
இயற்கை எல்லோருக்கும் தினந்தோறும் அளிக்கின்ற வரப்பிரசாதம் நேரம்.
அந்த பொன்னான நேரத்தை புத்திசாலிகள் முழுவதும் பயனுள்ளதாக உபயோகித்து அதிகப்படியான பலனை அடைகிறார்கள்.
அவ்வாறு முழுமையாக உபயோகிக்க தெரியாமல் இருக்கும் நேரத்தை வீணடித்து வருந்துபவர்களும் இந்த உலகத்தில் இருக்கின்றனர்.
நேரம் பொன்னானது என்று பலரும் கேள்விபட்டு இருப்பார்கள். ஆம், நேரம் விலை மதிப்பற்றது. அது யாருக்காகவும், எதற்காகவும், எப்பொழுதும் காத்துக்கொண்டுயிருப்பது இல்லை.
அதை பிடிக்கவும் முடியாது. நிறுத்த முடியாது. கட்டுப்படுத்த முடியாது. போனால் திரும்பி வரவே வராதது. நகர்ந்துக் கொண்டேயிருக்கும். வலிமை மிக்கது.
தவறவிட்டு தவிக்கும்பொழுது சம்பந்தப்பட்டவர்களுக்கு அதன் வீரியம் புலப்படும், புரியும். சில காரணத்தினால் சிறிது தாமதமாக வந்து ரயில், விமானம் இவற்றை மிஸ் செய்து விட்டு தவிப்பவர்களுக்கு புரியும் நேரத்தின் வலிமை, சக்தி.
நேரத்தை கட்டுப்படுத்த முடியாது. நேரம்தான் நம்பளை கட்டுப் படுத்துக்கின்றது. (One cannot control or manage time. Infact time controls people)
நேரம் ஒரு அரிய பொக்கிஷம் (rare treasure) எல்லோருக்கும் பாகுபாடு இல்லாமல் ஒரேமாதிரி நேரத்தை உபயோகித்து பயன்பெற அளிக்கின்றது. அதற்கு இந்த ஓரவஞ்சனை (no discrimination) கிடையாது, தெரியாது.
புத்திசாலி, அதன் பலனை சரிவர உபயோகிப்பது மூலம் அதிகமாக பெற்று அனுபவிக்கிறான். சோம்பேறி அலட்சியத்தின் காரணமாக பொன்னான நேரத்தை மட்டும் இழக்காமல், இழந்த நேரத்தில் பெற்றுயிருக்க வேண்டிய பலனையும் துறந்து தவிக்கிறான். வருந்துகிறான்.
நேரம் நமக்காக எதிரே காத்துக்கொண்டு இருக்கு என்பதை அறிந்தும் அதை சரிவர பயன்படுத்தாமல் வீணடிப்பவர்கள், விலை மதிக்க முடியாத, திரும்பி வர முடியாத சந்தர்ப்பத்தை நழுவவிடுவது இந்த வேகம், போட்டிகள் மிக்க வாழ்க்கை சூழ்நிலையில் மன்னிக்க முடியாத ஒன்றாக கருத்தப்படுகின்றது.
இருக்கும் நேரத்தை முழுவதுமாக திறமையாக பயன்படுத்தி வீண் அடிக்காமல் திட்டமிட்டு செயல்படுத்துபவர்கள் அதிக பட்ச பலன்களை பெறவும், தொடர்ந்து பெறவும் முடியும். கால தாமதம் செய்தால் அதன் பலனை (negative result) அனுபவிக்க வேண்டியதுதான்.
நேரம் திரும்பி பார்ப்பதற்குள் காணாமல் போய் விடுவதால் தனிப்பட்ட நபர் அதன் பெருமை, அருமை அறிந்து நேரத்தை சரிவர பயன்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டியது அவரவர் முக்கிய கடமை ஆகின்றது.
காலத்தோடு போட்டிப் போட்டுக்கொண்டு நகர வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு இழக்கும் நேரத்தின் முக்கியத்துவம் சரிவர புரியும்.
நேரத்தின் அருமை அறிந்து செயல் படுபவர்கள் அதிகப் பட்ச பலன்களை (optimum, maximum results) அறுவடை (reap benefits) செய்து வாழ்க்கையில் மகிழ்வோடு முன்னேறுகிறார்கள்.