
மனித வாழ்க்கையில் பணம் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளது.
பணமே வாழ்க்கை, பணம்தான் பிரதானம் எனநினைத்து, அது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழ்பவர்களும் இருக்கிறாா்கள்.இருப்பதைக்கொண்டு பிரச்சணை இல்லாமல் வாழலாம் என திருப்தியோடு வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறாா்கள்.
பணம் பல வழிகளிலும் வரும். உழைப்பின் மூலமாக வருவதே நிரந்தரம். உழைப்பின் மூலம் வரும் பணம் நிலைத்து நிற்கும்.
உழைப்பில்லாமல் வரும் பணம் பல வகைகளில் நமக்கு சந்தோஷம் கொடுத்தாலும், அது சில நேரம் நம்மை படுகுழியில் தள்ளிவிடும்.
சிலர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் குடும்ப உறவுகளை சரிவர கவனிக்காமல் போவதும் உண்டு. பணம் பத்தும் செய்யும், என்பதுபோல பல நல்ல பண்புகளையும் கொடுப்பதோடு வசதியையும் கொடுக்கும்.
அதை சரிவர கையாளாமல் போகும்போது, அது நமக்கு சில இன்னல்களையும் கொடுத்துவிடும். நம்மிடம் நமது உழைப்பின் மூலம் அபரிமிதமான பணம் வரும்போது அதை எப்படி செலவு செய்வது என்ற நிலைபாடுகளை நாம் செய்யத்தவறக்கூடாது.
நம்மிடம் நிறைய பணம் இருக்கும்போது பல நட்புகள், சொந்தங்கள் வந்து ஒட்டிக்கொள்வாா்கள். அவர்கள் உங்களிடம் கேட்கும் உதவியைச்செய்து கொடுத்துவிட்டால் உங்களை அளவுக்கு அதிகமமாக பாராட்டுவாா்கள். உழைத்து முன்னேறி உள்ளான் ,நல்ல மனது உள்ளவன், என்றெல்லாம் புகழ்ந்து தள்ளுவாா்கள்.
அதே நேரம் அவர்கள் கேட்ட உதவியை நீங்கள் செய்யாமல் போனால் வேறுமாதிாியாகவும் பேசுவாா்கள்.புதுப்பணக்காரன், இவனுக்கு பணம் வந்துது எப்படி என தொியாதா? என கேவலமாக பேசுவதும் உலக இயல்பு.
ஆக பணம் சந்தோஷம் கொடுக்கிறது என நினைக்கும்போது அதுவே சங்கடத்தையும் கொடுத்து விடுகிறது, என்பதை நாம் உணரவேண்டும். பணம் வரும்போது அதை சேமிக்கத்தொியாதவனே முட்டாள்.
அதே நேரம் பணம், பணம் என்று அலைபவனோ குடும்பத்தையும் மறந்து அதுதான் சந்தோஷம் என அலைகிறான்.
பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. குடும்பத்தில் தாய், தந்தையர், மனைவி, மக்கள் என அனைவரையும் கவனிக்க வேண்டும்.
பணம் அதிகமாக வரும்போது நம்மிடம் ஊதாாித்தனம் வந்துவிடும். அதைக்கட்டுப்படுத்தத் தவறியவனே பின்னா் அந்த பணத்தால் சந்தோஷத்தைத் தொலைக்கிறான்.
பணம் நரகத்தை சொா்க்கமாக்கும், நரகத்தை சொா்க்கமாக்கும். அதை உணர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனம். பணத்தை கையாள்வதில் பலர் கோட்டை விடுவதும்உண்டு.
பணமே பிரதானம் என அதையே நினைத்து அலைகிறவனும் அதை சரிவர கையாளத் தொியாதவர்களும் கடைசியில் சங்கடங்களையே சொந்தமாக்கிக்கொள்கிறாா்கள்.
அதற்காக பணம் இல்லாமல் வாழமுடியாது, அதுவே தொடர் சந்தோஷம் தராது, என்பதை உணர்ந்து செயல்படுவதே சிறப்பான ஒன்று. அது இல்லாதபோது நம்மை யாரும் மதிக்கமாட்டாா்கள் தான், ஆனால் அதை சம்பாதிப்பதுஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்க்கைத்தேரை இழுக்கக்கூடாது.
பணம் வரும்போது நல்ல சிந்தனையும் நிதானமும் நமக்கான பொிய சொத்து. நோ்மையான வழியில் பணத்தை சம்பாதிப்பதே நமக்கும், நம் குடும்பத்திற்கும் நம் சந்ததிகளுக்கும், நாம் சோ்த்து வைக்கும் பொிய பொக்கிஷம்.
அனோனின் என்ற அறஞர் தனது கருத்தாக "பணம் சந்தோஷமளிக்கும்; ஆனால், பணம் மட்டுமே சந்தோஷமாகிவிடாது" என கூறியுள்ளாா் எனவே பணம் மட்டுமே சந்தோஷமல்ல. குடும்பத்தை சரிவர கவனிப்பதும், பொியோ்களை மதிப்பதும், ஒழுக்கமாய் நடந்து கொள்வதும், அதற்கு மேலாக நிதானம் கடைபிடித்து இறை வழிபாடு தொடர்ந்து மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் அனைவரையும் அனுசரித்து வாழ்வதே சந்தோஷமாகும். பணம் வரும் போகும், அதனால் நிம்மதியை வெளியேற்றாமல் நிதானமான வாழ்வை வாழ்ந்து பாருங்கள் அதுவே சாலச்சிறந்தது!