

வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று. வெற்றி தோல்வி வரும், ஆனால் தோல்வி தொடராமல் இருக்கவேண்டும். அந்த சூட்சமம் நமது கையில்தான் உள்ளது.
வெற்றி பெற்றவர் தொடர்ந்து வெற்றியே பெற்று வந்தாலும், அவரைச்சுற்றி நிறையவே சவால்கள் காத்திருக்கும்.
அதேபோல தோல்வியாளர்களும் துவண்டுவிடாமல் இருக்க வேண்டும். எனினும் வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய ரகசியங்கள் நிறையவே உள்ளன இவைகளில் இருந்து பூரணத்துவம் பெற நமக்குள் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், இருந்தாலும், கூடவே அதிர்ஷ்டம் என நாம் சொன்னாலும், இறைவனின் பாா்வையில்லாமல் ஒரு துரும்பும் அசையாது என்பதே நிஜம். அதனில் நாம் வெற்றி எனும் பயிரை வளா்க்க தோல்வி எனும் களையை அகற்றவேண்டும். அதற்கு நாம் கடைபிடிக்க வேண்டிய ரகசியங்கள் சில உள்ளன.
யாரையும் வெறுக்கவேண்டாம்:
பொதுவாகவே நாம் யாரையும் வெறுக்காமல் மனமாச்சர்யங்களைக் கடந்து அன்பு, பாசம், நேசம், பந்தம் இவைகளை காட்டி வெறுப்புணர்வுகளுக்கு இடம் தராமல் வாழவேண்டும். அடுத்தவரிடம் வெறுப்பு மற்றும் கோபம் காட்டுவதால் நம்மை நாமே சரிபடுத்திக் கொள்ளவில்லை என்ற ஐயப்பாடே மேலோங்கும்.
எதைப்பற்றியும் கவலை வேண்டாம்:
தொட்ட காாியம் துலங்கவில்லை எதுவுமே கைகூடி வரவில்லை நான் எனது சொந்த பந்தங்களுக்கு எனது சக்தியை மீறி உதவி செய்தேன் அவர்கள் யாருமே எனக்கு எந்த உதவியுமே செய்யவில்லை என கவலைப்பட்டு, நாமும் தூங்காமல் நம்மை சாா்ந்தவர்களையும் தூங்கவிடாமல், நிம்மதி இல்லாமல், அனுதினமும் கவலைப்படாமல் தைரியமாக வாழக்கற்றுக் கொள்வதே சாலச்சிறந்தது.
குறைவாகவே எதிா்பாருங்கள்:
யாாிடமும் உங்களது இயலாமையை சொல்லாதீா்கள். பொதுவில் குடும்ப சம்பந்தமான முக்கியமான தகவல்களை யாாிடம் சொல்லலாம் என சீா்தூக்கிப் பாா்த்து அவர்களிடம் மட்டுமே அனைத்து விஷயங்களையும் பகிரலாம்.
யாராவது நமக்கு உதவி செய்வாா்களா என நினைக்கவே வேண்டாம். உலகம் யந்திர கதியில் சுழல்கிறது. அவரவர் வேலையே அவர்களுக்கு பாா்க்க நேரமில்லாதபோது அதிகமாக எதையும் எப்போதும் யாாிடமும் எதிா்பாா்க்க வேண்டாமே அதுவே அனைவருக்கும் நல்லது.
எப்போதும் சிாித்த முகத்துடன் இருங்கள்:
சிாிப்பும் மகிழ்ச்சியும் இறைவன் கட்டணமில்லாமல் நமக்கு தந்த பொிய பரிசு. அதை அனைவரிடமும் பழகும்போது கடைபிடியுங்கள்.
எதையும் சீாியசாக எடுத்துக்கொள்ளாமல் தூய சிந்தனை, நோ்மறை ஆற்றலோடு, சிாிப்பு எனும் அருமருந்தை கலந்துகொடுங்கள். பேசுங்கள், சிாித்த முகத்துடன் அனைவரையும் நேசியுங்கள் கோபம் தங்களிடம் தங்கவே தங்காது.
இறைவழிபாடு மறக்கவேண்டாம்:
எப்போதும் எந்த நேரத்திலும் இறைவன் வழிபாடு கடைபிடித்து எல்லாம் அவன் செயல் என அறநெறி கடைபிடித்து, தான தர்மங்கள் செய்து வாழந்து வருவதே நமக்கும் நமது சந்ததியர்களுக்கும் நல்லதாகும். ஆக மேலே சொன்ன அனைத்தையும் கடைபிடித்து வாழ்வதே நல்லது!