
உணர்ச்சிபூர்வமாக முடிவுகள் எடுக்கக் கூடாது. உங்கள் திறமை கண்ணெதிரே இருக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றைப் பரிசீலித்து சாத்தியமாகக்கூடிய உறுதி மொழிகளை எடுங்கள். இல்லாவிட்டால் சில நாட்களிலேயே ஆர்வம் இழந்துவிடுவீர்கள்.
கனவுக்கும் நிஜத்துக்கும் இடையே இருப்பது நம் உழைப்பு மட்டும்தான். நாம் எதையும் செய்யாமல் இருந்தால் நம் வாழ்க்கை மாறவே போவதில்லை என்பதை உணரவேண்டும். சரியான தருணம் அடுத்த மாதம் அடுத்த ஆண்டோ வரும் என காத்திருக்காமல் இந்த நிமிடத்திலேயே உழைக்க தொடங்கி விடவேண்டும்.
நெருக்கமான நண்பர்களும், நேசிக்கும் உறவினர்களும் எதிர்மறையாக பேசலாம். உங்கள் மனமே கூட ஏகப்பட்ட சந்தேகங்களை எழுப்பும். புதிதாகவோ, வித்தியாசமாகவோ வாழ எதையாவது செய்ய நினைக்கும் எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்சனைதான் இது. மாற்றங்களை பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. அதன் வெளிப்பாடே வந்து இந்த தடைகளை எப்படியாவது தாண்டிவிடுங்கள்.
ஒரு செயலைப் புதிதாகச் செய்யும்போது ஆர்வமும் ஊக்கமும் அதிகமாக இருக்கும். ஆனால் பிரச்னைகளும் அந்த ஆர்வம் காணாமல் போய்விடும். சுய ஒழுக்கமும் மனஉறுதியும் மட்டுமே அந்த நேரத்தில் தேவைப்படும். அதை செய்து முடியும்போது கிடைக்கும் பலன்களைப் பற்றி நினைத்தால் இயல்பாக வெற்றியை நோக்கி முன்னேற முடியும்.
வழக்கமான விஷயங்களையே வழக்கம்போல செய்து கொண்டிருந்தால் வழக்கமான விளைவுகளே கிடைக்கும். வித்தியாசமாக செய்ய முனைப்பு காட்டுங்கள். அதுதான் வாழ்வை முன்னேற்ற மாற்றும் வழி.
எதையும் காது கொடுத்து கேட்க மாட்டேன் என இருந்து விடாதீர்கள். சில சமயங்களில் சிலர் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். கற்பனையான விஷயங்களை துரத்தாமல் நிஜங்களின் பின்னால் செல்லுங்கள்.
நீங்கள் செய்வது எதுவாக இருந்தாலும் அது பற்றி முழுமையாக அறிந்துகொள்ளுங்கள். அப்போது எடுத்த முடிவில் எந்த குழப்பமும் இருக்காது.
பழக்கமான இடமும் சூழலும் நமக்குப் பாதுகாப்பு தரும் என்பது உண்மைதான். ஆனால் அந்தப் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டாமல் நமக்கு புதிய வெற்றிகள் கிடைத்தாது. அறிமுகம் இல்லாத சூழல்களையும், வேலைகளையும் முழுமனதுடன் எதிர்கொள்ளும் துணிச்சலை பெறுங்கள்.
உங்கள் உறுதிமொழி தெளிவான விளக்கம் இலக்குகளுடன் இருக்கவேண்டும். வீடு கட்டுவது இலக்கு என்றால் எங்கே கட்டுவது? எவ்வளவு பட்ஜெட்? எப்போது முடிப்பது? பணத்துக்கு என்ன செய்வது? என்று எல்லாவற்றையும் முடிவு செய்து உறுதியாக இருங்கள். உங்கள் உறுதிமொழியில் அனைத்திலும் உறுதியாக இருந்தால் முன்னேறலாம்.
இந்தக் கனவை நிஜமாக்க நாம்தான் உழைக்க வேண்டும். இல்லாவிட்டால் அது வெறும் பகல் கனவாகவே போய்விடும்!
அதனால் பழைய விஷயங்களை உதறித்தள்ளி உறுதியாக இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.