
மகிழ்ச்சியாக வாழ்வது என்பது தனி மனிதரிடம்தான் உள்ளது. இந்த போட்டிகள் நிறைந்த வெகு வேகமாக நகரும் சூழ்நிலையில் தனி மனிதரின் வாழ்க்கை அவரிடம் மட்டுமே இல்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். விரும்பியோ, விரும்பாமலோ தனி மனிதர் வாழ்வதற்கு பிறரை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொருவரும் இருக்கின்றோம். காலத்தின் கட்டாயம். பெரும்பாலும் தள்ளிப்போட முடியாத சூழ்நிலை.
அப்படிப்பட்ட நிலையில் தனி மனிதர் அடுத்தவரின் உதவியை நாடுவது, அடுத்தவருக்கு உதவுவது போன்றவை நடைப்பெற்றுக் கொண்டுதான் இருக்கும்.
எனவே தனிப்பட்ட நபர் தன் இஷ்டப்படி பிறர் நடக்க வேண்டும், தன் விருப்படி.பிறர் பேச, உரையாட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. கையில் 5 விரல்களும் ஒரே மாதிரி இருக்காது. இருந்தால் எதற்கும் பயன்படாது. உபயோகிக்க முடியாது.
அதே மாதிரி ஒவ்வொரு தனி நபரும் மற்றவரிடமிருந்து வேறு; பட்டு இருப்பது இயற்கையின் நியதி. எனவே தனி நபர்களின் குணாதிசயங்களும் வேறுபட்டுதான் இருக்கும். அப்படிபட்ட சூழ்நிலையில் மகிழ்வான வாழ்க்கை வாழ தனிபட்ட நபர் பிறரிடமிருந்து எதிர்பார்ப்பதை தவிர்க்க பழகிக்கொள்வது அவசியம் ஆகின்றது.
மேலும், எதிர்பார்த்தது கிட்டாமல் போனால் அதனால் ஏற்படும் ஏமாற்றத்தை (disappointment) தாங்கிக் கொண்டு கடந்து செல்லவும் (over come) கட்டாயமாக பழகிக்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் மகிழ்ச்சியை அடைவதற்கு பதிலாக மனதில் குழப்பிக் கொண்டு அதில் இருந்து விடுபட அதிக நேரம் தியாகம் செய்யவேண்டிய நிலைமைக்கு தள்ளப் பட்டு தவிக்க வேண்டியிருக்கும்.
மகிழ்வுடன் வாழ தனி நபரின் சக்தி (strength) குறித்து அறிந்து இருக்கவேண்டும். தேவைக்கு ஏற்ப அதை பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.
அதை விட மிக முக்கியமானது அந்த தனி நபர் அவருடைய இயலாமை, குறைபாடுகள் பற்றி புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். (Weaknesses/ limitations / short comings). இந்த அம்சம்கள் குறித்து அறிந்து வைத்து இருப்பது இன்றைய கால கட்டத்தில் மிகவும் அத்தியாவசியம்.
ஆசைப்படுவது தவறு இல்லை. ஆசைப்பட வேண்டும். ஆனால் நம்மால் முடியுமா என்பதை பற்றி அறிய பலத்தை விட, பலவீனங்கள் குறித்த விழிப்புணர்ச்சி (Awarness) அற்புதங்களுக்கு வழி வகுக்கும். மகிழ்வாக வாழ எண்ணும் தனி நபர் தன்னை மேம்படுத்திக் கொள்ள, அவரது குறைபாடுகள் குறித்த விழுப்புணர்ச்சி பெரிதும் உதவும்.
எனவே மகிழ்சியாக வாழ நினைக்கும் தனி நபர், பிற நபர்களுடன் நட்ப்புடன் பழகி, தேவையற்ற விவாதங்களை தவிர்த்து, அவரது சுயபலத்தை மேம்படுத்தி, குறைபாடுகளை குறைத்துக் கொண்டு, திறமைக்கு அதிகமானவற்றில் ஆசைகள் படாமல், தன்னம்பிக்கையோடு முயற்சியை கை விடாமல் இருந்தால் மகிழ்வோடு வாழ்வது அவர் கையில். இதுவும் சாத்தியம்.