
காலையில் எழுந்ததும் எத்தனை பேருக்கு போனை பார்க்கும் பழக்கம் இருக்கிறது? இதுவே, உலகில் தலைசிறந்த மிகவும் பிரபலமான நபர்களாக விளங்குபவர்கள் தங்கள் காலை பொழுதை எப்படி தொடங்குவார்கள் என்று தெரியுமா? அவர்கள் காலை எழுந்ததும் முதலில் செய்யும் பயனுள்ள பழக்கங்கள் எப்படி அவர்கள் நாளை ஆற்றல் மிகுந்ததாகவும், உற்சாகமாகவும் மாற்றுகிறது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. ஆப்பிள் சிஇஓ டிம் குக்
ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் காலையில் 3.45 மணிக்கு எழுந்திருப்பார். அப்போது முதலே அவர் நாளைத் தொடங்கி விடுவாராம். அவர் காலை வேளையை தனது ஈ மெயில்களுக்கு பதில் அளிப்பதில் செலவிடுவார். பயனாளர்களின் ஃபீட்பாக்கிற்கு (feedback) பதில் கொடுப்பது மற்றும் அன்றைய நாளை திட்டமிடுவதில் செலவிடுவார்.
2. விப்ரோ ஓப்ரா
அமெரிக்க சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே காலையில் எழுந்து தியானம் செய்வார். மனநிறைவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். 20 நிமிடங்கள் தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவருக்கு மனத்தெளிவு மற்றும் உணர்வு சமநிலை ஏற்பட இது காரணமாகிறது.
3. தி ராக்
நடிகர் மற்றும் முன்னாள் மல்யுத்த வீரராக தி ராக் என்ற டிவேனா ஜான்சன் அதிகாலையில் எழுந்து கடும் உடற்பயிற்சி செய்வார். அவர் எடைப் பயிற்சி, கார்டியோ மற்றும் ஸ்ட்ரெசிங்குகள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அது அவருக்கு ஆற்றலையும், அதிக திறன்களையும் வளர்க்க உதவும்.
4. வாரன் பப்ஃபட்
முதலீட்டாளரும் பில்லனியரான வாரன் பப்பட் காலையில் செய்தித் தாள்கள் வாசிப்பதிலும், புத்தகங்கள் படிப்பதிலும் பொருளாதார அறிக்கைகளை பார்வையிடுவதிலும் நேரத்தை செலவிடுகிறார். அவர் நீண்ட கால வெற்றிக்குப் தொடர்ந்து கற்பது தான் முக்கியம் என்று கருதுகிறார்.
5. எலன் மஸ்க்
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெக்சாசின் சிஇஓ எலான் மஸ்க் அவருடைய அட்டவணையை முறையாகக் கடைப்பிடிப்பவர். இவர் தனது நாளை காலையில் தான் திட்டமிடுகிறார். இதற்கு சில நிமிடங்களே எடுத்துக் கொண்டாலும், அந்த நாளை திறனுள்ளதாக மாற்ற என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கிறார்.
6. மிச்சேல் ஒபாமா
மிச்சேல் ஒபாமா முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணியாவார். இவர் தனது காலை நேரத்தை ஊட்டச் சத்துக்கள் நிறைந்த காலை உணவுடன் தொடங்குகிறார். அதில் அதிக புரதச்சத்தும், நார்ச்சத்தும் இருக்கும். இது நாள் முழுவதும் கவனம் செலுத்தவும் ஆற்றல் அளவை பராமரிக்கவும் உதவுகிறது.
7. பில் கேட்ஸ்
பில் கேட்ஸ் காலையில் ஒரு மணிநேரம் ட்ரெட் மில்லில் செலவிடுவதில் துவங்குகிறார். தனது ஜிம்மில் உடற்பயிற்சியை கல்வி வீடியோக்களை பார்த்துக் கொண்டே துவங்குகிறார். இதனால் அவரது மூளை சுறுசுறுப்பு அடைகிறது என்று அறிக்கைகள் கூறுகின்றன.
8. இந்திரா நூயி
முன்னாள் பெப்சி சிஇஓ இந்திரா நூயி அதிகாலை 4 மணிக்கு எழுகிறார். இவர் காலையில் சமூக தளங்களில் நேரம் செலவிடுவதில்லை.
9. ஜெஃப் பிசோ
அமேசானின் நிறுவனரான ஜெஃப் பிசோ காலையில் அமைதியாகவும் அதே நேரத்தில் திறன்மிக்க காலை பழக்கங்களை மேற்கொள்கிறார். இவர் அலாரம் இல்லாமல் எழுந்து கடும் சவாலான வேலைகளுக்கு 10 முதல் 12 மணி வரை முன்னுரிமை கொடுக்கிறார்.
10. சுந்தர் பிச்சை
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தன் காலையை மெதுவாகவும், அமைதியாகவும் துவங்குகிறார். இவர் தனது நாளை செய்தி வாசிப்பதில் துவங்குகிறார்.