Gen Z இளைஞர்களே! கோழி மிதித்து குஞ்சு சாகுமா?

Motivation
Motivation
Published on

'கோழி மிதித்து குஞ்சு சாகுமா?' மிக அருமையான பழமொழி இது. ஏன் பூனையோ அல்லது மாடோ அல்லது வேறு எதுவோ மிதித்து குஞ்சு சாகுமா? என்று சொல்லப்பட வில்லை? யோசித்து பார்த்தீர்களா Gen z இளைஞர்களே?

நம்முடைய முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு பழமொழியின் அர்த்தமும் விலை மதிப்பற்றது. சரி இப்போது விஷயத்திறகு வருவோம். ஏன் அப்படி சொன்னார்கள், கோழி மிதித்து குஞ்சு சாகுமா... என்று?

இதற்கு அர்த்தம் கோழியானது தன் குஞ்சை மிதித்தால் அது இறந்து போய் விடுமா என்பதல்ல. இன்னும் சற்று ஆழமாக சிந்தித்தால் இந்த வசனத்தின் பொருள் மிகத் தெளிவாக நமக்கு புரியும்.

அதாவது தாய்க் கோழியானது முட்டை இட்ட பிறகு தன் கால்களை அதன் மேல் வைத்து உட்கார்ந்து கொண்டு அடை காக்கும். அவ்வாறு அது முட்டையை அடை காத்தால்தான் முட்டைக்குள் இருக்கும் கருவானது உடைந்து அதிலிருந்து அழகான குஞ்சு வெளியே வரும். அப்படி அந்த தாய்க் கோழி அந்த முட்டைகளை அடை காக்காவிட்டால் என்னவாகும்??

முட்டைகளை யாராவது ஆம்லேட்டாகவோ அல்லது boil பண்ணியோ சாப்பிட்டு போய் விடுவார்கள்... இல்லை என்றால் இரண்டு மூன்று நாட்களில் முட்டை தானாகவே அழுகி விடும். பிறகு குப்பைத் தொட்டியில் கிடக்கும். அந்த தாய்க் கோழி முட்டை மேல் உட்காரவில்லை என்றால் முட்டையின் கதி இது தான்.

பாருங்கள் Gen z இளைஞர்களே! இந்த தத்துவத்தை தான் நம் முன்னோர்கள் எத்தனை அழகாக கூறி இருக்கிறார்கள். தாய் மிதித்தால் குஞ்சு சாகாது மாறாக புத்துயிர் பெறும் என்பது தான் இந்த பழமொழியின் கருத்து.

இக்காலத்து Gen Z இளைஞர்களுக்கு, பெற்றோர்கள் அவர்களுக்கு எடுத்து சொன்னாலே கோபம் வருகிறது. பத்தாம் வகுப்பு முடிந்து பதினொன்றில் நுழையும் போதே அவர்கள் இனி பெற்றோர்கள் எங்கள் பின்னால் நிற்க கூடாது என்கிறார்கள். இளைஞர்களே, நீங்கள் ஒரு நிலையில் நல்ல பதவியில் அமரும் வரை உங்கள் பெற்றோர்கள் உங்கள் பின்னால் இருந்தால் தான் நீங்கள் உங்கள் இலக்கை அடைய முடியும்.

இல்லை என்றால் முட்டையின் நிலை போல் உங்களின் வாழ்வும் சீரழிந்து விடும். பெற்றோர்கள் உங்களின் பின்னாலிருப்பதால் உங்களின் வாழ்வு மென்மேலும் மேம்படுமே தவிர ஒரு போதும் வீணாகாது. நீங்கள் ஏன் அவர்களின் அறிவுரைகளை பாரமாக கருதுகிறீர்கள்.

இதையும் படியுங்கள்:
ஓவர் நைட்டில் மில்லினியர் ஆன இருவரின் வியக்க வைக்கும் நிஜங்கள்!
Motivation

பாரமாக கருதினால் நஷ்டம் உங்களுக்கு தான். பெற்றோர்களுக்கு ஒன்றுமில்லை. அவர்கள் உங்கள் பின்னாலிருப்பது இன்று கஷ்டமாகத் தோன்றலாம். ஆனால், நீங்கள் அவர்களின் அறிவுரையை இப்போது நிராகரித்தால் பிற்காலத்தில் பெற்றோர்களை தவிர மற்ற எல்லோரிடமும் கெட்ட பெயரையும், வீண் பேச்சையும் கேட்க வேண்டி இருக்கும்.

Gen z இளைஞர்களே, எப்படி முட்டையிலிருந்து அழகான குஞ்சு வெளியேறுகிறதோ அதைப் போல உங்களுக்கும் ஒரு அழகான ஒளிமயமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றால், தயவு செய்து பெற்றோர்களின் அறிவுரைக்கு கட்டுபட்டு நடந்து கொள்ளுங்கள். பெற்றோர்களின் அறிவுரைகளை புறக்கணிக்காதீர்கள்.

இதையும் படியுங்கள்:
சிரிப்பில் இத்தனை வகைகளா? அடடா… இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Motivation

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com