிமை ஆகவே மாட்டார்கள். இவர்களுக்கு சோம்பலும் பிடிக்காது. சோம்பேறிகளும் அறவே ஒத்துக்கொள்ளது.
சிலர் பொழுது போக்குக்காக ஆரம்பித்து அந்த குறிப்பிட்ட செயலில் மூழ்கி முன்னேற்றத்திற்கான தடைக்கற்களை அரணாக அமைத்துக்கொண்டு வாழ்க்கையை தொலைத்து அவதிபடுவதை காண முடிக்கின்றது.
இப்படிப்பட்டவர்கள் உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்காமல், தேவையான அடிப்படை அறிவு கூட இல்லாமல் (without having even the basic knowledge) அடுத்தக் கட்டத்திற்கு நகரவேண்டும் என்ற பேராசையில் அகல கால்வைத்து வெற்றிக்கு பதிலாக தோல்வியை சந்தித்து அதிலிருந்து மீள முடியாமல் சிக்கி அவதிபடுவதையும் காணமுடிகின்றது.
எனவே முன்னேற துடிப்பவர்கள் மிகவும் ஜாக்கிரத்தையாக சுறுசுறுப்பு என்ற கருவியை கையில் எடுத்துகொண்டு, வெற்றி நமதே என்ற தராக மந்திரத்துடன் உண்மையான ஈடுப்பாட்டுடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு முன்னேறி செல்வதை அவர்கள் கண்கூடாக அனுபவித்து ஆனந்தம் கொள்கிறார்கள்.