

ஒவ்வொருவரும் தன் மனதை தும்பை பூ மாதிரி வெள்ளை மனதுக்குள் தூய்மையான தங்கள் உள்ளத்தின் உணர்வுகளை வைத்து இருந்தால், வாழ்க்கையில் எல்லாமே நல்லதாக நடக்கும். இல்லையெனில் அந்த வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது மிகவும் கடினம்.
ஒருபோதும் வாழ்க்கையில் பணம் மட்டுமே ஒரு நல்ல வாழ்க்கையை கொடுத்துவிட முடியாது. நாம் நல்ல நிலையில் வாழ்வதற்கும் மற்றும் மற்றவர் மனதில் வாழ்வதற்கும் நல்ல குணம் இருக்கவேண்டும். அந்த நல்ல வாழ்க்கை அமையும்.
வாழ்க்கையில் சில சமயங்களில் நம்முடைய செயல்பாடுகளின் தன்மை அருகில் உள்ளவர்களின் பொறுத்து மாறுபடும். நல்ல சுறுசுறுப்பாக இருப்பவர்கள் நம் அருகில் இருந்தால், நம் மனம் பன்மடங்கு வலிமை பெற்று மெல்ல மெல்ல அவர்களின் சுறுசுறுப்பும் நம்முடன் சேர்ந்து கொண்டு, நம்மை உயர்த்தும்.
வாழ்க்கையில் ஒருபோதும் தேவை இல்லாமல் நம் பொன்னான நாட்களை வீணடிக்கும் சோம்பேறி மனம் கொண்டவர்களிடம் விலகியே இருங்கள். அவர்கள் உங்கள் பக்கத்தில் இருந்தால், அவர்களின் அந்த மந்தபுத்தி மெல்ல மெல்ல உங்களை தொற்றிக் கொள்ளும்.
வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல விதமாக பயணித்து வெற்றி இலக்கை தொடவேண்டும் ஏனெனில் உங்கள் அருகில் இருப்பது எப்படிபட்டவர்கள் என்பதை உணர்ந்து, பலமுறை யோசித்து, சேர்பவர்கள் தன்மை அறிந்துபழகுங்கள்.
தரமான தராசு மட்டும் ஒருவர் கையில் இருந்தால் மதிப்பு கூடி விடாது. அது தரமானவர்கள் கையில் இருக்க வேண்டும். மாறாக தரமற்றவர்கள் கையில் அது இருந்தால், அதன் மதிப்பு எடை கூடும் அல்லது குறையும்.
வாழ்க்கையில் ஒருபோதும் தன்னைப் பற்றிய எண்ணம், அடுத்தவர்கள் கணிப்பு எப்படி இருக்குமோ என்று கவலை படாமல் வாழப் பழகுங்கள். உங்களுடைய செயல் சரியாக இருந்தால், மற்றவர்களிடம் சரி செய்து வாழவேண்டிய அவசியம் இல்லை.
வாழ்க்கையில் ஒருபோதும் உலகில் உள்ள அனைவரும் நம்மை விரும்பும் வாழ்க்கை யாராலும் வாழ முடியாது. அப்படி நினைப்பதும் சரியான செயல் அல்ல. ஆனால் நம் மனசாட்சி ஒருநாளும், நம்மளை வெறுத்து விடாதபடி வாழ்ந்தால் போதும்.
வாழ்க்கையில் நீங்கள் செய்யும் தொழிலில், ஆரோக்கியமான போட்டி இருக்கலாம். ஒருபோதும் அதில் வன்மம் இருக்கக் கூடாது. அதேபோல் நீங்கள் செய்ய நினைக்கும் எந்த விஷயங்களும் உங்களுக்கு நன்மை தந்தாலும், அதுவே மற்றவர்களுக்கு பாதிக்கும் என்றால், அதனை செய்து பாவ மூட்டையை சுமக்காதீர்கள்.
வாழ்க்கையில் அந்த மாதிரி செயலை செய்வதற்கு ஒருபோதும் மனதில் இடம் கொடுக்காதீர்கள். அந்தத் தீமை உங்களுக்கு பூம்ராங் மாதிரி திரும்பி வந்தடைய வெகு நாட்களாகாது. அதனால் நீங்கள் என்ன செய்கிறோம் என்று யோசித்து செய்யுங்கள்.
உங்களுடைய எண்ணத்தில் தெளிவு இல்லாமல் இருந்தால், எந்த செயலும் நம்பிக்கை வைத்து செய்ய முடியாது. கலங்கிய கண்களில் பார்வை சரியாக தெரியுமா? தண்டவாளங்கள் அதன் தன்மை மாறினால், அதில் ரயில் பயணம் செய்ய முடியுமா?
வாழ்க்கையில் குழப்பமான மனநிலை தவிர்த்து, எப்போதும் தெளிவாக இருக்க பழகுங்கள். உங்கள் எண்ணங்களில் தெளிவு பிறந்தால், உங்கள் வாழ்க்கை வானவில் போன்று வண்ணமயமாக அமையும்!