
வாழ்க்கையில் எது எப்போது நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. அப்போது பாபு - கோபு படித்து கொண்டு இருந்தார்கள். பாபு அண்ணன். கோபு தம்பி. பாபு கல்லூரியில் படித்து வந்தார். கோபு +1 படித்து வந்தார். அவர்கள் வாழ்வில் சுனாமி வந்தது. ஆம். அப்பா, அம்மா கோயிலுக்கு போய் கொண்டிருந்தார்கள்.
'போதை’ யில் இருந்தவன் ஓட்டிச் சென்ற லாரி இருவர் மீதும் பயங்கரமாக மோதி வீசி எறிந்து விட்டது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மிகவும் சோகமான விஷயம். இந்த விபத்தை பற்றி கேட்ட பாபு-கோபு பயங்கர துக்கத்தில் மூழ்கினார்கள். பயங்கர ஷாக். பேரதிர்ச்சி.
பாபு தனது பொறுப்பை உணர்ந்தார். கோபுவை தான் தான் படிக்க வைக்க வேண்டும் என்று உணர்ந்தார். ஒரு மாதம் சரியாக சாப்பிட வில்லை, சரியாக தூங்க வில்லை.
பாபு கோபுவிடம் "இன்று முதல் வகுப்பிற்கு செல்" என்று சொன்னார்.
“ சரி பாபு! உன் டிகிரி? “
“இல்லை. நான் படிப்பை நிறுத்த போகிறேன். நீ நன்கு படித்து, பெரிய வேலையில் சேர்ந்து என்னை காப்பாற்று! “
“ அப்போ இப்போது எப்படி சாப்பிடுவது? “
“ கோபு, அப்பா வங்கியில் கொஞ்சம் பணம் மட்டுமே வைத்து இருக்கிறார். அதை நம்பி நாம் இருக்க முடியாது! “
“ அப்போ..பணம்? “
“ நீ இது பற்றி எல்லாம் கவலை பட வேண்டாம். நீ டிகிரி முடித்து மேல் படிப்பு படிக்க வேண்டும். இது தான் உன் உள்ளே ஓட வேண்டும்! “
கோபு +2 க்ளாசுக்கு போக ஆரம்பித்தார். பாபு தான் இருந்த பகுதியில் காலை எல்லா வீட்டிற்கும் பால் மற்றும் பேப்பர் விநியோகம் செய்ய ஆரம்பித்தார். காலை 4 மணிக்கு எழுந்து சென்றால் காலை 7 மணிக்கு தான் வேலை முடியும். அப்பா வைத்து இருந்த ஸ்கூட்டி தான் பாபுவிற்கு வரபிரசாதமாக இருந்தது.
பின்னர் தனது வீட்டிற்கு அருகிலேயே இருந்த லெதர் தொழிற்சாலையில் சூப்பர் வைசர் பணியில் சேர்ந்தார். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை. பிறகு வீட்டிற்கு வந்து குளித்து விட்டு சமையல் செய்வார்.
கோபு உதவிக்கு வந்தால், கோபத்துடன் “போய் நல்லா படி! “ என்று பதில் சொல்லி விடுவார். காலை மற்றும் மதியம் இருவரும் கையேந்தி பவன் தான். தினமும் கோபுவிற்கு ₹ 50 கை செலவுக்கு கொடுத்து விடுவார். கோபு மனதில் வருத்தம். நல்லா படித்து கொண்டு இருந்த பாபு படிப்பை துறந்து வேலைக்கு செல்வது வருந்த தக்கதாக இருந்தது.
இந்த வருடம் +2 பொது தேர்வு. எனவே, பாபு அடிக்கடி இதை கோபுவிற்கு நினைவு படுத்தினார். +2 வில் கோபு 90% வாங்கினார். பாபுவுக்கு ரொம்ப சந்தோஷம். நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டும். கோபு AI செயற்கை நுண்ணறிவு பாடம் படிக்க விரும்பினார். நல்ல செலக்ஷன்.
அவர் விரும்பிய அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பாபு, கோபு கல்லூரிக்கு போக இருப்பதால், தான் சேமிப்பு செய்த பணத்தில் மூன்று பேண்ட் ஐந்து ஷர்ட் வாங்கி தந்தார். கோபு ஒரு விண்ணப்பம் வைத்தார். அதாவது மாலையில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுக்கிறேன் என்று சொன்னார்.
“கோபு, பணம் பற்றி நீ யோசிக்காதே! முடிந்தால் முதல் மாணவனாக வர முயற்சி செய்! “
கோபு பாபுவை கட்டி பிடித்து நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தார். நாட்கள் ஓடின. மாதங்கள் பறந்தன. வருடங்கள் நகர்ந்தன. கோபு மாநிலத்தில் முதல் மாணவனாக வந்து தங்க பதக்கம் வென்றார்.
பாபுவிற்கு இதற்கு மேல் என்ன வேண்டும்? பாபுவின் தியாகம் வீண் அல்ல! கோபு படித்து சாதித்து விட்டார். கோபுவுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.
இனி என்ன?
பாபு திரும்பவும் படிக்க தீர்மானம் செய்துவிட்டார்!