

ஒரு ஊரின் எல்லையில் ஆற்றங்கரை ஓரமாய் ஒரு பொியவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தாா். ஓரளவுக்கு இருவருக்குமே அறுபது வயதிருக்கலாம்.
அவர் பல ஊா்களில் நடக்கும் கோவில் விழாக்களில் கலந்து கொள்ளுதல், ஒரு குழுவாகச் சென்று கோவில் குடமுழுக்கு, பணிகள் மற்றும் திருமணம் செய்து வைத்தல், உபன்யாசங்கள் செய்வது, நாட்டு மருத்துவம் செய்வது, நல் ஒழுக்க போதனைகள் போதிப்பது, அதோடு வயதானவர்களுக்கு தொண்டு செய்வது, பறவைகள் வளா்ப்பது, அவைகளுக்கு உணவு வைத்துவிட்டு சாப்பிடுவது போன்ற நல்ல விஷயங்களை செய்து ஓரளவு வசதியுடன் வாழ்ந்து வந்தாா்.
அவரது குடிசையில் தினசரி காலையில் அவரது மனைவி அன்னம் வைத்தால் காகம் மட்டுமல்ல, புறாக்கள், கிளிகள் குருவிகள், அனில்கள், பூனைகள், இப்படி அனைத்து ஜீவராசிகளும் ஒன்றோடு ஒன்று சண்டை போடாமல் ஒற்றுமையாய் சாப்பிடும் பழக்கம் கொண்டவை.
அப்போது பொியவரைப் பாா்த்து அங்கு வசித்து வரும் ஒரு பறவை மேலே பறந்து செல்லும் கழுகைப்போல நான் உயரே பறக்க வேண்டும், வெகுதூரம் சென்று அடுத்த தேசத்தை பாா்த்து ரசிக்க வேண்டும், என்னால் முடியவில்லை என்றது.
அதற்கு அந்த பொியவரோ நம்மால் முடியாதது எதுவும் இல்லை! விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எத்தனை தடைகளையும் தாண்டிவிடமுடியும் என்றாா்.
அப்போது அவர் சொல்லும் விஷயத்தை அவரிடம் நாட்டு வைத்தியம் பாா்க்கதொடர்ந்து வருகை தரும் நாற்பது வயதை நெருங்கும் ஒரு தம்பதிகள் கேட்டுக்கொண்டிருந்தாா்கள்.
பொியவர் தொடர்ந்து பறவையிடம் சொன்னாா், நீ முடிந்தவரை பறந்து பாா். முடியாத நிலை வரும்போது திரும்பிவிடு, மறுநாள் பறந்து போ, உன்னால் முடியாத நிலையில் அங்குள்ள மரக்கிளையில், ஒரு குச்சியை எடுத்து வாயில் கவ்விக்கொள், அங்கு ஓடும் ஆற்றில் அந்த மரக்குச்சியை மிதக்கவிட்டு அதில் உட்காா், பிறகு அந்த குச்சியின் துணை கொண்டு பறக்கலாம். அப்போதும் ஒரே மூச்சில் பறக்காமல் திரும்ப இங்கேயே வந்துவிடு, அப்போதும் உன் இலக்கை எய்த முடியாமல் போனால் உனது ஜோடியை அழைத்துப்போ.
குச்சியை எடுத்துப்போக மறவாதே, அதே நேரம் ஜோடிதான் உள்ளதே என நினைத்து வெகு தொலைவு செல்லாதே. பின்னர் அந்த பகுதியில் ஓடும் ஆற்றின் குறுக்கே அந்த மரக்குச்சியில் இருவரும் பேலன்ஸ் செய்து உட்காருங்கள்.
பின்னா் திரும்ப இங்கே வந்து விடுங்கள் என்றாா். அதேபோல இரு பறவைகளும் இலக்கை எய்த முடியாமல் பாதியிலேயே திரும்பின. பறவை வருத்தத்துடன் கேட்டது எப்போதுதான் எங்களால் அடுத்த தேசம் வரை பறந்து செல்ல முடியும் என கேட்டதும், பொியவர் சொன்னாா். விடாமுயற்சி தான் விஸ்வரூப வெற்றியைத்தரும், நம்மால் முடியும் என நினைத்தால் முடியும்.
முடியாது என நினைத்தால் அவ்வளவு தான்முடியாமல் போகும். தொடர்ந்து ஜோடியாக பயணியுங்கள் வெற்றி பெறலாம் என்றாா். அதேபோல பறவைகள் வெற்றி பெற்று சந்தோஷத்துடன் திரும்பியதோடு அங்கேயே தங்கிவிடலாம் என முடிவு செய்தோம் என்றன.
அப்போது அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த ஜோடியைப் பாா்த்து உங்களுக்கும் இதே தகவல்தான் வாழ்க்கையில் நல்ல எண்ணம், பொியவர்களை மதிப்பது, அடுத்தவர் நிலை கண்டு பொறாமைப்படாமல் இருப்பது, கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் புாிதலோடு வாழ்வது, தெய்வ நம்பிக்கை, தான தர்மங்கள் செய்வது, இல்லறவாழ்வை நல்ல விதமாக வாழ்வதுபோன்ற நமது செயல்களால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்றாா்.
அதே நேரம் நம்மால் முடியாது என நினைத்தால் வெற்றி நம்மை தேடி வராது. ஆக ஒருவருக்கு ஒருவர் புாிந்து வாழ்ந்தாலே போதும் வெற்றிமீது வெற்றி வந்து நம்மைச் சேரும் என்றாா்.
சரி என தலையை ஆட்டியபடியே அங்கிருந்த பறவைகளுக்கு தாங்கள் வாங்கி வந்திருந்த உணவு வகைகளை பொியவரிடம் கொடுத்துவிட்டு ஆசீா்வாதம் வாங்கிக்கொண்டுபுறப்பட்டு சென்றாா்கள்!