ஆன்றோர்கள் சொன்னதிலும் அர்த்தம் இருக்கிறது..!

There is meaning in what the mahangal say..!
Lifestyle articles
Published on

வ்வொரு நாளும் புதிய ஆரம்பமே, அதை நல்ல விதத்தில் பயன்படுத்துங்கள்.

எது நிகழ்ந்தாலும் அதை புன்முறுவலுடன் வரவேற்க முயலுங்கள். எவரிடமும் குற்றம் காணாதீர்கள்.

எத்தனை மனிதர்கள் அத்தனை கொள்கைகள். எனவே முடிவை நீங்களே எடுங்கள். எது பொய், எது மெய் என்பதை பிரித்தறியக் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்களது இப்போதைய துன்பங்களுக்கு காரணம், அறியாமை மற்றும் சுய நல ஆசைகள்.

ஒவ்வொரு பிரச்னையுடனும் அதன் தீர்வும் பிறந்து விடுகிறது. எனவே பிரச்னைகள் எழுந்தால் அவற்றைக் கண்டு அஞ்சாதீர்கள்.

கோபத்தில் உங்கள் ஆற்றலை வீணாக்காதீர்கள்.

- பகவான் ரமண மகரிஷி

கோபத்தை விட்டு விடுங்கள். இல்லையேல் உங்களை அது கொன்றுவிடும். பொறுமையை விட மேலான தவமில்லை, திருப்தியை விட மேலான இன்பமில்லை, இரக்கத்தை விட உயர்ந்த தர்மமில்லை.

உள்ளத்தில் அமைதியின்றி வெளியில் அமைதியாக இருப்பது போல் நடிக்க கூடாது. தன்னுடைய குறைகளை மறைப்பவன் பார்வை இல்லாதவனுக்குச் சமம்.

மரம் தனக்காக பழுப்பதில்லை அது போல சான்றோரும் தனக்காக வாழ்வதில்லை. மனத்துாய்மை இல்லாமல் கடவுளின் பெயரை ஜபிப்பதால் பயனில்லை.

மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை. மன்னிக்கும் பெருந்தன்மை கொண்டவன் மனதில் கடவுள் குடியிருக்கிறார். சேற்றில் மலர்ந்த தாமரைபோல வாழ்வில் பட்டும் படாமலும் இருங்கள்.

- குருநானக்

இதையும் படியுங்கள்:
'தவறுகளை செய்யாதவர்கள் புதிதாக எதையும் முயற்சிக்காதவர்கள்' - புரியலையா? படிங்க boss... புரியும்!
There is meaning in what the mahangal say..!

பிரச்னை வெளியில் இல்லை. உன் மனதில் இருக்கிறது.

தவறுகளை ஏற்றுக்கொண்டு உன்னை நீயே திருத்து.

அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே. காலம் அறிந்து கடமையாற்று.

எந்த சூழ்நிலையிலும் மனஅமைதியை இழக்காதே.

கடவுளை ஆராயாதே. அன்பால் அவரை அடையலாம்.

கடவுளின் அடிமையாக இருப்பதே மேலான மகிழ்ச்சி.

கடவுள் உன் உள்ளத்தில் குடியிருக்கிறார்.

- அரவிந்தர்

நான்கு நபர்களை வெறுக்காதே - தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரிகள்.

நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே- அனாதை, ஏழை, முதியவர், நோயாளி.

நான்கு நபர்களை புறக்கனி- மடையன், சுயநலக்காரன், முட்டாள், சோம்பேறி.

நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு - மனத்தூய்மை உள்ளவன், வாக்கை நிறைவேற்றுபவன், கண்ணியமானவன், உண்மையானவன்.

- வள்ளலார்

தீயவனின் சிரிப்பு இனிப்பானது. இனிப்பு அதிகமானால் நோயைத்தரும். நல்லவரின் கோபம் கசப்பானது. கசப்பான மருந்து நோய் தீர்க்கும்.

ஒருவரது நடத்தைதான் நண்பர்களையோ விரோதிகளையோ உருவாக்குகிறது. பலவீனத்தை குறிவைப்பவன் நண்பன் அல்ல, அவன் எதிரி. மென்மையாகப் பேசுபவர்களுக்கு விரோதி இல்லை.

நேருக்கு நேராக இனிமையாக பேசிவிட்டு, போகவிட்டு புறம் பேசும் மனிதர்களோடு கொண்டாடும் நட்புறவு பசும் பாலில் விஷத்தைக் கலப்பது போன்றது.

எல்லா காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்கள், கொஞ்சம் வளைந்து நெளிந்து வாழ கற்றுகொள்ளுங்கள்.

- சாணக்கியர்

இதையும் படியுங்கள்:
நேருக்கு நேராக மோதுகிறதா ராயன் - தங்கலான்! எப்போது தெரியுமா?
There is meaning in what the mahangal say..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com