இன்றைய ஆண்கள் ஏன் பெண்கள் போல் சிந்திக்கிறார்கள்? ஓ அப்படியா விஷயம்!

Masculinity
Masculinity
Published on

இன்றைய சமுதாயத்தில், 'மஸ்குலினிட்டி' (Masculinity) அதாவது ஆண்மை என்று சொன்னால், அது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு விஷயம் என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ஆண்மை என்பது பெண்களை விட ஆண்களிடம் இயல்பாகவே அதிகமாகக் காணப்படும் ஒரு குணம். இன்றைய பெண்கள் கூட, "முன்பு இருந்த ஆண்கள் ஆண்மையுடன் இருந்தார்கள், ஆனால் இப்போது இருக்கும் ஆண்கள் அப்படி இல்லை" என்று கூறுகிறார்கள். இதில் எது உண்மை? இன்றைய ஆண்கள், ஆண்கள் போல் சிந்திக்காமல் ஏன் பெண்கள் போல் சிந்திக்க வைக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

ஆண்மை என்பது என்ன?

ஜாக் டொனாவன் (Jack Donovan) என்பவர் எழுதிய "The Way of Men" என்ற புத்தகத்தில், ஆண்மை என்பது ஆண்களின் வாழ்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறுகிறார். இதை ஆதிகால மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். ஆதிகாலத்தில் மனிதர்கள் சிறிய கூட்டமாக வாழ்ந்தார்கள். அந்த கூட்டத்தில், வேட்டையாடி உணவு கொண்டு வருவதும், அக்கூட்டத்தைப் பாதுகாப்பதும் போன்ற கடினமான வேலைகளை ஆண்களே செய்தார்கள். ஒரு ஆண், எந்த அளவிற்கு உணவையும் பாதுகாப்பையும் தருகிறானோ, அதை வைத்தே அவனுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டது.

ஆண்மையின் மூன்று முக்கிய பண்புகள்:

  1. ஸ்ட்ரென்த் (Strength): உடல் வலிமை. அதாவது ஓடுதல், வேட்டையாடுதல், சண்டையிடுதல் போன்ற உடல் சார்ந்த சக்தி.

  2. கரேஜ் (Courage): மன வலிமை. எத்தனை முறை தோற்றாலும், விழுந்தாலும், ஒரு நாய் சண்டையைப் போலப் பின்வாங்காமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும் தைரியம்.

  3. மாஸ்டரிங் (Mastering): நிபுணத்துவம். ஏதேனும் ஒரு விஷயத்தில், உதாரணமாக ஆயுதம் செய்வதிலோ அல்லது ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடிப்பதிலோ சிறந்தவராக இருப்பது.

இந்த மூன்று குணங்களும் இருக்கும் ஒருவனையே முழுமையான ஆண்மகனாக அன்று கருதினார்கள்.

இதையும் படியுங்கள்:
ஆண் குழந்தை, பெண் குழந்தை - பொம்மைகளில் ஏன் பாகுபாடு? இது சரியா?
Masculinity

இன்றைய சமுதாயம் ஆண்களை எப்படி மாற்றுகிறது?

இன்றைய தலைவர்களுக்கு, ஆண்கள் ஆண்கள் போல் சிந்திப்பது தேவையில்லை. அவர்களுக்குத் தைரியமான ஆண்கள் வேண்டாம். சமுதாயம் இப்போது, "ஆண்கள் ஆக்ரோஷமாகவோ கோபமாகவோ இருக்கக் கூடாது" என்று போதிக்கிறது. ஆதிகாலத்தில், கூட்டத்தைப் பாதுகாப்பதே ஆண்களின் முக்கிய வேலையாக இருந்தது. ஆனால், இன்று நாம் பெரிய சமுதாயமாக வாழ்கிறோம்; கடினமான வேலைகளும் இல்லை, சண்டையிடும் தேவையும் இல்லை.

  • வலிமை (Strength) இழந்தோம்: நமக்கு உணவு வேண்டுமானால், வேட்டையாடத் தேவையில்லை. போனில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வந்துவிடுகிறது. இதனால் உடல் வலிமையின் தேவை குறைந்துவிட்டது.

  • தைரியம் (Courage) இழந்தோம்: ஒரு பெண்ணிடம் தைரியமாகப் பேசி, அவர் நிராகரித்தாலும், அதைக் கடந்து செல்லும் மன வலிமை இன்று தேவையில்லை. அதற்குப் பதிலாக, வீட்டில் உட்கார்ந்துகொண்டே போலியான இணையதளங்கள் மூலம் பல பெண்களுடன் இருப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கிக் கொள்ள முடிகிறது.

  • நிபுணத்துவம் (Mastering) இழந்தோம்: இன்றைய பள்ளிகளும் கல்லூரிகளும் அறிவாளிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, கேள்வி கேட்காமல் கீழ்ப்படியும் வேலையாட்களையே உருவாக்குகின்றன. பிடித்த வேலையைச் செய்து அதில் சிறந்தவராக மாறுவதை விட, ஒரு கம்பெனியில் வேலை பார்த்துச் சம்பாதிப்பதே கெத்தாகப் பார்க்கப்படுகிறது. இதனால், ஆண்கள் தங்களுக்குப் பிடித்த விஷயத்தில் நிபுணத்துவம் அடைவது தடுக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆண் சிங்கங்களே! இது உங்களுக்கு... காதல் சீக்ரெட்ஸ்: அன்று முதல் இன்று வரை!
Masculinity

இன்றைய சமுதாயம் ஆண்களின் இந்த மூன்று முக்கிய பண்புகளையும் அவர்களிடம் இருந்து அழித்துவிட்டது. ஆனால், நாம் திரைப்படங்களில் வரும் கேங்ஸ்டர்களை ரசிக்கக் காரணம், அவர்களிடம் இந்த ஆண்மைக்கான குணங்கள் இருப்பதே ஆகும். உண்மையான ஆண்மை என்பது, ஜிம்மிற்குச் சென்று உடலை வலுவாக்கிக் கொள்வது, வாழ்க்கையில் தோல்விகள் வந்தாலும் பின்வாங்காமல் முயற்சிப்பது மற்றும் பிடித்த ஒரு துறையில் நிபுணத்துவம் பெறுவது ஆகியவையே ஆகும். ஆண்கள் இந்த மூன்று பண்புகளையும் வளர்த்துக்கொண்டால், அவர்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com