வெற்றி வேண்டுமா! 60 என்ற எண்ணைப் பின்பற்றுங்கள்...

Want to win!
Motivation articles
Published on

வெற்றி என்ற வார்த்தை அனைவருக்கும் பிடிக்கும். சிலர் விடாமல் முயற்சி செய்து அந்த இலக்கை அடைந்தே திர வேண்டும் என்ற வெறியோடு பாடுபட்டு உழைத்து அந்த இடத்தை அடைவார்கள். சிலர் பாதி வழியில் சென்று பின்வாங்குவார்கள். அந்த வகையில் நாம் எப்பேர்பட்ட வெற்றியையும் அடைய பின்பற்ற வேண்டிய 6 பழக்கவழக்கங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்

1. சமூக வலைதள கட்டுப்பாடு 

முதலில் எழுதுவதற்கு மட்டுமே அதிகம் பயன்பட்ட பெருவிரல் தற்போது செல்போனைத் தொடுவதற்கு அதிகம் பயன்படுகிறது. செல்போன் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ள சூழலில், வெற்றி என்ற எண்ணத்தையே மறக்கடிக்க செய்கிறது. ஆகையால் ஒரு நாளைக்கு 60 நிமிடங்களுக்கு மேல் சமூக வலைதளத்தை பார்க்கக் கூடாது என்ற கட்டுப்பாடை மனதிற்குள் நினைத்து விடாப்பிடியாக பின்பற்றினால் வெற்றிப்பாதையை எளிதில் அடையலாம்.

2. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுதல் 

நமக்குத் தெரியாத ஏதாவது ஒரு புது விஷயத்தை தினசரி 60 நிமிடங்கள் ஒதுக்கி கற்றுக்கொள்ள  முயற்சி செய்ய வேண்டும். இந்தப் பழக்கம் நமது ஆற்றலை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. அதோடு நாளுக்கு நாள் நமது அறிவுக்கு புதிய வேலைகளை கொடுப்பது மிகவும் அவசியம். மேலும் நாம் கற்றுக்கொள்ளும் புதிய விஷயங்கள் நமது வெற்றிக்கு பக்க பலமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஜாஜென் மூலம் உண்மையை நீயே கண்டுபிடி!
Want to win!

3. தவறாத உடற்பயிற்சி 

மனம், உடல் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் 60 நிமிடங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இந்தப் பழக்கம் ஏனைய அனைத்து வேலைகளையும் புத்துணர்ச்சியுடன் செய்வதற்கு மிகவும் துணை புரியும். ஆகையால் நமது வெற்றிப் பாதைக்கு இந்த பழக்கம் உறுதுணையாக இருக்கும்.

4. தியானம் 

மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மனச் சஞ்சலங்களில் இருந்து விடுபடவும், உளவியல் ரீதியான பிரச்னைகளில் இருந்து மனதை விடுபட்டு ஒரு நிலைப்படுத்த, தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்யும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பழக்கம் மனதிற்கு தெளிவு கொடுத்து வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்யும். 

5. புத்தகம் வாசிப்பது

மூளை சுறுசுறுப்புக்கும், புத்துணர்ச்சியோடு இருப்பதற்கும் தினசரி 10 பக்கங்கள் மட்டுமாவது புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை  கடைபிடிக்க வேண்டும். இது வெற்றியடைவதற்கு வேண்டிய புரிதலை ஏற்படுத்தும் ஒரு நல்ல பழக்கமாகும்.

6. தூக்கம்

இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை வரையிலான 8 மணி நேரம் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அன்றைய நாளுக்கான சிறந்த ஆற்றலை வழங்குகிறது. ஆதலால் மூளை சுறுசுறுப்பாக இயங்கி வெற்றிக்கான திறனை வழங்குகிறது. 

இதையும் படியுங்கள்:
விரும்பியதை செய்ய முயற்சியுங்கள் வெற்றி நமதே!
Want to win!

இந்த ஆறு பழக்கவழக்கங்களை 60 நாட்கள் கடைபிடித்தால்  வாழ்வில் பெரிய மாற்றத்தை அடைந்து, இதன் மூலம் வெற்றி என்ற இலக்கை மிக எளிதில் அடைவீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com