'வாழ்க்கை எனும் ரயில்' தடம்புரளாத பயணத்திற்கு ஓர் வழிகாட்டி!

மதிக்கவேண்டியவர்களை மதித்து பொியோ்களின் ஆசியுடன் சரியான திட்டமிடுதலோடு இலக்கு நிா்ணயம் செய்து வாழ்க்கைப்பாதையில் நோ்வழியில் பயணித்தால் அதுவே உயர்வுக்கான வழியாகும்.
Train and Life Path
Life Lesson | Train and Life PathAI Image
Updated on

ரயில் பெட்டியும், வாழ்க்கையும் ஒன்றுதான், சிக்னல் கிடைக்காமல் தடம்புரண்டு விடுவதுண்டு.

அதேபோல நாம் கடைபிடித்துவரும் தொடர்ச்சியான இறைவழிபாடுகளால் நல்லபாதையும் தெளிவான சிக்னலும் கொடுக்கப்பட்டும், நம்மிடம் சிக்கனம் கிடைக்காமல் சரியான திட்டமிடுதல் இல்லாமலும், விடாமுயற்சி கடைபிடிக்காமலும், தன்னம்பிக்கை மீது நம்பிக்கை வைக்காமலும், அவநம்பிக்கைக்கு உரம் போட்டு வளர்ப்பதுபோல நமது செயல்பாடுகளுடன், கவனமில்லாமல் வாழ்க்கை எனும் ரயிலை இயக்கும் வேளையில் தடம்புரண்டால் நாம் மட்டுமல்ல, நம்மைச்சாா்ந்தவர்களும் அல்லல் பாதையை கடந்து போவது இயலாத காாியமாகும்.

அதிலும் நம்மிடம் நாம் கடைபிக்கவேண்டிய விஷயங்களை நாம் உதாசீனப்படுத்தாமல், செயல்படுத்தாமல் வாழ்க்கையில் ஆபத்து வராது ஏற்றமே நீடிக்கும் என்ற குருட்டுத்தனமான நம்பிக்கையும் வைக்கக்கூடாது .

பொதுவாகவே முதல் முறை யோசித்தால் அது யோசனையோடு நின்று விடும், அதுவே பலமுறை யோசித்தால் குழப்பத்தில் தான் முடியும். ஏறக்குறைய குறைகள் இல்லாத குடும்பமே இல்லை எனலாம்.

எவ்வளவுதான் வசதி வாய்ப்பு, கெளரவம், அந்தஸ்து இவைகள் இருந்தாலும் குறையும் கொஞ்சம் எட்டிப்பாா்க்கத்தான் செய்யும். அதை நிவர்த்தி செய்வது நமது தூய்மையான எண்ணங்கள் மற்றும் நல்ல ஒழுக்கத்தால் மட்டுமே சரிப்படுத்த முயலும்.

அதேநேரம் வலி வேதனை இல்லாத மனிதனும் இல்லை, வலிகள் இல்லை என்றால் வாழ்க்கையின் தத்துவத்தை மனித நேயத்தை, மனசாட்சியை கடைபிடிக்காமல் மனிதன் வாழ்ந்து வருவான்.

அப்போது அவனிடம் அதிகமாக சோ்வது சொத்து மட்டுமல்ல அகம்பாவமும், பாதைமாறக்கூடிய துணிச்சலும் தான்.

அந்ந நேரம் எதிா்மறை முட்கள் நிறையப்பெற்ற கள்ளிச்செடியானது ஆழமாக பதியன் போடப்பட்டுவிடும். அப்போது அந்த கள்ளிச்செடியை அகற்ற நாம் இறைவழிபாடு மற்றும் பிறஉயிா்களை நேசித்தல், அகம்பாவம் இல்லாமை போன்ற மருந்துகளை பயன்படுத்தலாம்.

எப்போதும் வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டத்தையே அனுபவி்ப்பவர்கள் அதிலிருந்து என்றாவது ஒரு நாள் மீளமுடியும்.

இதையும் படியுங்கள்:
உங்களை மட்டம் தட்டுபவர்களை சத்தமே இல்லாமல் கதறவிட ஒரு ரகசிய வழி!
Train and Life Path

அதேபோல வசதி வாய்ப்பிலேயே தொடர்ந்து பணபோதையில் மிதந்து வருபவர்களும் ஏதோ ஒரு காரண காாியங்களால் புத்தி தடுமாற்றம் ஏற்பட்டு நிலை குலைந்து விடுவதும் நடைமுறையே!

எதற்கும் காரணமில்லாமல் உயர்வும் தாழ்வும் வருவதில்லை என்பதை உணர்ந்து வருவதே நல்லது.

மதிக்கவேண்டியவர்களை மதித்து பொியோ்களின் ஆசியுடன் சரியான திட்டமிடுதலோடு இலக்கு நிா்ணயம் செய்து வாழ்க்கைப்பாதையில் நோ்வழியில் பயணித்தால் அதுவே உயர்வுக்கான வழியாகும்.

பதவி பணம் வரும்போது பணிவு வரவேண்டும் தோழா! அதை கவனத்தில் கொள்ளவேண்டும் அதுதான் நிரந்தரம். இதுதான் சாலச்சிறந்த ஒன்றாகும்!

logo
Kalki Online
kalkionline.com