

வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் உதிக்கும் இடத்தில்தான், கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். அது எப்போதும் நேர்மறை எண்ணங்களின் விழிப்புணர்வு செயல்திறன் பற்றிய ஆக்கப் பூர்வமான முன்னேற்ற சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கும்.
அதுபோல் அவர்கள் செயலாற்றும்போது, எந்த இடத்திலும் தாங்கள் முடங்கி விடக் கூடாது, முயன்று கொண்டே இருக்க வேண்டும் என்ற தாரக மந்திரம் அவர்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும், தங்களால் முடியும் என்ற நம்பிக்கை மனதோடு.
மனம் தளராமல் நம்பிக்கை வைத்து செயலாற்றும் பாதைக்கு, ஒளிக்கீற்றுதான் தன்னம்பிக்கை. அதனால் மனம் கலங்காது முன்னேற்றப் படிகளை முத்தமிட்டு முன்னேறுங்கள். காலம் எப்போது யாருக்காகவும் மாறாது. உழைக்கும் வர்க்கத்தின் மீது கவனம் செலுத்தும். சோம்பேறிகளிடம் கடந்து செல்லும். காலம் உனக்கானது என்று நினைத்து கடமை ஆற்றுங்கள்.
இந்த உலகம் வியப்பானது புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஏனெனில் நீங்கள் செயலாற்றும்போது, ஆயிரம் தாழ்வுமனப்பான்மை அகராதிகளைச் எடுத்துக்காட்டு சொல்லி உங்களை கீழ்மை படுத்துவார்கள். கவலைப்படாதே, உனக்குள் ஆயிரம் திறமை இருக்கு, துணிந்து செயலாற்றி வென்று வா என்று நேர்மறை எண்ணங்கள் சொல்ல ஒருவர் முன்வர மாட்டார்கள். ஆகையால் விழித்திரு; விழுந்தாலும் எழுந்து முன்னேறுங்கள்.
அதாவது ஓடினா நீ விழுந்துடுவ என சொல்ல ஆயிரம் பேர் வரிசைகட்டி நிற்ப்பாங்க. ஆனால் பாசிட்டிவ்வா உங்களை விழுந்திடாம ஓடு என்று சொல்ல நல்ல மனம் கொண்டவர்கள் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். இதுதான் நம் கண்களுக்கு தெரியும் உலகம். இது இந்த யுகத்தின் மாற்றங்கள்.
அர்த்தமுள்ள வாழ்க்கையை தேடுதல் கூடாது. அது எப்போதும் உங்கள் வாழ்க்கையோடு சுவாசமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட எண்ணம் உங்களிடம் இல்லை என்றால், இப்போது, இந்த நிமிடத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். தங்கத்தில் செய்த பேனா அழகாக இருக்கலாம். அதனுள் எழுதும் மசி இல்லை என்றால் அது உபயோகப் படாது. அதுபோல்தான் நீங்கள் பயணிக்கும் அர்த்தமற்ற வாழ்க்கையும், உணருங்கள்.
அர்த்தமுள்ள வாழ்க்கையில், ஒரு பொது கண்ணோட்டம் இருக்கும். அதில் நோக்கம் பிரதானமாக இருக்கும். அந்த நோக்கத்தின் பார்வை, தன்நலன் மற்றும் பொது நலன் சார்ந்து இருக்கும். புதுப் புது விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், சுறுசுறுப்பாக இயங்கவும் வைக்கும். உங்கள் எதிர்கால கனவுகளுக்கு வழி அமைத்து கொடுக்கும். மொத்தத்தில் மன நிறைவையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். எனவே அர்த்தமுள்ள வாழ்க்கையை ஆட்கொள்ளுங்கள்.
அர்த்தமுள்ள வாழ்க்கை உங்கள் கனவுகளின் வெற்றிக்கு மகுடம் சூட்டும். உங்களின் வாழ்க்கையில் வியப்பூட்டும் வகையில் மாற்றங்கள் காணச்செய்யும். நேர்மறை சிந்தனைகளை சிந்திக்கவும், செயலாபடுத்தவும் தூண்டு கோலாக இருக்கும்.
உலகம் வேகமாக இயங்குகிறது. அதற்கு இணையாக நீங்களும் வேகமாக செல்வது அவசியம். விவேகம் என்னும் அர்த்தமுள்ள வாழ்க்கை சிறகுகளை பக்குவமாக விரித்து செல்லுங்கள்.
உங்கள் கடந்த கால வாழ்க்கை வேறு விதமாக பயணித்து இருக்கலாம், மறந்துவிடுங்கள். இன்று முதல் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மாறுங்கள். அதுதான் உங்கள் வாழ்க்கையில் ஞான ஒளி ஏற்றி, பிரகாசமான நிலைக்கு மாற்றும். நிலையான வாழ்வைத் தரும்!