'நிலவுத் தாய்' நிகர் ஷாஜி: கல்விக்குக் கைகொடுத்த பெருமைமிகு விஞ்ஞானி!

Donate 8 lakhs to the school
Shaji with Tenkasi District Collector Kamal Kishore
Published on

விண்வெளியில் இந்தியாவின் புகழை உயர்த்தும் இஸ்ரோவின் (ISRO) நட்சத்திர விஞ்ஞானி அவர். தமிழ் மண்ணின் மகள்; செங்கோட்டையைச் சேர்ந்த நிகர் ஷாஜி!

தான் இன்று அடைந்திருக்கும் இந்த உயரத்திற்கு அடித்தளமிட்ட பள்ளியை அவர் மறக்கவில்லை.

தான் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்ற அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 8 லட்சம் ரொக்கப் பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். 

பள்ளியில் புதியதாகக் கட்டப்பட்ட கட்டிடத்தையும் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து திறந்து வைத்த இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களுக்குப் பெருமையையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நிகர் ஷாஜியின் உன்னத செயல்

கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவின் முக்கிய திட்டங்களில் பணியாற்றி வருகிறார் நிகர் ஷாஜி. 

சந்திரயான் போன்ற பல முக்கியப் பணிகளில் அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. இந்த நிலையில், தான் பயின்ற செங்கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் மேம்பாட்டுக்காகவே அவர் இந்த நிதியுதவியை அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
அணுகுமுறையை மாற்று: மாயா ஏஞ்சலோவின் வெற்றிக்கான மந்திரம்!
Donate 8 lakhs to the school

கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவிகள் விண்வெளித்துறையில் சாதிக்க வேண்டும் என்பதே அவரது முக்கிய நோக்கம். 

தான் வளர்ந்த மண்ணையும், தனக்குக் கல்வி அளித்த பள்ளியையும் மறக்காத அவரது இந்தச் செயல், அப்பகுதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. 

அவரது இந்த உன்னதப் பண்பு, அரசுப் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ரூ. 24 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடத் திறப்பு

விஞ்ஞானி நிகர் ஷாஜியின் ரூ. 8 லட்சம் நன்கொடையின் மூலம் மற்றும் இதர நிதியுதவியுடன் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியில் புதிய கட்டிடம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. 

இந்தக் கட்டிடம் மாணவர்களின் கல்விச் சூழலை மேலும் மேம்படுத்தும் எனப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. அதில் நிகர் ஷாஜி அவர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அவர்களுடன் இணைந்து ரிப்பன் வெட்டி கட்டிடத்தை முறைப்படி திறந்து வைத்தார். பள்ளி மாணவிகள் உற்சாகமாக முழக்கமிட்டு அவரை வரவேற்றனர்.

மாணவர்களுக்கு ஓர் உத்வேகம்

இந்தச் செய்தி, செங்கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தற்போது பயிலும் இளம் மாணவிகளுக்கு ஒரு மிகப் பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. 

இதையும் படியுங்கள்:
நீங்க ராஜா மாதிரி வாழணுமா? இந்த '48 விதி' ஃபாலோ பண்ணா போதும்!
Donate 8 lakhs to the school

ஒரு சாதாரண அரசுப் பள்ளியில் படித்த பெண்மணியும் தேசத்தின் மிகப் பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் முக்கியப் பங்காற்ற முடியும் என்பதை நிரூபிக்கும் நிகழ்வு இது. 

நிகர் ஷாஜி போன்ற ஆளுமைகள், எதிர்கால இந்தியாவை உருவாக்கும் பல பெண் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com