வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி எது தெரியுமா?

வாழ்க்கையில் மகிழ்ச்சியின் அருமையை உணர சோகமும், உறவுகளின் மேன்மையை உணர தனிமையும் எத்தகைய பாடங்களைக் கற்றுத் தருகின்றன என்பதை இது விவரிக்கிறது.
Life decision
Life decision
Updated on

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிகப்பெரிய வெற்றி எது தெரியுமா? சூழ்நிலையை கற்பூரம் மாதிரி பற்றிக்கொள்ள வேண்டும். அதனை இறை நம்பிக்கையோடு வணங்குவது போல் நம்முடைய செயல்கள் அனைத்தும், மற்றவர்கள் மதிக்கும்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து வாழவேண்டும்.

அதேமாதிரி உங்கள் வாழ்க்கையில் தினமொரு விடியல் நமக்கானது, தினமொரு வாய்ப்பு நமக்கானது என்று நினைத்து சிந்தனையை தூண்டிவிடுங்கள். அதற்காக தினமொரு வெற்றி அடைய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் காலம் பொன் போன்றது என்று உணர்ந்து, அன்றைய தினத்தை வீணாக்கி, தோல்வி அடைந்து விடாதீர்கள்.

அதுமாதிரி வாழ்க்கையில் ஆயிரம் பேரைக் கூட துணிவோடு எதிர்த்து நிற்பது தவறில்லை. ஆனால் ஒருநாளும் யாரையும் எதிர்பார்த்து நின்று விடாதீர்கள். அதேபோல் முடியாது என்பதை கடைசியில் யோசியுங்கள். எப்படி முடிப்பது என்பதை முதலில் யோசிக்கப் பழகுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி அடைவதோடு, நேர்மறை எண்ணங்கள் உங்கள் இதய வாசலை வந்து தட்டும்.

உங்கள் மனதில் விதைக்கப்படும் எண்ணங்களுக்கும், நீங்கள் செயல்படுத்த நினைக்கும் செயலுக்கும் எந்தவித மாற்றத்தையும் செய்து, குழம்பிய குட்டைபோல், மாறாமல், தெளிந்த நீரோடை போல் இருங்கள். அப்போதுதான் உங்கள் இலக்கு வெற்றி அடையும்.

வாழ்க்கையில் ஒருபோதும் தன் புகழ்ச்சிக்காக வாழாதீர்கள். ஏனென்றால், அப்படி வளர்ந்துக் கொண்டால், அடுத்தவன் நம்பிக்கையை நாட வேண்டி வரும். தன்னுடைய போராட்டத்தில் வாழும் யவருக்கும் தன்னுடைய நம்பிக்கை ஒருபோதும் கைவிடாது.

அதேபோல் சில சமயங்களில் சோகப்படுவது தவறில்லை. அப்போதுதான் ஆனந்தத்தின் அருமை உங்களுக்கு புரியும். அதேபோல் நம்மோடு பழகியவர்கள் யாருக்காவது கவலைபடும் சூழ்நிலை வரும்போது கண்ணீர் விடுங்கள். அப்போதுதான் புன்னகையின் மகிமையை உணர முடியும்.

அதேபோல் மொழி புரியாத தேசம் செல்லுங்கள். அப்போதுதான் பலமொழிகள் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் புரியும். அதேபோல் அன்புக்குரியவர்களிடம் இருந்து விலகிப் பாருங்கள். தனிமையில் வேதனை அறிய முடியும்.

அதேபோல் குற்றவாளிகளின் கதறல்களை கேட்டுப்பாருங்கள். முன் கோபத்தின் பின்விளைவுகள் எப்படிப்பட்டது என்று தெரியும். ஒருபோதும் நீங்கள் யாருக்கும் ஞானியாக இருக்க நினைக்காதீர்கள். மனம் தலைக்கனத்தை தூண்டில் போட்டு உள்ளே இழுக்கும். ஆகவே எப்போதும் மனிதனாக இருக்க பயற்சி செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:
ஆடி அடங்கும் வாழ்க்கையில் எத்தனை வேறுபாடுகள்...
Life decision

நீங்கள் எப்படிப்பட்ட உயரத்தில் இருந்தாலும், ஒரு நாளாவது சாதாரண மனிதனாக ஊர் சுற்றிப் பாருங்கள். வறுமையின் கொடுமை தெரியும். மண்குடிசைப் பக்கம் போய் வாருங்கள். அன்றாடம் காய்ச்சியின் அழுகுரல் கேக்கும். இதுதான் மனித வாழ்க்கை என்பது புரியும் போது, தானாக உங்களுக்குள் தன்நலமற்ற சிந்தனையும், மனிநேயம் என்கிற மனபக்குவமும் வரும்.

வாழ்க்கையில் எதையும் உழைத்து பெறவேண்டும் என்ற நிலையே மிகப்பெரிய நமக்கான வரம். அதேபோல் எல்லாம் நமக்கு இருக்கிறது என்று மனம் நிறைவாக இருக்கும் மனநிலையே மிகப்பெரிய நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு உண்டான அஸ்திவாரம் என்பதை உணர்ந்து வாழ்வதே சாலச் சிறந்தது.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் பெரிய வெற்றி பெற இந்த 7 விஷயங்களை அடுத்த 30 நாட்களுக்கு செய்து பாருங்கள்!
Life decision

29 (277)

வாழ்க்கையில் நெல்முனை அளவுகூட பிணக்கு இல்லாமல் வாழ நினைக்கும் மனோ நிலையே மிகச்சிறந்த பண்பின் வெளிப்பாடு. யாரைப் பற்றி நினைக்கிறபோதும், உங்களை அறியாமல் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான தருணம். பேசுவதை விட செயலில் துடிப்பாக இருங்கள். உங்கள் வெற்றி மற்றவர்களைப் பேச வைப்பதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

39 (316)

வாழ்க்கைப் பாதையை சரியாக அமைத்தூக் கொண்டால், வேகமாக அல்ல, நிதானமாக சென்றாலும் இலக்கின் முடிவில் வெற்றிதான் என்பது எழுதப்படாத உண்மை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com