
உற்சாகமாக காத்திருக்கும் பணிகளை ஊக்கமுடன் செய்ய உதவும் மோட்டிவேஷனல் கோட்ஸ்!
வார இறுதி விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழித்த பின்பு புதிய வாரத்தின் தொடக்கமாக மலர்ந்திருக்கும் திங்கள் கிழமையை உற்சாகமாக எதிர்கொள்ளவும், காத்திருக்கும் பணிகளை ஊக்கமுடன் செய்யவும் உதவும் மோட்டிவேஷனல் quotes.
1. "தனக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை விட அதிகமாக வேலை செய்பவருக்கு விரைவில் அவர் செய்வதை விட அதிகமான கூலி கிடைக்கும்"
நெப்போலியன் ஹில்.
2. "வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களை செய்வதில்லை; அவர்கள் விஷயங்களை வித்தியாசமாக செய்கிறார்கள்.
ஷிவ் கரோ.
3. "முன்னேறிச் செல்வதற்கான ரகசியம் அதைத் தொடங்குவதில்தான் இருக்கிறது"
மார்க் ட்வைன்.
4. "நல்ல நேரம் வரும் என்று காத்திருக்காதீர்கள். உங்களிடம் இருப்பவற்றைக் கொண்டு இப்போதே வேலையை ஆரம்பியுங்கள். காலம் செல்லச் செல்ல சிறந்தவை உங்களைத் தேடி வரும்.
நெப்போலியன் ஹில்.
5. நாம் நம்முடைய கனவுகள் அத்தனையும் நிஜமாக்க முடியும், அவற்றை பின் தொடரும் தைரியம் நமக்கு இருந்தால்.
வால்ட் டிஸ்னி.
6. சிறந்த அரிய வேலையை செய்வதற்கான ஒரே வழி, செய்யும் வேலையை நேசிப்பதுதான்
ஸ்டீவ் ஜாப்ஸ்.
7. வெற்றி என்பது இறுதியானது அல்ல, தோல்வி என்பது ஆபத்தானதும் அல்ல, ஒரு செயலை தொடர்வதற்கான தைரியமே முக்கியம்.
வின்ஸ்டன் சர்ச்சில்.
8. எதிர்காலத்தை கணிக்க சிறந்த வழி அதை உருவாக்குவதே
பீட்டர் டிரெக்கர்.
9. உங்கள் செயல்கள் மற்றவர்களை மேலும் கனவு காணவும், மேலும் கற்றுக்கொள்ளவும், மேலும் செயல்படவும், மேலும் பலரையும் தூண்டினால் நீங்கள்தான் சிறந்த தலைவர்.
ஜான் குயின்சி ஆடம்ஸ்.
10. வெற்றிக்கான பாதையும் தோல்விக்கான பாதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.
கோலின் ஆர் டேவிஸ்.
11. வெற்றிபெற உங்கள் இதயம் உங்கள் தொழிலிலும் உங்கள் வணிகம் உங்கள் இதயத்திலும் இருக்க வேண்டும்.
தாமஸ் ஜே வாட்சன்
12. எதிர்மறை எண்ணம் கொண்ட மனிதர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் சிரமத்தைக் காண்கிறார். நேர்மறை எண்ணம் கொண்ட மனிதர்கள் ஒவ்வொரு சிரமத்திலும் வாய்ப்புகளை காண்கிறார்.
வின்ஸ்டன் சர்ச்சில்
13. வாய்ப்புகள் ஒருபோதும் நிகழ்வதில்லை. நீங்கள் தான் அதை உருவாக்க வேண்டும்.
க்ரிஸ் கிராஸர்.
14. பொறுமை விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவை வெற்றிக்கு வெல்ல முடியாத கலவையை உருவாக்குகின்றன.
நெப்போலியன் ஹில்.
15. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நான் என்னையே கேட்டுக் கொள்ளும் கேள்வி என்னவென்றால் நான் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியத்தை செய்கிறேனா என்பதுதான்.
மார்க் ஜூக்கர்பெர்க்.
16. மனித மனத்தால் எதை எண்ணவும் நம்பவும் முடிகிறதோ, அதை உறுதியாக அடையவும் முடியும்.
நெப்போலியன் ஹில்
17. உந்துதல் என்பது நெருப்பை போன்றது. நீங்கள் அதில் தொடர்ந்து எரிபொருளை சேர்க்காவிட்டால் அது இறந்துவிடும். உங்கள் உள் மதிப்புகள் மீதான உங்கள் நம்பிக்கையே உங்கள் எரிபொருள்.
ஷிவ் கெரோ.
18. பாதகமான சூழ்நிலைகளில் சிலர் உடைந்து போகிறார்கள்; சிலர் சாதனைகளை முறியடிக்கிறார்கள்.
ஷிவ் கெரோ.
19. ஒவ்வொரு பிரச்னையிலும் அதன் சொந்தத் தீர்வு க்கான விதைகள் உள்ளன. உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றால் எந்த விதைகளும் கிடைக்காது.
நார்மல் வின்சென்ட் பீல்
20. உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள்; உங்கள் உலகத்தையே மாற்றுவீர்கள்
நார்மல் வின்சென்ட் பீல்