முதுமையில் அறிவோம் வாழ்க்கையின் எல்லைகள்!

Lifestyle articles
Limits of life...
Published on

பொதுவாகவே எந்த விஷயமானாலும் நடைமுறை வாழ்க்கையானாலும் சரி அனைத்திற்கும் ஒரு எல்லை, ஒரு வரையறை, ஒரு வரம்பு  உண்டு!

கோபத்தில் என்ன செய்வதெனத்தெரியாமல் எல்லை மீறி பேசுகிறாய்! எதற்கும் ஒரு எல்லை உண்டு, இத பாரு வரம்பு மீறி பேசாதே, அப்புறம் வருத்தப்படுவாய்  என கண்டிப்பதும்  நயமாக சொல்வததும் உண்டு.

கிராமப்புறங்களில் நஞ்சை விளைநிலங்களின் நடுவே நீள வாட்டத்தில் நமது மற்றும் பக்கத்து நிலத்திற்கும் நடுவே வரப்பு  வைப்பது உண்டு, அதாவது அவரவர் நிலத்தை அவரவர்கள் பாா்த்துக்கொள்ளவேண்டும். அடுத்தவர் நிலத்தை நாம் கபளீகரம் செய்தல் தவறு, என்பதற்காக இரு நிலங்களுக்கு நடுவில் வரப்பு போடப்பட்டிருக்கும் தடுப்பே அது.

அதன் பெயர் வரம்பு என்றுதான் சொல்லவேண்டும் ஒருவருக்கு ஒருவர் வரம்பு மீறக்கூடாது என்பதே மருவி வரப்பு என்றானது.

அதேபோலத்தான் நாம் வாழ்க்கையில் வயது ஆகஆக ஒரு எல்லைக்கோட்டை வகுத்துக்கொள்ளவேண்டும். 58 வயதில் அலுவலகத்தில் அல்லது தனியாா் நிறுவணத்தில் இருந்து பணி ஓய்வு பெற்றுவிட்டால், அதன் பிறகு அந்த அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வருவதை தவிா்க்கவேண்டும்,

அடிக்கடி நாம் பேசுவதால் பணிபுாியும் நபர்களுக்கு சிரமங்கள் இருக்கும் பல்வேறு நிலைகளில் ஆக அங்கு அடிக்கடி செல்வதை தவிா்க்கவேண்டும்.

இதுபோலவே நண்பர்களும் உறவுகளும் நமது வயது கூடக்கூட  நம்மை வந்து பாா்ப்பதையோ ஏன் பேசுவதைக்கூட குறைத்துக்கொள்ளும் வாய்ப்புகளே அதிகம். நாம் நமக்கு பொழுது போவில்லை என்பதற்காக அடுத்தவர் வீடுகளுக்குச் சென்று நமது வயது ஒத்த நண்பர்களிடம் அளவாக பேசிவிட்டு வந்துவிடவேண்டும் அதுவே நல்லது.

இதையும் படியுங்கள்:
ஆசிரியப் பணி: ஒரு உன்னதமான அர்ப்பணிப்பு!
Lifestyle articles

பொழுது போகவில்லையா தொலைக்காட்சியில் பிடித்த விஷயங்கள் பத்திாிகை படித்தல் புத்தகம் நாவல்கள் படித்தல் ஏன் ஓய்வு எடுத்தல் போன்றபணிகளை மேற்கொள்ளலாம், 

பிள்ளை மருமகள் இவர்களிடம் குடும்ப நிா்வாகத்தை ஒப்படைத்து விட்டு கோயில் குளம் ஆன்மிகம் இப்படி சென்று வரலாமே! 

வயது கூடக்கூட நம்மிடம் பிடிவாதகுணங்கள் கோபம் வெறுப்பு அனைத்தும் தஞ்சமடைந்துவிடும்.

நாம்தான் விவேகத்துடன் செயல்படவேண்டும்.  நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை என் வாா்த்தைக்கு மதிப்பு இல்லை என் பேச்சை யாரும் கேட்பதில்லை என்றெல்லாம் புலம்புவதை குறைத்துக்கொள்வது நல்லது.

வயது ஆக ஆக நம்மை பாா்க்க வருபவர்கள் எண்ணிக்கை குறையும் அந்த நேரம் யாரும் என்னை கவனிக்கவில்லை என்று புலம்பக்கூடாது. 

நடப்பதெல்லாம் நமக்கு நல்லதே என நாம் நமக்குள் ஒரு எல்லைக்கோட்டினை வகுத்துக்கொள்ளவேண்டும்.  நமது பேச்சின் தன்மையை புாிந்துகொள்ளும் நிலையில் நமது சந்ததியினா்களுக்கே இருக்காது.

இதையும் படியுங்கள்:
கல்வியின் உண்மைப் பயனை உணருங்கள்!
Lifestyle articles

அந்த நிலையில் நாம் குறை சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நாம் நமது குடும்பம் நமது மகன் மருமகள் பேரன் பேத்திகள் என்ற எல்லைக்கோட்டை போட்டுக்கொள்வதே நல்லது. 

வயதான நேரத்தில் நமக்கு ஓய்வு மனஅமைதி இறைவழிபாடு விசால மனம் விட்டுக்கொடுக்கும் தன்மை இவைகள் நமக்குள் இல்லாமல் இருந்தாலும், நாம் அவற்றை உருவாக்கிக்கொள்வதே அமைதியான வயோதிகத்திற்கு நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com