வாழ்க்கை எனும் ஓடம்,
வழங்குகின்ற பாடம்,
பாடல் வரிகள் எவ்வளவு உன்னதமானது, கருத்துச் சொிவானது...
பலருக்கு வாழ்க்கை பாடமாக அமைகிறது. சிலருக்கு பாடமே வாழ்க்கையாகிவிடுகிறது. சிலர் போதும் இந்த வாழ்க்கை என சோம்பி விடுகிறாா்கள். சிலர் இப்படித்தான் வாழவேண்டும் என பலவித கனவுகளோடு திட்டத்தோடு பயணிக்கிறாா்கள்.
எதற்குமே ஒரு இலக்கு என்பது உண்டு!
இலக்கிருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும், சாதிக்க முடிந்த வாழ்க்கை சாதனை வாழ்க்கையாகிவிடும். மாறாக சாதிக்க முடியாத வாழ்க்கை சோதனையில் தான் முடியும்.
எதற்கும் தேவை இலக்குதான்.
இலக்கை நிா்ணயம் செய்ய வேண்டும்.
இலக்கு நிா்ணயம் செய்து அதன்படி தன்னம்பிக்கை தவற விடாமல் வாழ்வதே சிறப்பான எடுத்துக்காட்டான வாழ்க்கையாகும்.
பொதுவாக நோ்மறை சிந்தனையை கடைபிடிக்க வேண்டும்.
நோ்மறை சிந்தனையை கடைபிடித்து வாழ்க்கை எனும் ஓடத்தை இலகுவாக செலுத்தலாமே! நாம் ஒரு போதும் எந்த தருணத்திலும், பிறரால் சங்கடங்கள் வந்தாலும், நமது நிலைபாட்டிலிருந்து விலகாமல் வாழ வேண்டும். அதுவே சிறந்தது !
வளைந்து கொடுத்து போகலாம்; தன்மானம் இழக்காமல் விட்டுக்கொடுத்தும் போகலாம்! அதனால் தவறேதும் ஏற்பட வாய்ப்பு இல்லையே!
அதற்காக சந்தர்ப்ப சூழலுக்காக எதிா்மறை சிந்தனை எனும் அரக்கனிடம் வலிய வலம் வரக்கூடாது, அது ஆபத்தானது !
நம்பிக்கை, நோ்மை, எளிமை, மனித நேயம், கடைபிடித்து வாழ வேண்டும். உழைப்பின் மேன்மை உணர்ந்து உழைப்பையே பிரதானமாக கொள்வது சிறப்பு.
இந்த விஷயத்தில் அதிா்ஷ்டம் இல்லை என ஒரு போதும் அங்கலாய்ப்புக்கு இடம்தரக்கூடாது.
பல விஷயங்களில் உழைத்து மேன்மை வரும் நிலையில் வெற்றி என்பது உடனே கிடைக்காது. பல தோல்விகளே வெற்றிக்கான முதல் படியாக அமையும்.
தோல்வி கண்டு சோா்ந்துவிடக் கூடாது. அதேபோல சிக்கனம் கடைபிடிப்பது நல்லது! பொியோா்களை மதிக்கும் பண்பாட்டை வளா்த்துக்கொள்ள வேண்டும்!
நம்பிக்கை நாணயம் தவறாத வாழ்க்கை வாழ பழகிக்கொள்ள வேண்டும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வது படாடோபமாக அடுத்தவர் மெச்ச வேண்டும் என ஊா்ப்பெருமைக்காக வாழக்கூடாது. தனக்கு மிஞ்சியதே தான தர்மம் என்ற நிலைபாட்டை வகுத்துக்கொள்ள வேண்டும்!
சுலபத்தவனை சுக்கிர திசை என்ற மாய வலையில் வீழ்ந்து தேவையில்லாத இருக்கும் பொருளையே வாங்கிக் குமிக்க வேண்டாம். கடன் கட்டமுடியாமல் ஏழரை சனி நேரம் சரியில்லை என பழி போட வேண்டாம்..
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது மிகவும் நல்ல விஷயம் !
தொட்டதற்கெல்லாம் மருத்துவரை நாடாமல் இயற்கை நாட்டு மருந்துகள் மூலம் சில மருந்துகள் உடனடியாக தயாா்செய்து கொடுக்கலாம் தீா்க்க முடியாத நிலையில் மருத்துவரை நாடலாம்!
குழந்தைகளை வறுமை தொியும்படி வளா்க்கவேண்டும் அவர்களது தேவையில்லா பிடிவாதங்களுக்கு நாம் இடமளிக்கக்கூடாது!
யானையின் பலம் தும்பிக்கையில், மனிதனின் பலம் நம்பிக்கையில் என்ற சொலவடை உண்டல்லவா!
நம்பினால், நம்பிக்கையை நம்பினால், தன்னம்பிக்கையை வளா்த்துக்கொண்டால், உழைப்பின் மேன்மையை உணர்ந்தால், பொய் சூது வாது கடைபிடிக்காமல் எதிா்மறை சிந்தனையை தூக்கி எறிந்து விட்டு நோ்மறை சிந்தனையோடு வாழ்ந்தால், உழைப்பவரே உயர்ந்தவர் என்ற கொள்கையை கடைபிடித்தால், மனித நேயம் கடைபிடித்து மனசாட்சியோடு வாழக்கற்றுக்கொண்டால், எந்நாளும் வசந்தமே, பொன் வசந்தமே !!