நாள் முழுவதும் சோர்வா? காலையில் இந்த 1 பழக்கத்தை மாற்றிப் பாருங்கள்!

அமைதியான மனநிலையையும் நாள் முழுமைக்குமான சுறுசுறுப்பையும் தரும் எளிய காலை நேரப் பழக்கவழக்கங்கள்.
காலை பழக்கங்கள்
காலை பழக்கங்கள்Gemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

ஒரு நாளைத் தொடங்குவது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அந்த நாள் நன்றாக அமைவது என்பது நம் செயலில் தான் உள்ளது. நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவும், சந்தோஷமாகக் கழியவும் எப்போதும் நல்ல எண்ணங்களோடு இருக்க வேண்டும். நல்ல எண்ணங்களோடு உற்சாகமாகத் தொடங்கும் நாட்கள் எப்பொழுதும் நல்லதாகவே முடியும்.

ஒவ்வொரு நாளும் இனிய நாளாகவும் ஆற்றல் நிறைந்ததாகவும் அமைவதற்கு காலையில் செய்யும் சில எளிய பழக்கவழக்கங்கள் பெரிதும் உதவுகின்றன. ஒவ்வொரு நாளும் அன்றைய நாளை நேர்மறையாகத் தொடங்குவதற்கு சில சிறந்த வழிகள் உள்ளன.

காலையில் சீக்கிரம் எழுந்தவுடன் இரு உள்ளங்கைகளையும் தேய்த்துப் பார்த்து, "இந்த நாள் எனக்கு ஒரு சிறந்த நாள்" என்று நேர்மறையான எண்ணங்களுடன் இறைவனை மனதில் தியானித்து நாளைத் தொடங்குங்கள்.

காலையில் எழுந்த முதல் ஒருமணி நேரம் மொபைல் அல்லது டிவி பார்க்காமல், செய்தித்தாள்களில் வரும் எதிர்மறை செய்திகளைப் படிக்காமல் தவிர்ப்பது மனதை அமைதியாக வைத்திருக்க உதவும்.

காலையில் எழுந்ததும் தினமும் 20 நிமிடங்கள் எளிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வது, தியானம் செய்வது என நம் மனதிற்கு பிடித்த எதை வேண்டுமானாலும் சிறிது நேரம் ஒதுக்கி செய்யலாம். இது உடலுக்கும் மனதிற்கும் நாள் முழுமைக்குமான தேவையான ஆற்றலைத்தரும்.

இவை நம் உடம்பை கட்டுக்கோப்பாக வைப்பதுடன், உடல் எடையையும் கட்டுக்குள் வைக்க உதவும். மேலும் உடலில் உள்ள ஹார்மோன் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தி மகிழ்ச்சிக்கு காரணமான ஹார்மோன்கள் வெளிப்பட்டு நம்மை நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்பட வைக்கும்.

காலை பழக்கங்கள்
காலை பழக்கங்கள்Gemini image

காலை உணவு ஆற்றலின் எரிபொருள் என்பதை மறக்கவேண்டாம். நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கக் கூடிய உணவு இது. எனவே காலை உணவை அவசர அவசரமாக எடுத்துக் கொள்ளாமல், அமைதியாக அமர்ந்து ரசித்து, ருசித்து சாப்பிடலாம். சாப்பிடும் பொழுது குறிப்பாக மொபைல் அல்லது டிவி பார்ப்பதை தவிர்த்துவிடுவதும் நாள் முழுவதும் சுறுசுறுப்பையும் தேவையான ஆற்றலையும் தரும்.

இதையும் படியுங்கள்:
அடிக்கடி நோய் வருதா? உங்கள் எண்ணங்களில் மறைந்திருக்கும் ரகசியம்!
காலை பழக்கங்கள்

இன்றைய நாள் நல்லபடியாக அமையும் என்ற நேர்மறையான எண்ணத்துடன் இருப்பதும், மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் நம் மகிழ்ச்சிக்கு நாமே பொறுப்பு என்பதை உணர்ந்து எதிர்மறையான சூழ்நிலைகளையும் நபர்களையும் விலக்கி வைக்கவும்.

இன்று செய்யவேண்டிய முக்கியமான வேலைகளை டைரி அல்லது மொபைல் நோட்ஸில் பட்டியலிட தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்கும். மேலும் எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வலுப்படுத்தும். கவனம் முழுவதும் வேலையில் இருக்க வைக்கும். இதனால் நம்முடைய இலக்கை அடைவதற்கு தீவிரமாக முயற்சி செய்வோம்.

தேவையற்ற வீண் அரட்டை, வேலைகளைத் தள்ளிப்போடும் பழக்கம் இல்லாமல் சரியாக முடித்து காட்டுவோம். முக்கியமாக எந்த செயலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், எவ்வளவு நேரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற தெளிவும் பிறக்கும். இதன் மூலம் நேரத்தை சரியாக நிர்வகிக்கக் கற்றுக்கொள்வோம்.

வாழ்க்கையில் சாதித்த பெரும்பாலான மனிதர்கள் காலையில் எழுந்ததும் தங்கள் நாளை நேர்மறையாக வழிநடத்திச் சென்றவர்கள்தான். ஒரு நாளினுடைய முதல் இரண்டு மணி நேரங்களை நாம் எப்படி செலவிடுகிறோம் என்பதைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமைகிறது என்பதுதான் உண்மை.

இதையும் படியுங்கள்:
நாள் முழுவதும் ஒரே சுறுசுறுப்பு! உங்கள் ஆற்றலை உயர்த்தும் எளிய பழக்கங்கள்!
காலை பழக்கங்கள்

காலையில் உற்சாகமான ஆற்றலுடன் எழுந்துகொள்வது, செயல்களை ஒழுங்குப்படுத்தி செய்வது இவை எல்லாம் அந்த நாளை சிறப்பாக்கும். இப்படி சில நல்ல பழக்க வழக்கங்கள் நாள் முழுவதும் நம்மை நல்ல மூடுடன் வைத்திருக்க உதவி செய்யும். அத்துடன் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் காலையில் இன்முகத்துடன் பழகுவதும் அந்த நாளை மிகவும் அழகாக்கும்.

காலையில் விழித்ததும் செய்யும் சில எளிய மாற்றங்கள் காலை பழக்கங்கள் மூலமாக நாள் முழுவதும் பதற்றமின்றி, அதிக ஆற்றலுடனும் நேர்மறை மனநிலையுடனும் செயல்பட முடியும்.

logo
Kalki Online
kalkionline.com