உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு இல்லையா? இந்த 1 மாற்றத்தை உடனே செய்யுங்கள்!

Life Motivation
Life Motivation
Updated on

வாழ்க்கையில் ஒருபோதும் எதற்கும் மற்றவர்கள் புகழ்பாட வேண்டும் என்று நினைத்து, உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், உங்கள் வாழ்க்கை நன்றாக அமையாது. ஏனெனில், அதில் துளிக்கூட உங்கள் தனித்தன்மை இருக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஒருபோதும் உங்கள் வார்த்தைகள், மற்றவர்கள் கேட்கும் போது, பல நல்ல கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் மதிப்பு உயரும். எப்போதும் உங்களுடைய வார்த்தைகள் பிறர் கேட்கும் இன்பத்திற்காக மட்டும் இருந்து விடக்கூடாது.

வாழ்கையில் எப்போதும் சிந்திக்கும் எண்ணமும், அதனை நன்கு உணர்ந்து கொள்ளும் தன்மையும் வளர்த்துக் கொள்ளுங்கள். சிந்திக்கும் திறன் இருந்தால், அதற்கு கூடவே பக்கபலமாக தன்னம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற நேர்மறை எண்ணங்களும் உங்களுக்குள் ஊற்றெடுக்கும்.

வாழ்க்கையில் சிந்திக்க கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கற்றதை ஓங்கி பறைசாற்றுங்கள். அதனை செயல்படுத்த ஒருபோதும் தயக்கம் காட்டாதீர்கள். செயல்கள் அனைத்தும் மற்றவர்களின் பார்வையில் மட்டும் நின்றுவிடாமல், நேர்மையுடனும், சுயநினைவுடனும் மட்டுமே செயலாற்ற வேண்டும்.

வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு செயலில் வேறுபட்டு சாதிக்க வேண்டும் என்ற வேட்கை கொள்ளுங்கள். அதனால் ஏற்படும் அவமானங்களை சந்திக்க நேர்ந்தால், அதனையும் உறுதியான மனதோடு எதிர்கொள்ள தயக்கம் வேண்டாம்.

வாழ்க்கையில் நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் நம்பிக்கை என்னும் பிடிப்பு இருக்க வேண்டும். அதபோல் எதையும் செய்யத் துடிக்கும் எண்ணம் உங்களுடைய மனதில் ஆழமாக பதிந்து இருக்க வேண்டும். இந்த இரண்டும் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.

வேட்கை இல்லாத செயல்கள் எதுவும் நிறைவேறாத செயல்களாக மாறிவிடும் அபாயம் உள்ளது. வாழ்க்கையில் இலட்சியம் தான், ஒரு மனிதனுக்கு முதல் தேவையாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் வாழும் வாழ்க்கை எப்போதும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அதில் நிச்சயம் உங்களுக்கு ஓரு லட்சியம் இருக்க வேண்டும். எண்ணிய குறிக்கோளை அடைவதற்கு உங்ககுக்கு திண்ணிய நெஞ்சம் வேண்டும். துணிவுடன் போராட வேண்டும். துணிவுடன் போராடும் போது வெற்றி எனும் கனியை உங்களால் ருசிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
சகுனி போல் உங்கள் வாழ்க்கையைக் கெடுக்கும் அந்த 2 விஷயங்கள்! உடனே உஷாராகுங்கள்!
Life Motivation

வாழ்க்கையில் இலட்சியம் என்று ஒன்று இருந்தால் தான் உங்களுடைய வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்போது தான் உங்கள் வாழ்க்கையில் தேடல் என்பது புதிது புதிதாக சிந்திக்க வைக்கும். தேடல் இல்லாத வாழ்க்கை, தேங்கி நிற்கும் குட்டை போல் ஆகிவிடும்.

வாழ்க்கையில் இலட்சிய பாதை நோக்கிப் பயணிக்கும் போது 'கொக்குக்கு ஒன்றே மதி' என்பது போல், உங்கள் சிந்தனைகள், செயல்கள் அனைத்தும், குறிக்கோள் மட்டுமே நோக்கி இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் உங்களுடைய இலக்கு முதலில் என்ன என்பதை தீர்மானித்து கொண்டு, வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை வகுத்து செயல்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் உங்களுடைய உயர்ந்த எண்ணங்கள் சிறந்த லட்சியத்திற்காக பாடுபட்டு உழைத்து, வெற்றியின் படிக்கட்டுகளில் ஏற்றம் காணும் போது, இந்த பூவுலகம் உங்களை தலைமேல் வைத்து பாராட்டி கொண்டாடும். ஆகவே ஒவ்வொரு மனிதனின் வாழ்வுக்கும் தேடல் என்பது மிக அவசியம். ஒவ்வொரு தேடலும் வெவ்வேறு பரிணாமங்களை ஏற்படுத்தும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com