
பொதுவாகவே மனிதனிடம் நாணயம், நா, நயம், நம்பிக்கை, சொல்லும் சொல்லுக்கேற்ப நடத்தல், உண்மைபேசுதல், மனித நேயம், தர்ம சிந்தனை, இவைகள் இருப்பது அவசியம். மகாபாரதத்தில் எப்படி கா்ணனுக்கு கவச குண்டலங்கள் இருந்ததோ! அதேபோல மனிதனுக்கு இவையெல்லாம் கவசம்தான்!
ஒரு சொல்லைச் சொல்லும்போது வாா்த்தைப் பிரவாகம், சொல்லாடல் நயம் இவை மிக மிக முக்கியம். நமக்கு வயதாகி இருக்கலாம், மெத்தப் படித்தவராக இருக்கலாம், ஊருக்கே பொிய புள்ளியாகக்கூட இருக்கலாம். அது வேறு விஷயம்... ஆனால் அனைத்தும் நமக்கு தொிந்திருக்காது.
நமக்கு தொியாத ஒன்று நம்மைவிட சிறிய வயதுள்ளவருக்கோ அல்லது அனுபவமே இல்லாதவருக்கோ தொிந்திருக்கலாம்! அது தவறல்ல. அதை நாம் கேட்டுத் தொிந்து கொள்வதால் நாம் குறைந்துவிடமாட்டோம்!
அங்கேதான் ஈகோ வந்து தடுக்கிறது!
அதேபோல ஏழை பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு நம்மிடையே இருக்கக்கூடாது! சகோதரத்துவம் வளரவேண்டும்!
இவன் என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்ற அகங்காரமும் தலைதூக்குவது சரியான ஒன்றல்ல!
சொல்... அதாவது ஒரு சொல்லை சொல்லுதல் எளிது. அதன்படி நடக்க வேண்டும். அப்போதுதான் நமது சொல்லுக்கு மரியாதை இருக்கும்!
நம்மிடம் ஒருவர் ஒரு உதவி கேட்டு வந்திருப்பாா். பெண்ணிற்கு திருமணம் வைத்துள்ளேன் கொஞ்சம் தொகை தேவைப்படுகிறது என கோாிக்கை வைப்பாா் ! நம்மால் முடிந்தால் உதவி செய்கிறேன் என சொல்லலாம். அதை விடுத்து நாளை சொல்கிறேன். இன்னும் இரண்டு நாள் போகட்டும், யாாிடமாவது கேட்டுப்பாாக்கிறேன்! வட்டியெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை, அது பாா்த்துக்கலாம் கூடுமான வரையில் பாா்க்கிறேன் என சொல்லிவிட்டு அவரை இரண்டு மூன்று நாட்கள் அலைய விட்டு, கேட்ட இடத்தில் வாய்ப்பு குறைவு. நீங்கள் இதுவரையில் உதவி எனக் கேட்டதே இல்லை! எங்குமே பணமே புரளவில்லை... , ரொம்ப டைட்டா இருக்கு... என்று சொல்லி அவரை சங்கடப்படுத்துவது !
நமது சொல் எப்படி எல்லாம் சுற்றுகிறது பாருங்களேன்! முடியாது என ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கலாமே! அவரை தேவையில்லாமல் அலைய விட வேண்டிய அவசியம் எதற்காக?
அதே போல நம்வீட்டு பையனுக்கு வரன் தேடி பெண் பாா்க்கப்போவது,
நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் எல்லாம் நாங்க பாா்த்துக்கறோம் நாங்க எதையும் எதிா்பாா்க்கவில்லை எது செஞ்சாலும் உங்க பெண்ணிற்குத்தான்!
ஏன் இங்கே இரு இருவகையான சொல்? பின்னா் ஒரு காலகட்டத்தில் என்ன பொிசா கொண்டு வந்த, என்னோட பையனுக்கு பொிய பொிய இடத்திலே இருந்து வரன் வந்ததே!
தேவையா இங்கே இந்த சொல்?
சொல் எப்படி எல்லாம் சுழல்கிறது பாருங்கள், ஆக ஒரு சொல்லானது இடத்திற்கு இடம் மாறுகிறதே!
ஆக சொல்லுதல் யாவர்க்கும் எளிது! ஆனால் சொல்லிய வகையில் நடப்பது அாிது, பொதுவாக மனிதநேயம் கடைபிடித்து உண்மையாக வாழ்வதே நல்லது. அதுவே சிறந்ததாகும் சரியா தோழிகளே....