முதுமையை வெல்வோம்: 60 வயதிற்குப் பின் நீண்ட ஆயுளுடன் வாழ சில எளிய வழிகள்!

நோய் நொடியில்லா வாழ்க்கை முறையை உங்களால் எளிதில் பெற முடியும்!
நீண்ட ஆயுள்
நீண்ட ஆயுள்AI image
Updated on

வயது அறுபதுக்கு மேல் உடல் நலத்தை பாதுகாக்க தினசரி நடைபயிற்சி, யோகா, நேரம் தவறாமல் மருந்து உட்கொள்வது, எளிதில் ஜீரணமாகும் உணவு, கீரை, பழம், புரோட்டீன் பானங்கள், அதிக தண்ணீர் குடித்தல், மலச்சிக்கல் தவிர்த்தல், எட்டு மணி நேர தூக்கம், கோபம் குறைத்தல், டென்ஷன் இல்லாமல் மனதை ரிலாக்ஸ் நிலையில் வைத்தல் போன்ற பழக்கங்கள் அவசியம் என கட்டுரை வலியுறுத்துகிறது.

நமது வாழ்க்கையில் நாம் அல்லும் பகலும் அயராது உழைத்து செல்வங்களை சோ்த்தாலும், பலர் அவரவர் உடல் நல ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. அதிலும் வயது ஆகஆக பல்வேறு நோய்கள் அழையா விருந்தாளியாக வந்து தங்கிவிடுகிறாா்கள்.

மேலும் 60 வயதிற்கு மேல் நமது உடல்நிலையில் பல்வேறு மாற்றங்கள் வந்து போகும். இப்போதெல்லாம் இதய நோய் என்பதெல்லாம் வயது பாா்த்து வருவதில்லை. யாருக்கு என்ன நோய் எப்போது வரும் என்ற விபரம் தொியாமலேயே நாட்கள் கடந்து செல்கின்றன. குறிப்பாக மனது ரிலாக்ஸாக இருப்பது நல்லது. அதோடு உணவு வகைகளில் கொஞ்சம் கவனமாக இருப்பதே உசிதம்.

வாய்க்கு ருசியாக உள்ளதே என ஒரு கட்டு கட்டிவிடவேண்டியது பின்னர் சுடுதண்ணீரை அருந்த வேண்டியது அல்லது சொிமான மாத்திரையை விழுங்க வேண்டியது. பொதுவாகவே அறுபது வயது வந்துவிட்டாலே நாம் எங்கும் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

காலை மாலை இருவேளையிலும் வாக்கிங் போகலாம். யோகா பயிற்சி நல்லது. மாலை வேலைகளில் நமது ஒத்த வயதுடையவர்களை அழைத்து பாா்க் போன்ற இடங்கள், நூலகங்கள் கோவில் இப்படி பயனுள்ள விஷயங்களில் ஈடுபாடு கொண்டு பொழுதைக்கழிக்கலாம். தொலைக்காட்சி மற்றும் அலைபேசியில் அதிக ஆர்வம் காட்டாமல் புத்தகங்கள் படிக்கலாம்.

நீண்ட ஆயுள்
நீண்ட ஆயுள்AI image

காலை 8 மணிக்கு டிபன் அளவோடு சாப்பிடலாம். அதன் பிறகு மருத்துவ குணங்கொண்டுள்ள ஐூஸ் மற்றும் தேநீா் அருந்தலாம். மருத்தவர் சொன்ன மருந்து மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

பின்னர் ஒரு குட்டித்தூக்கம். அதன் பிறகு மதியம் ஒரு மணிக்கு அளவிற்கு அளவான உணவுகளை சாப்பிடலாம். நாா்சத்துள்ள உணவுகள் கீரை, பழவகைகள் அவசியம் சோ்ப்பது நல்லது.

மலச்சிக்கல் இல்லாமல் பாா்த்துக்கொள்வது நல்லது மாலை புரோட்டீன் பவுடர், காபி, டீ அருந்தலாம்.

இதையும் படியுங்கள்:
உங்க வயசு 30-ஆ? அப்போ நீங்க 11,000 நாட்களை வீணாக்கிட்டீங்க.. இந்த உண்மையை படிங்க!
நீண்ட ஆயுள்

கொண்டைக்கடலை, பட்டானி சுண்டல் ஆயில் அதிகம் கலக்காத ஸ்நாக்ஸ் சத்துள்ள பழவகைகள் சாப்பிடலாம், அதேபோல இரவு ஏழரை மணிக்குள் இரவு டிபன் சாப்பிடவேண்டும். இட்லி, இடியாப்பம், எளிதில் ஜீரணமாகக்கூடியஉணவு வகைகளை சாப்பிவது நல்லது.

அதேபோல குடிநீா் நிறைய உட்கொள்ள வேண்டும். இனிப்பு புளிப்பு உவர்ப்பு துவர்ப்பு கசப்பு கலந்த மருத்துவ குணம் கொண்ட உணவுகளை சரியான அளவு சாப்பிட்டு வருவதே ஆரோக்கியம் தான். அதேபோல சனி நீராடுவது நல்லதே. இரவு நேரங்களில் தொலைக்காட்சி தொடர்கள் பாா்ப்பதை தவிா்ப்பது நல்லது.

தினசரி எட்டு மணி நேரமாவது தூங்குவது நல்ல பலன் தரும்.

அதிக கோபம் டென்சன் அமைதியின்மை அடுத்தவர் விஷயத்தில் தேவையில்லா தலையீடு அடுத்தவர்கள் சங்கடப்படும் அளவிற்கான அறிவுரைகளை சொல்லாதிருப்பது இவைகளையெல்லாம் குறைத்தாலே தேவையில்லாத வியாதிகள் வர வாய்ப்பில்லை.

கோவில்களுக்கு சென்று பிரார்த்தனைதான் முக்கியம் என்பதை தவிா்த்து வீட்டிலேயே பூஜை அறையில் விளக்கேற்றி வைத்தும் பகவான் ஸ்தோத்திரங்கள், நாமாவளிகளை பாராயணம் செய்யலாமே.

இதையும் படியுங்கள்:
தவறுகளை வாய்ப்புகளாக மாற்றும் கலை: மேதைகளின் பொன்மொழி ரகசியங்கள்!
நீண்ட ஆயுள்

மாலை வேலைகளில் பேரன் பேத்திகளோடு பயனுள்ள வகையில் பொழுதைக் கழிக்கலாம். மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரை மருந்துகளை நேரம் தவறாமல் சாப்பிட்டு உணவு வகைகளில் கட்டுப்பாடுகளுடன் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொண்டு அனைவரிடமும் அன்பு பாராட்டி டென்சன் இல்லாமல் ரிலாக்ஸ் ஆக வாழ்ந்து வந்தாலே நமது ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் நம் கையில்தான் கட்டுப்பாட்டுடன் இருக்கும் என்பதை உணர்வோமாக!

வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் எந்தவித தொந்தரவுகளுமின்றி நீண்ட காலம் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாகவும் மனநிறைவுடனும் வாழலாம்.

logo
Kalki Online
kalkionline.com